கோபி கம்பெனி விஷயம் தெரிய வந்ததும் பாக்யா சொன்ன வார்த்தை.. ராதிகாவின் எதிர்பாராத முடிவு!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பிப்ரவரி 28ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் கோபி கம்பெனியை மூடிய விஷயத்தை ராதிகா மொத்த குடும்பத்திற்கும் சொல்ல எல்லோரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். ஆனால் பாக்கியா கோபிக்கு தன்னுடைய ரெஸ்டாரண்டில் வேலை கொடுக்கிறேன் என்று சொல்கிறார்.
தன்னுடைய நிலைமையை நினைத்து பாக்கியா சந்தோஷப்படுகிறார் என்று கோபி பிரச்சனை செய்ய ராதிகா பாக்யா சொன்ன வார்த்தைக்காக என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கோபியும் ராதிகாவும் சண்டை போட்டுக் கொண்டே வீட்டிற்கு வர அப்போது ராமமூர்த்தி என்னம்மா பிரச்சனை என்று கேட்க அதற்கு ராதிகா ஒன்றுமில்லை என்று சமாளித்துவிட்டு நான் மேலே போகிறேன் என்று போய்விடுகிறார். அப்போது ஈஸ்வரி கோபி இடம் ஏம்பா இப்படி கத்திகிட்டே வரா என்று கேட்க அதற்கு கோபி ஒரு சின்ன பிரச்சனை தான்.
அதற்கு கார்ல ஏறுனதிலிருந்து சண்டை போட்டுக்கிட்டே வரா, தினமும் இப்படித்தான் கத்துக்கிட்டே இருக்கா என்று ராதிகாவை பற்றி ஈஸ்வரியிடம் ஏத்தி விடுகிறார். அதனால் கோபமான ஈஸ்வரி ராதிகாவை கூப்பிட்டு அவனுக்கு ஹார்ட் அட்டாக் வருவதற்கு நீ தான் காரணம் இப்படி நீதான் அவனிடம் சண்டை போட்டுக்கிட்டே இருக்க என்று திட்டுகிறார்.
அதற்கு கோபமான ராதிகா ஆமா உங்க பையன் ரொம்ப ஒழுங்கா என்று கேட்க அதற்கு ஈஸ்வரி ஆமாம் என் பையன் மாதிரி யாரையாவது பார்க்க முடியுமா? ரொம்ப பொறுப்பான அமைதியான பையன், எப்பவும் உண்மையை தான் பேசுவான் என்று கோபியை பற்றி பில்டப் பண்ண அதற்கு ஒரு கட்டத்தில் கோபமான ராதிகா அப்படியா அப்ப உங்க பையன் ஆபீஸை இழுத்து மூடின விஷயம் உங்களுக்கு தெரியுமா? என்று கேட்க மொத்த குடும்பத்தினரும் அதிர்ச்சி ஆகின்றனர்.

அதற்கு ஈஸ்வரி இதை ஏன்டா என்கிட்ட சொல்லலன்னு கோபி இடம் கேட்க அதற்கு கோபி நான் இந்த கம்பெனியை வச்சு தான் எல்லாமே சாதித்தேன். அப்படி இருக்கும்போது இப்போ ஆபீஸை இழுத்து மூடிட்டேனு எப்படி சொல்றது என்று ஃபீல் பண்ணுகிறார். அதோடு இப்ப சொல்றேன் எல்லாரும் கேட்டுக்கோங்க இந்த கோபிநாத் பிசினஸை இழுத்து மூடிட்டேன் என்று சொல்லி சோபாவில் உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறார்.
அடுத்ததாக ஈஸ்வரி சோபாவில் உட்கார்ந்து முன்னாடியே கிரெடிட் கார்டு பணம் கட்டலைன்னு ரெண்டு மூணு தடவை வீட்டுக்கு வந்துட்டு போனாங்க அதற்கு பிறகு நீ எல்லாத்தையும் சரி பண்ணிட்டேனு நெனச்சேன். ஆனால் இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கலையே என்று சொல்ல வீட்டில் இருப்பவர்கள் எல்லாரும் அதிர்ச்சியாகிஎன்ன இதெல்லாம் நடந்திருக்கு எங்க கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலையே என்று கேட்கின்றனர்.
அப்போது கோபி நெஞ்சை பிடித்துக் கொண்டிருக்க அந்த நேரத்தில் பாக்யா தண்ணி கொண்டு வந்து குடிக்க கொடுக்கிறார். அப்போது கோபி இப்போ உனக்கு சந்தோஷமா இருக்குமே நீ ரெஸ்டாரண்ட் வைக்கிற அளவுக்கு வளர்ந்துட்டு போறா.. நான் ஒன்னும் இல்லாம நிக்குறேன். இப்போ உனக்கு மகிழ்ச்சியா இருக்குமே என்று கேட்க பாக்யா எதுவுமே பேசாமல் அங்கிருந்து கிளம்பி போய்விடுகிறார்.

பிறகு அடுத்த கட்டத்தில் பாக்கியா கிச்சனில் இருக்கும் போது கோபி யாரிடமோ போனில் வேலை கேட்டபடியே வருகிறார். பிறகு போனை கட் பண்ணதும் பாக்கியாவிடம் நான் பேசினதெல்லாம் நீ கேட்டிருப்ப உனக்கு இப்ப ரொம்ப சந்தோசமா இருக்கும் என்று மீண்டும் பாக்கியாவை வம்பு இழுக்கிறார். அதற்கு பாக்கியா நான் உங்களுக்கு ஒரு ஐடியா தரவா? நாங்க இப்ப புதுசா தொடங்கப்போற ரெஸ்டாரண்டுக்கு நிறைய ஆளுங்க வேலைக்கு எடுக்கணும்.

நீங்க வேணா மேனேஜரா இருங்க என்று சொல்கிறார். அந்த நேரத்தில் அங்கு ராதிகாவும் வந்துவிட கோபி பாரு ராதிகா நான் அவா ரெஸ்டாரண்டில் வேலைக்கு போகணுமாம்... நான் ஒன்னும் அந்த அளவிற்கு அதல பாதாளத்துக்கு போகல என்று கோபி கோபப்படுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications