பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதானா? ஜெயிலுக்கு போவது யார்? லீக்கான புகைப்படம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கேரக்டரில் நடிக்கும் நடிகர் சதீஷ் சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று புகைப்படம் வெளியிட்டு அப்டேட் கொடுத்திருக்கிறார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இருக்கிறது. அது பற்றி பார்க்கலாம்.
பாக்கியலட்சுமி சீரியலில் யாரும் எதிர்பார்க்காத அதிரடியான பல திருப்பங்கள் நடைபெற்று இருக்கிறது. பாக்கியா கோபி மற்றும் ராதிகாவை வீட்டை விட்டு வெளியே துரத்தியபோது கோபி ஈஸ்வரி இடம் பேசி மனதை மாற்றி தன்னோடு கூட்டிக்கொண்டு போய்விட்டார். வீட்டில் எல்லோரும் எவ்வளவு எடுத்து சொல்லியும் ஈஸ்வரி என்னுடைய மகனின் நிம்மதி தான் எனக்கு முக்கியம் என்று கோபி வீட்டிற்கு போய் இருந்தார்.

ஆனால் கோபி வீட்டிற்கு போன முதல் நாளிலிருந்து கோபியின் மாமியார் கமலத்துடன் ஈஸ்வரிக்கு பிரச்சனை வந்து கொண்டே இருந்தது. ஆரம்பத்தில் ஈஸ்வரி நான் தான் கெத்து என்று ராதிகா மற்றும் கமலாவிடம் பிரச்சனை மேல் பிரச்சனை செய்து கொண்டிருந்தார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் வீட்டில் கீழே கிடந்த பூச்சாடியில் கால் வைத்த ராதிகா கீழே விழுந்ததில் வயிற்றில் அடிபட்டு அவருடைய கரு கலைந்து விடுகிறது.
இதற்கு காரணம் ஈஸ்வரி தான் என்று ராதிகாவும் அவருடைய அம்மா கமலாவும் சொல்கின்றனர். அதோடு இந்த வீட்டில் ஈஸ்வரி இருக்கக் கூடாது என்று சொல்ல முதலில் கோபி ஈஸ்வரிக்கு சப்போர்ட் செய்தாலும் பிறகு கோபியும் என்னுடைய குழந்தை இல்லாமல் போனதற்கு காரணம் நீங்கதான். நீங்கதான் இந்த குழந்தை வேண்டாம் என்று ஆரம்பத்தில் இருந்தே சொல்லிட்டு இருந்தீங்க.
இப்போ இந்த குழந்தை இல்லாம போயிடுச்சு. இனி உங்க பேர பிள்ளைங்க நிம்மதியா இருக்கலாம். இனியாவிற்கு திருமணத்தில் எந்த பிரச்சினையும் இருக்காது என்று டயலாக் பேசி ஈஸ்வரியை வீட்டை விட்டு வெளியே துரத்தி இருந்தார். இந்த நிலையில் மீண்டும் பாக்கியா வீட்டிற்கு வந்த ஈஸ்வரி அங்கு தன்னுடைய மகனே நான் கொலைகாரி என்று சொல்லிவிட்டான் என்று அழுது கொண்டே இருக்கிறார்.
இதனால் கோபமான பாக்கியா ராதிகாவிடம் சென்று ஈஸ்வரி பற்றி பேச போக ராதிகா வீட்டை விட்டு வெளியே போங்க என்று துரத்திவிட்டு இருக்கிறார். அப்போது வெளியே வரும்போது கோபியிடம் உங்க அம்மாவை பத்தி நீங்களே இப்படி பேசலாமா? அவங்கள பத்தி உங்களுக்கு தெரியாதா? உங்களுக்காக வீட்டில் எல்லாரையும் தூக்கி போட்டுட்டு வந்தாங்க.
நீங்க அவங்கள நம்பாம பேசிட்டீங்கன்னு அவங்க சாப்பிடாம இருக்காங்க என்று சொல்லிவிட்டு போகிறார். இப்படியாக எபிசோடு முடிந்து இருக்கிறது. இந்த நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் கோபி கேரக்டரில் நடிக்கும் நடிகர் சதீஷ் தான் பாரில் குடிக்க போகிறேன் இனி அப்படித்தான் காட்சிகள் வரப்போகிறது என்று சில தினங்களுக்கு முன்பு வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார்.
ஏற்கனவே ராதிகாவும் கோபியிடம் கோபத்தை காட்டுகிறார். பாக்யாவும் ஈஸ்வரிக்காக திட்டிட்டு போயிருக்கிறார். இதனால் கோபி பழையபடி குடிகாரராக மாறப் போகிறார் என்று யோசிக்க வைத்திருக்கிறது. இந்த நிலையில் இன்று கோபி போலீஸ் ஸ்டேஷன் வாசலில் அமர்ந்திருப்பது போன்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

இதனால் கோபி ஏதாவது தப்பு செய்து போலீசில் மாட்ட போகிறாரா? அல்லது ராதிகா ஈஸ்வரி மீது கம்ப்ளைன்ட் கொடுக்கப் போகிறாரா? என்ற கேள்விகள் எழுந்து வருகிறது. ஏற்கனவே ரெஸ்டாரண்டில் வேலை பார்ப்பவர்களை கோபி திட்டி இருக்கிறார். இதனால் அவர்கள் அங்கு ஏதாவது பிரச்சனை செய்து வைக்க அதில் கோபி மாட்டுவாரா? இல்லை குடித்துவிட்டு வண்டி ஓட்டி வரும்போது ஏதாவது பிரச்சனையில் சிக்க போகிறாரா என்றும் யோசிக்க வைத்திருக்கிறது. என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications