பாக்கியலட்சுமி:இனியா காதலர் குடும்பம் பற்றி தெரிந்த உண்மை..அதிர்ச்சியில் ஈஸ்வரி..சந்தோஷத்தில் பாக்யா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 பிப்ரவரி 18ஆம் தேதிக்கான எபிசோடில் எதிர்பாராத மாற்றங்கள் நடந்திருக்கிறது. இனியாவின் காதலர் யார் என்ற உண்மை தெரிய வந்திருக்கிறது. அதே நேரத்தில் ஈஸ்வரி கோபத்தில் இருக்கிறார். ஆனால் பாக்கியா சந்தோஷமாக இருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாக்யா புதியதாக ரெஸ்டாரண்ட் தொடங்கி இருக்கும் நிலையில் அதற்கான திறப்பு விழா ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்போது எழிலிடம் பாக்கியா பேசிக் கொண்டிருக்கிறார். அதில் யாருக்கெல்லாம் நேரில் இன்விடேஷன் கொடுக்க வேண்டும், யாருக்கெல்லாம் போனில் சொன்னால் போதும் என்று பாக்கியா லிஸ்ட் போட்டு வேலை செய்து கொண்டிருக்கிறார்.

அதை பார்த்த கோபி ஈஸ்வரியிடம் பாக்யாவுக்கு எவ்வளவோ வேலை இருக்கு, ஆனாலும் எல்லா வேலையும் பர்பெக்டா பாக்குறா. பாக்கியா ரொம்ப கிரேட் என்று பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து அடுத்த நாள் ஈஸ்வரி ரெஸ்டாரண்ட் திறப்பு விழாவிற்கு எல்லோரும் வந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது இனியா செல்போனில் யாரிடமோ சாட்டிங் செய்து கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் செல்வி மற்றும் அமிர்தா இருவரும் பெரிய குத்துவிளக்கு ஒன்றை கஷ்டப்பட்டு தூக்கிக்கொண்டு வருகிறார்கள். ஆனால் அதை கூட கவனிக்காமல் இனியா செல்போனில் மூழ்கி இருப்பதை பார்த்து கஷ்டப்பட்டு கொண்டுட்டு வரோமே நீ ஹெல்ப் பண்ணக் கூடாதா என்று அமிர்தா கேட்க, அதற்கு செல்வி இங்க பாருங்க அமிர்தா, இப்போ உள்ள பசங்க எல்லாருக்கும் இதே பிரச்சனைதான் போல, விடுங்க என்று சமாதானம் செய்கிறார்.

பிறகு ஈஸ்வரி ரெஸ்டாரண்டுக்கு வருகிறார். பாக்கியா அவரை வரவேற்கிறார். அதைத் தொடர்ந்து இனியா தன்னுடைய காதலனுக்கு போன் செய்து ஏன் இன்னும் வரல என்று கேட்க, அதற்கு ஆகாஷ் கண்டிப்பா வரணுமா என்று கேட்கிறார். ஆனால் இனியா கண்டிப்பா வரணும் என்று மிரட்டியதால் உள்ளே வருகிறார்.
மொத்தமாக மாறிய பாக்கியலட்சுமி சீரியல் கோபி- பாக்கியா.. பக்கத்தில் யாரு பாருங்க! இது செமையா இருக்கு
அங்கு செல்வி ஆகாஷை பார்த்து என்னடா ஆகாஷ் இங்க வந்திருக்க காலையில் நான் உன்னை கூப்பிட்ட போது நீ வரல என்று சொன்ன என கேட்க, அதற்கு ஆகாஷ் பேசாமல் நிற்கிறார். பிறகு தான் ஆகாஷ் செல்வியின் மகன் என்பது எல்லோருக்கும் தெரிகிறது. அப்போது ஆகாஷ் கலெக்டருக்கு படித்துக் கொண்டிருப்பதாகவும் அதற்கு இத்தனை நாட்களாக உதவி செய்தது பாக்கியா தான் என்று செல்வி பெருமையாக சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அப்போ ஈஸ்வரி, பாக்யா என எல்லோரும் நல்லா படிச்சு கண்டிப்பா வேலைக்கு போகணும், உங்க அம்மாவ நல்லா பாத்துக்கணும் என்று அட்வைஸ் செய்கிறார்கள். அதைத் தொடர்ந்து ஈஸ்வரி ஜெனி மற்றும் செழியனிடம் நீங்க எப்போ வீட்டுக்கு வர போறீங்க? ஜெனி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் போது நீ வீட்டு விட்டு போனது அந்த குழந்தையும் பிறந்துடுச்சு நீ இன்னும் வீட்டுக்கு வரல என்று திட்டிக் கொண்டிருக்கிறார்.
அளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய பாக்கியலட்சுமி “கோபி”.. ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி
அப்போது கோபி விடுங்கமா இதை இப்ப இங்க வச்சு பேச வேண்டாம். நம்ம வீட்டில் போய் பேசிக்கலாம் என்று சொல்கிறார். அடுத்ததாக பாக்யா மைக்கில் பேசுகிறார். அப்போது நீ இப்படியெல்லாம் ஆகப் போற என்று சில வருடங்களுக்கு முன்பு யாராவது சொல்லி இருந்தால் நான் கண்டிப்பா சிரிச்சிருப்பேன். ஆனா என்னுடைய வாழ்க்கையில் நடந்த சில பிரச்சனைகளால் நான் எடுத்த முடிவு இன்று எனக்கு அடுத்தடுத்து வெற்றியை கொடுத்துக் கொண்டிருக்கிறது.

இப்போ நான் ரெண்டாவது ரெஸ்டாரன்ட் திறந்து இருக்கிறேன். இதற்கு என்னுடைய குடும்பத்தினர் எல்லாருடைய சப்போர்ட் மற்றும் என்னுடைய மருமகள்களின் சப்போர்ட் தான் காரணம் என்று பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார். பாக்கியா பேசுவதை பார்த்து கோபியும் சந்தோசமாக கை தட்டி பாக்கியாவை பாராட்டிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications