பாக்கியலட்சுமி: செல்வி வீட்டில் மாட்டிக்கொள்ளும் இனியா.. ஈஸ்வரி சொன்ன செய்தி.. கோபியின் மனமாற்றம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 பிப்ரவரி 19ஆம் தேதிக்கான எபிசோடில் இனியாவும் செல்வியின் மகன் ஆகாஷும் காதலிக்கும் விஷயத்தை இருவரும் மனப்பூர்வமாக பகிர்ந்து கொள்கிறார்கள். அதே நேரத்தில் செல்வி வீட்டிற்கு இனியா சென்ற நிலையில் அங்கு பிரச்சனை ஏற்படுகிறது.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாக்கியா தன்னுடைய ரெஸ்டாரண்டில் எழிலின் படப்பிடிப்பு விழாவில் அவர் பேசியதை டிவியில் ஓடவிட்டு இருக்கிறார். திரும்பத் திரும்ப அதுவே வந்து கொண்டிருப்பதால் செல்வி ரிமோட்டை எடுத்து மாற்றப் போகிறார். ஆனால் பாக்கியா அதை தடுத்து விடுகிறார்.

பிறகு அங்கு வரும் கஸ்டமரிடமும் அது தன்னுடைய மகன்தான். எனது பெயரை தான் படத்திற்கு வைத்திருக்கிறான் என்று பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார். அவரை பார்த்து செல்வி அக்கா கண்ணு பட்டுட போகுது என்று சொல்ல, அதற்கு பாக்கியா அதுவெல்லாம் இல்லை என்னுடைய மகன் பட்ட கஷ்டத்திற்கு இப்போதுதான் பலன் கிடைத்திருக்கிறது. அதை நான் பார்த்து சந்தோஷப்படணும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
இதை தொடர்ந்து ஈஸ்வரி கோபி இடமும் பாக்கியாவிடமும் பேச வேண்டும் என்று இருவரையும் அமர வைத்திருக்கிறார். அப்போது செழியன் ஜெனியின் அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என்று அங்கு போய்விட்டான். அங்கே ஆம்பள பிள்ளை இல்லை என்பதால் செழியன் அவர்களோடு இருக்க வைப்பதற்காக பிளான் பண்ணுறாங்க என்று சொல்ல, அதைக் கேட்டு பாக்கியா அதிர்ச்சி அடைகிறார்.
ஆனால் இப்படி எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை, நீங்கதான் தேவை இல்லாமல் கற்பனை பண்ணுறீங்க. அவங்க அப்படி பண்ண மாட்டாங்க. செழியனுக்கு எங்க இருக்க பிடிக்கிறதோ அங்கே இருக்கட்டும் என்று சொல்ல, உன் பிள்ளைக்கு மீது உனக்கு கொஞ்சம் கூட அக்கறை இல்லையா? அவனை உன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும் என்று நீ நினைக்க மாட்டியா என்று திட்டுகிறார்.

அதற்கு பாக்கியா நான் கண்டிப்பா அப்படி நினைக்க மாட்டேன். அவங்க அவங்க வாழ்க்கையை வாழனும். என் பிள்ளை என்பதற்காக நான் அவங்களை என்னுடைய கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்று நினைக்க கூடாது என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார். இதனால் பாக்கியா சொன்னதை ஏற்றுக் கொள்ள முடியாமல் கோபியிடம் அது பற்றி பேசுகிறார்.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.. சுந்தரி சீரியல் நடிகை கேப்ரில்லா பகிர்ந்த போட்டோஸ்..குவியும் வாழ்த்து
அதற்கு கோபி பாக்யா சொல்வது சரிதான். இப்போ அவங்க வளர்ந்துட்டாங்க அவங்களுக்கு நல்லது கெட்டது எல்லாம் தெரியுது. அவங்கள இழுத்து பிடிக்க பார்க்க வேண்டாம் என்று சொல்கிறார். மறுபக்கத்தில் இனியா ஆகாஷ் வீட்டிற்கு போகிறார். அங்கு ஆகாஷ் இனியாவை பார்த்ததும் முதலில் பயப்படுகிறார். யாராவது பார்த்தா தப்பா போயிடும் என்று சொல்ல, அதற்கு இனியா உனக்காக புத்தகத்தை தான் வாங்கிட்டு வந்தேன் வேற எதுவும் இல்லை என்று சொல்லி புத்தகத்தை கொடுக்கிறார்.
அதை வாங்கியதும் இந்த புத்தகம் வாங்குவதற்கு 2000, 3000 ஆகுமே நீ எதற்காக இவ்வளவு கஷ்டப்பட்ட? என்று ஆகாஷ் கேட்க, என்னுடைய அம்மா எனக்கு பாக்கெட் மணி கொடுத்ததில் தான் சேர்த்து வச்சு உனக்காக வாங்குனேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் செல்வி வீட்டிற்கு வருகிறார். இதனால் இனியா அங்கு ஒளிந்து கொள்கிறார். செல்வியை கண்டதும் ஆகாஷ் பயத்தில் நடுங்க என்ன நடந்தது என்று செல்வி விசாரிக்க ஆனால் ஆகாஷ் உண்மையை மறைத்து விடுகிறார்.

தான் போன் எடுக்க வந்ததாக செல்வி சொல்கிறார். பிறகு போனை எடுத்துவிட்டு கிளம்பி விடுகிறார். செல்வி போனதும் இனியா நாம ரெண்டு பேரும் காதலிக்கிறோம் என்று விஷயத்தை வீட்டில் எப்போ தான் சொல்லப் போறோம் என்று தெரியவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். பிறகு வீட்டிற்கு கிளம்புகிறார்.
விஜய் டிவி சீரியல் கதாநாயகனுக்கு தலையில் நடந்த விபரீதம்..இப்படியா பண்ணுவாங்க? வெளியான வீடியோ
இறுதியாக எழில் வீட்டில் உள்ள எல்லாரையும் அழைத்து ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும் அது சர்ப்ரைஸ் என்று எல்லோரையும் உட்கார வைத்திருக்கிறார். பாக்யாவும் கடையிலிருந்து அதற்காக சீக்கிரமாக வீட்டிற்கு வந்திருக்கிறார். அது பற்றி என்னவா இருக்கும் என்று எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும்போது ஈஸ்வரி எழில் நினைத்த மாதிரி படம் பண்ணியாச்சு, இனி அமிர்தாவும் எழிலும் ஒரு குழந்தை பெத்துக்க போறோம் என்று சொல்லப் போகிறார்கள் அதுவாகத்தான் இருக்கும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் எழில் செழியனையும் கூடவே கூட்டிக்கொண்டு வருகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications