விஜய் டிவி சீரியல் நடிகைக்கு எளிமையாக முடிந்த நிச்சயதார்த்தம்.. மாப்பிள்ளை இந்த பிரபலம் தான்
சென்னை: விஜய் டிவியில் பல சீரியல்களில் நடித்த பிரபலமான நடிகை ஒருவருக்கு இன்று எளிமையாக எங்கேஜ்மென்ட் நடைபெற்று இருக்கிறது. அவர் தன்னுடைய புகைப்படங்களை instagram பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
கடந்த சில வாரங்களாகவே விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ் சீரியல்களில் நடிக்கும் பல நடிகர்கள் நடிகைகள் அடுத்தடுத்து மகிழ்ச்சியான செய்திகளை பகிர்ந்து வருகிறார்கள். அதிலும் மௌனராகம் சீரியலில் இரண்டாவது பாகத்தின் மூலம் பிரபலம் அடைந்த நடிகர் சல்மானுல் தன்னோடு மலையாள சீரியலில் ஒன்றாக நடிக்கும் நடிகையை காதலிப்பது பற்றி நேற்று அறிவித்திருந்தார்.

அதேபோல பல சீரியல் நடிகைகள் தாங்கள் புதியதாக வீடு வாங்கியது, குழந்தை பிறந்தது போன்ற செய்திகளை பகிர்ந்து வருகிறார்கள். அந்த வரிசையில் விஜய் டிவியில் சீரியலில் நடித்திருக்கும் நடிகை ஒருவர் தன்னுடைய நிச்சயதார்த்த போட்டோவை பகிர்ந்து இருக்கிறார். அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

அவர் வேறு யாரும் இல்லை விஜய் டிவியில் ஒளிபரப்பான காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்த நடிகை ரேணுகா தான். காற்றுக்கென்ன வேலி சீரியல் முடிவடைந்த பிறகு பனிவிழும் மலர்வனம், தங்கமகள் போன்ற சீரியல்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான நடிகை ரேணுகா, நடிகை என்பதையும் தாண்டி தொகுப்பாளினியாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

அதுபோல ரேணுகா சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருக்கிறார். அடிக்கடி மாடலிங் போட்டோ சூட் நடத்தி அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். இவருக்கு பாலகணேஷ் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கிறது. அப்போது எடுத்த புகைப்படங்களை ரேணுகா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். அவருக்கு சின்னத்திரை பிரபலங்கள் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். அதுபோல ரேணுகா வேறு யாரும் இல்லை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வளையோசை அம்மாச்சி என்ற பெயரில் கண்ணாடி வளையல்கள் விற்று வருபவரின் மூத்த மகள்தான்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications