பாக்கியலட்சுமி: கோபிக்காக பாக்யா செய்த செயல்.. நறுக்குன்னு ராதிகா கேட்ட கேள்வி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 பிப்ரவரி 7ஆம் தேதிக்கான எபிசோடில் ராதிகாவுக்கு போன் செய்த பாக்கியா விவாகரத்து பற்றி பேசுகிறார். அப்போது ராதிகா சொன்ன வார்த்தையை கேட்டு கோபி அதிர்ச்சி அடைகிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் இனியா, ஜெனி, பாக்யா, செல்வி என நான்கு பேரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது பாக்யா நான் எந்த சூழ்நிலையிலும் இனி என்னுடைய தன்னம்பிக்கையை விட்டுக் கொடுக்கிற மாதிரி நடக்க மாட்டேன் என்று முடிவு எடுத்திருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் விவாகரத்து பற்றி அங்கிள் என்ன முடிவு எடுத்திருக்கிறார் என்று தெரியலையே என்று ஜெனி சொல்ல அதற்கு செல்வி, கோபி சார் என்ன முடிவு எடுத்திருக்கிறாரோ அது இருக்கட்டும். இந்த முடிவு பற்றி தெரிந்ததும் உன் மாமியார் சும்மா இருக்க மாட்டாரு அக்கா என்று பாக்யாவிடம் சொல்ல அந்த நேரத்தில் ஈஸ்வரி அங்கு வருகிறார். அதனால் பேச்சை நிறுத்தி விடுகிறார்கள்.
அதைத் தொடர்ந்து ஈஸ்வரி செழியனிடம் உன் அப்பாகிட்ட பேசுனியா என்று கேட்க, அதற்கு செழியன் காலையில் இன்னும் பேசல என்று சொல்கிறார். இந்த நேரத்தில் கோபிக்கு ஆதரவாக நாம ரெண்டு பேரும் தான்டா இருக்கணும். நாம போய் பேசுவோம் என்று கோபியிடம் வந்து பேச வருகிறார்கள். பிறகு கோபி இடம் முதலில் ஆறுதலாக பேசுகிறார்.

பிறகு உன் அப்பா போன பிறகு நான் வாழலையா? உங்க அப்பா எனக்காக எவ்வளவோ விட்டுக் கொடுத்து இருக்கிறார். எனக்காக எத்தனை கஷ்டங்களை அனுபவிச்சு இருக்காரு. ஆனாலும் அவர் போன பிறகு நான் உங்க எல்லாருக்காகவும் வாழ்ந்துட்டு இருக்கிறேன். ஆனால் ராதிகா உனக்கு பிரச்சனை மேல பிரச்சனை தான் கொடுத்து இருக்கா. தொட்டதுக்கெல்லாம் சண்டை போடுறது, போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் அழைய விட்டிருக்கா.
ராதிகா கூட எல்லாம் எப்படிடா நிம்மதியா இருக்க முடியும்? அவ போனது சரிதான் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது கோபி திடீரென்று நான் வெளியே போயிட்டு வரேன் என்று கிளம்புகிறார். ஈஸ்வரி எங்க போற என்று கேட்டுக் கொண்டிருக்கும்போது ராதிகா அனுப்பிய நோட்டீசை காட்டி நான் இது பற்றி ராதிகா கிட்ட பேச போறேன் என்று சொல்ல, ராதிகா அந்த வீட்டில் இல்லையே நீ எங்க போற என்று ஈஸ்வரி கேட்கிறார்.
ஆனாலும் நான் போயிட்டு வரேன் என்று கோபி அங்கிருந்து கிளம்பி ராதிகாவின் பழைய வீட்டிற்கு வந்து கதவை தட்டிக் கொண்டிருக்கிறார். அங்கு யாருமே இல்லை அதை பார்த்த பக்கத்து வீட்டு பெண் இந்த வீட்டில் இருந்தவங்க எல்லாருமே காலி பண்ணி போயிட்டாங்க என்று சொன்னதும் கோபி அதிர்ச்சி அடைகிறார்.

கோபியை தொடர்ந்து அதே வீட்டிற்கு பாக்கியாவும் வருகிறார். கோபி வீட்டில் யாரும் இல்லை எல்லாரும் காலி பண்ணிட்டு போயிட்டாங்களாம் என்று சொல்கிறார். உடனே பாக்கியா ராதிகாவிற்கு போன் பண்ணி பார்க்க போன் சுவிட்ச் ஆஃப் என்று வருகிறது. இதனால் பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். அதோடு கோபி இடம் ராதிகா உங்களை எத்தனையோ முறை மிஸ் பண்ணுனாங்க. அப்போ எல்லாம் உங்களுக்கு அவங்களோட அருமை புரியலை. இப்போ நீங்க அவங்கள மிஸ் பண்ணுறீங்க ஆனா அவங்க எங்க இருக்காங்கன்னு தெரியல என்று திட்டிவிட்டு வீட்டிற்கு வருகிறார்.
அந்த சீரியல் நடிகர் தான் என் கணவர்.. விஜயகாந்த் எனக்காக சொன்ன வார்த்தை! நெகிழ்ந்த விஜய் பட கதாநாயகி
அதை தொடர்ந்து ராதிகா பாக்கியாவிற்கு ஃபோன் பண்ணுகிறார். அப்போது பாக்கியா பதறி போய் நீங்க எங்க இருக்கீங்க என்று கேட்க, எல்லோரும் நல்லா இருக்கோம். இப்போ நாங்க சந்தோஷமா இருக்கோம். எங்களை பத்தி நீங்க பயப்படாதீங்க என்று பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் பாக்கியா ராதிகாவிடம் பேசுவதை மறைந்து நின்று கோபி கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அப்போது ராதிகாவிடம் உங்கள நினைச்சு நான் ரொம்ப பயப்பட்டேன் என்று பாக்யா சொல்ல, அதற்கு ராதிகா நீங்க என்னை பத்தி பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. நான் இப்போது நல்ல முடிவு எடுத்து நல்லபடியாக இருக்கிறேன் என்று விவாகரத்து பற்றி தான் உறுதியான முடிவில் இருப்பதாக சொல்கிறார்.

அந்த நேரத்தில் கோபி நான் ராதிகாவிடம் பேசணும் என்று போனை வாங்கி ராதிகா என்று சொன்னதும் ராதிகா ஃபோனை கட் பண்ணி விடுகிறார். பிறகு கோபி ஒரு முறை மட்டும் போன் பேசிட்டு தரேன் என்று பாக்யாவிடம் சொல்கிறார். பிறகு போன் பண்ணும் போது ராதிகா ஃபோனை சுவிட்ச் ஆப் செய்து விடுகிறார். இதனால் கோபி சோகமாக அங்கிருந்து கிளம்பி போகிறார்.
நடிகை உடன் காதலை அறிவித்த விஜய் டிவி சீரியல் ஹீரோ.. ரீல் ஜோடி இப்போ ரியல் ஜோடி ஆகிடுச்சு
அப்போது என்ன சொல்வது என்று தெரியாமல் பாக்கியா நின்று கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் செல்வி நீ என்னை பத்தி என்ன வேணாலும் நினைச்சுக்கோ ஆனா நான் ஒன்னே ஒன்னு சொல்லுறேன். பொம்பளைங்களை ஏமாத்தணும்னு நினைக்கிறவங்களுக்கு கோபி சார் முடிவு பாடமா இருக்கும். கோபி சாரை பார்த்து எனக்கு கொஞ்சம் கூட பாவமா தோனவே இல்ல. அவர் செஞ்சதுக்கு இப்போ அனுபவிக்கிறார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications