பாக்கியலட்சுமி: கோர்ட்டில் ராதிகா சொன்ன வார்த்தை.. பெரும் அதிர்ச்சியில் ஈஸ்வரி.. பாக்யா செய்த செயல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 பிப்ரவரி 8ம் தேதிக்கான எபிசோடில் ராதிகா கொடுத்த விவாகரத்து வழக்கிற்காக கோபி கோர்ட்டுக்கு போகிறார். அங்கு ராதிகா எதிர்பார்க்காத வார்த்தையை சொல்கிறார். அதே நேரத்தில் கோபியை நினைத்து ஈஸ்வரி பயந்து கொண்டிருக்கிறார்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பாக்யாவிடம் ஈஸ்வரி பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது கோபி என்ன இருந்தாலும் உன் குழந்தைகளுக்கு அப்பா இன்னைக்கு அவன் உடைந்து போய் இருக்கிறான் என்று சொல்ல, அதற்கு பாக்கியா இப்போ நான் அதற்கு என்ன பண்ணனும்?

Baakiyalakshmi Serial vijay TV

என்னுடைய முன்னாள் கணவரை அவருடைய முன்னாள் மனைவி விட்டுட்டு போயிட்டாங்க என்பதற்காக அவர் உடைந்து போய் இருக்காரு என்று நான் ஒட்டிவைக்க வேண்டுமா என்று கோபப்பட, அதற்கு பாக்கியா ஈஸ்வரி நீ எதுவும் செய்ய வேண்டாம். இப்போதைக்கு கோபி எந்த இடத்துக்கும் போக முடியாத சூழ்நிலையில் இருக்கிறான்.

நானும் அவனை அனுப்ப மாட்டேன். அதனால இந்த வீட்டை விட்டு மட்டும் அவனை அனுப்பிடாதே என்று சொல்கிறார். அடுத்ததாக கோபி கோர்ட்டில் இருந்து நோட்டீஸ் வந்திருப்பதால் கோர்ட்டுக்கு கிளம்புகிறார். ஆனால் ஈஸ்வரி கோர்ட்டுக்கு போக வேண்டாம் என்று தடுக்கிறார். அதற்கு கோபி என்ன நடந்தாலும் பரவால்ல நான் கோர்ட்டுக்கு போயிட்டு வந்துருவேன் என்று சொல்கிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

கோர்ட்டில் வக்கீல் எனக்கு விவாகரத்துக்கு விருப்பமில்லை ராதிகாவுடன் வாழனும் என்று மட்டும் சொல்லுங்கள் அப்புறம் நான் பார்த்துக்கிறேன் என்று சொல்கிறார். அதற்கு ஓகே என்று கோபி சொல்லிவிட்டு அங்கு காத்திருக்கும் நேரத்தில் ராதிகா வருகிறார். மறுபக்கத்தில் ஈஸ்வரி அந்த மாயக்காரி என்ன பண்ணுனானு தெரியலையே என்று புலம்பி கொண்டு இருக்கிறார்.

விஜய் டிவி சீரியல் நடிகைக்கு எளிமையாக முடிந்த நிச்சயதார்த்தம்.. மாப்பிள்ளை இந்த பிரபலம் தான்
அதற்கு பாக்கியா உங்க பையன் ஒன்னும் சின்ன பையன் கிடையாது. அவருக்கு எது சரி எது தப்புன்னு எல்லாம் தெரியும். அவரை யாரும் ஏமாற்ற முடியாது. நீங்களாக புலம்பிக்கிட்டு இருக்காதீங்க என்று திட்டி விடுகிறார். மறுபக்கத்தில் கோர்ட்டில் கோபி ராதிகாவிடம் விசாரிக்கிறார்.

நான் கோர்ட்டுக்கு வருவதற்கு முன்னாடியே நீ இருந்த வீட்டுக்கு போய் பார்த்தேன். நீ அங்க இல்லை என்று சொல்ல, நான் வீட்டை காலி பண்ணி போயிட்டேன். இப்ப கூட ஏர்போர்ட்டில் இருந்து வரேன் என்று சொன்னதும் கோபி அதிர்ச்சி அடைகிறார். அப்போ எங்க இருக்க என்று கேட்க, நான் பெங்களூரில் இருக்கிறேன் என்று சொன்னதும் உங்க அம்மாவும் கூட தான் இருக்காங்களா? மயூ எப்படி இருக்கா? என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே இருக்கிறார்.

அதுவெல்லாம் என்னுடைய பிரச்சனை இனி நானே பார்த்துக்கொள்கிறேன் என்று ராதிகா சொல்கிறார். அதோடு கணவன் மனைவி என்றால் பிரச்சனை வரத்தான் செய்யும். எங்க அப்பா அம்மா 50 வருஷமா சேர்ந்து வாழ்ந்து இருக்காங்க. அவர்களும் தினமும் சண்டை போடுவாங்க. ஆனால் அவங்க எப்பவுமே விவாகரத்து செய்யணும் என்று முடிவு எடுத்தது கிடையாது என்று சொல்கிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

அதற்கு ராதிகா உங்க அம்மா அப்பாவுக்குள்ள புரிதல் இருந்தது, காதல் இருந்தது என்று சொல்ல.. நமக்கு இல்லையா என்று கோபி கேட்க, நமக்கு கல்யாணத்துக்கு முன்னாடி மட்டும் தான் இருந்தது அதற்கு பின்னாடி இல்ல என்று ராதிகா பதிலடி கொடுக்கிறார். அப்போது கோபி நீ இல்லன்னா நான் செத்துப் போயிருவேன் நீ என்னை விட்டு போயிடுவியா என்று பயந்து பயந்து எனக்கு பிரஷர் அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்.

பாக்கியலட்சுமி: கோபிக்காக பாக்யா செய்த செயல்.. நறுக்குன்னு ராதிகா கேட்ட கேள்வி
அடுத்ததாக ராதிகா கோபியின் வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது கோபி ராதிகாவிடம் நான் பேசியிருக்கிறேன் அவ மனசு மாறிடுவா என்று வக்கீலிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் நீதிபதி முன்பு ராதிகா எனக்கு இவரோடு சேர்ந்து வாழ விருப்பமில்லை விவாகரத்து வேண்டும் என்று அதிர்ச்சி கொடுக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+