அந்த சீரியல் நடிகர் தான் என் கணவர்.. விஜயகாந்த் எனக்காக சொன்ன வார்த்தை! நெகிழ்ந்த விஜய் பட கதாநாயகி
சென்னை: நடிகர் ரஜினி நடித்த உழைப்பாளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இந்திரஜா அதைத் தொடர்ந்து விஜய் மற்றும் அஜித் நடித்த ராஜாவின் பார்வையிலே படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இவர் இப்போது தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் தெலுங்கில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய குடும்ப வாழ்க்கை குறித்து இந்திரஜா பேசி இருக்கிறார். அதோடு இவருடைய கணவர் நடிகர் முகமது அப்சர் பற்றியும் பேசி இருக்கிறார்.
ஒரு சிலரை பார்த்ததும் இவர்களை எங்கேயோ பார்த்திருக்கோமே என்று தோன்றும். அதுபோலத்தான் நடிகை இந்திரஜாவும். இவர் பல ஹிட் திரைப்படங்களில் ஆரம்ப காலகட்டத்தில் நடித்திருக்கிறார். ஆனால் இப்போது தமிழில் அதிகமாக நடிக்கவில்லை இதனால் இவர் சமீபத்தில் கொடுத்த இன்டர்வியூ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திரஜா உழைப்பாளி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கினார். அதற்கு பிறகு புருஷ லட்சணம் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். ஆனால் கதாநாயகியாக இவருக்கு பிரபலம் கிடைத்தது ராஜாவின் பார்வையிலே திரைப்படம் தான். இந்த திரைப்படத்தில் மட்டும்தான் நடிகர் விஜய் மற்றும் அஜித் இருவரும் ஒன்றாக நடித்திருந்தார்கள்.
ராஜாவின் பார்வையிலே திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியே இவர்தான். அதுபோல அதைத் தொடர்ந்து உன்னருகே நானிருந்தால் என்ற திரைப்படத்தில் பார்த்திபனோடு ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடி இருந்தார். இதுதான் நான் செய்த பெரிய தவறு என்று கூட ஒரு பேட்டியில் இந்திரஜா கூறியிருந்தார்.
திரிஷாவோடு தியேட்டரில் கலக்கல்! "விடாமுயற்சி" அஜித் பற்றி VJ ரம்யா போட்ட போஸ்ட்.. குவியும் வாழ்த்து
அதுபோல இப்பொழுது தெலுங்கு, கன்னடம், மலையாள சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இந்திரஜா தமிழ் பக்கம் அதிகமாக தலை காட்டவில்லை என்றாலும் அவருடைய கணவர் சன் டிவி சீரியல்களில் நடித்துக் கொண்டிருப்பவர் தான். அது பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் இந்திரஜா பேசியிருக்கிறார்.

அதாவது அதில் அவர் பேசுகையில் என்னுடைய கணவர் முகமது அப்சர் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அவர் சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். நான் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறேன் என்பதால் என்னை பார்ப்பவர்கள் பலரும் உங்க கணவர் சீரியலில் நடிக்கிறாரே அவருக்கு வருமானம் குறைவாக வருமே என்று கேட்கிறார்கள்.
இதில் என்ன இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. அவரும் வேலை பார்க்கிறார் நானும் வேலை பார்க்கிறேன். நான் பார்க்கிற வேலைக்கு வருமானம் அதிகமாக கிடைப்பதால் அது ஒரு பெரிய விஷயமே கிடையாது. இருவரும் மனதிற்கு பிடித்த வேலையை செய்து கொண்டிருக்கிறோம்.
அதுபோல எங்களுடைய திறமையை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறோம். அதில் அதிகமாக சம்பளம் வாங்குபவர்கள் தான் பெரியவர் என்கிற மாதிரி எங்கள் வீட்டில் இதுவரைக்கும் நடக்கல. ஆனால் வெளியே இருப்பவர்கள் இது போலத்தான் கேட்கிறார்கள்.
எந்த துறையாக இருந்தாலும் இதுபோல ஏற்றம் இறக்கம் இருக்கத்தான் செய்யும். ஆனால் இதை வைத்தே பிரச்சனை செய்வதற்காக சிலர் வருகிறார்கள் என்று சிரித்தபடியே அந்த பேட்டியில் இந்திரஜா பேசியிருக்கிறார். இதை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

இந்திரஜாவின் கணவர் முகமது அப்சர் சன் டிவியில் பல சீரியல்களல் நடித்திருக்கிறார். அதிலும் தாமரை, உறவுகள் சங்கமம், என் இனிய தோழியே, அகல்யா, நிம்மதி உங்கள் சாய்ஸ், செல்வி, பொம்மலாட்டம், பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள் என்று பல சீரியல்களில் நடித்திருக்கிறார். அதிலும் கடந்த வருடத்தில் சன் டிவியில் முடிவுக்கு வந்த பாண்டவர் இல்லம் சீரியலிலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுபோல "எங்கள் அண்ணா" திரைப்படத்தில் விஜயகாந்துக்கு வில்லியாக இந்திரஜா நடித்திருந்தார். அது குறித்தும் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார். அதில் அவர் பேசுகையில், விஜயகாந்த் சார் தான் இந்த படத்தில் இந்திரஜா நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லி இருக்கிறார். அதனால் தான் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.
நான் சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்க தொடங்கியதும் எனக்கு எங்கள் அண்ணா திரைப்படத்தில் கிடைத்த வாய்ப்பு பெரிய விஷயமாக இருந்தது. அதுபோல தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் விஜயகாந்த் சார் தான் எல்லா நடிகர்களையும் பாராட்டி, அவர்கள் மேலே வர வேண்டும் என்று நினைப்பவர் என்று விஜயகாந்த் குறித்து நெகிழ்ந்து பேசி இருக்கிறார்.
-
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications