நிலாவை ஏற்றுக் கொண்ட கோபி.. பாக்கியலட்சுமி சீரியலில் இனி அடுத்து நடக்கப்போவது இதுதானா?
பாக்கியலட்சுமி சீரியலில் கோபியாக நடிக்கும் சதீஷ்குமார் தனது சமூக வலைதள பக்கங்களில் சில புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கேரக்டரில் நடிகர் சதீஷ்குமார் நடித்து வருகிறார்.
அந்த சீரியலில் நடிக்கும் நிலா பாப்பாவோடு எடுத்த புகைப்படங்களை சதீஷ்குமார் வெளியிட்டு இருக்கிறார்.
சீரியலில் நிலா பாப்பாவை ஏற்றுக் கொள்ளாத கோபி தற்போது வெளியிட்ட புகைப்படத்தால் இனி அடுத்த பிரச்சனை இதுதான் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இரண்டு மனைவி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் மனதை கவர்ந்த சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் கதாநாயகன் கோபிக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி பாக்யா, இரண்டாவது ஆக மனைவி ராதிகா. இதில் முதல் மனைவி பாக்யாவிற்கு செழியன், எழில், இனியா என்று மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். செழியன் மற்றும் எழிலுக்கு திருமணமாகிவிட்டது. செழியனின் மனைவி தற்போது கர்ப்பமாக இருக்கிறார். தன்னுடைய மகன்களுக்கு திருமணம் நடந்து இருக்கும் நிலையில் தற்போது கோபியும் இரண்டாவது திருமணம் செய்து இருக்கிறார்.

திருமணத்திற்கு எதிர்ப்பு
இந்த நிலையில் கடந்த வாரத்தில் எழில் திருமணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எழில் யாரை திருமணம் செய்வார் என்று பெருத்த எதிர்பார்ப்போடு இருந்த நிலையில் கடைசியில் அமிர்தாவை திருமணம் செய்திருந்தார். அமிர்தாவிற்கு ஏற்கனவே திருமணம் முடிந்து அவருடைய கணவர் இறந்துவிட்ட நிலையில் கைக்குழந்தையோடு வாழ்ந்து வந்த பெண்ணை எழில் திருமணம் செய்து வந்ததால் கோபி, அவரது தாயார் ஈஸ்வரி, மூத்த மகன் செழியன் ஆகியோர் எதிர்த்து வந்தனர்.

ஏற்றுக்கொள்ளாத கோபி
இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு அமிர்தாவின் மகளாக நடிக்கும் நிலா பாப்பாவை ஈஸ்வரிக்கு இப்ப வரைக்கும் பிடிக்காமல் இருக்கும் நிலையில் ராமமூர்த்தி குழந்தையை ஏற்றுக் கொண்டார். அதுபோல செழியனும் தற்போது ஆள் யாரும் இல்லாத நேரத்தில் அந்த குழந்தையோடு கொஞ்சி விளையாட தொடங்கி இருக்கிறார். ஆனால் கோபி அவருடைய வீட்டிற்கு இனியா தூக்கி சென்ற நேரத்தில் நான் தாத்தாவெல்லாம் கிடையாது. இனி அப்படி சொல்லிக் கொடுக்காதே என்னை தாத்தா என்று கூப்பிடக்கூடாது என்று கண்டிஷன் போட்டு இருந்தார்.

கோபி வெளியிட்ட புகைப்படம்
ஆனால் தற்போது நிலா பாப்பாவோடு கோபி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இது சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதிகமான லைக் குவிந்து வருகிறது. ஏற்கனவே இனியா டியூஷன் செல்வதற்கு சைக்கிள் கேட்டதும் மயூ எனக்கும் சைக்கிள் வேண்டும் என்று போட்டி போட்டு இருந்தார். இந்த நிலையில் இப்போது நிலா பாப்பாவை கோபி தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்சுவதை பார்க்கும்போது அடுத்த பிரச்சனையை ராதிகா தான் எடுக்கப் போகிறாரா? என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது. குறிப்பாக பாக்யாவிற்கு ராதிகாவின் ஆபீஸில் கேட்டரிங் ஆர்டர் கிடைத்துவிட்ட நிலையில் அந்த கோபத்தில் இருக்கும் ராதிகாவிடம், கோபி பாக்யாவை புகழ்ந்து தள்ளி மாட்டியிருக்கிறார். இனி நிலாவை கொஞ்சுவதால் என்னவென பிரச்சனை நடக்கப்போகிறதோ என்று கேள்வி எழும்பி கொண்டிருக்க, ஒரு வழியாக நிலா பாப்பாதான் வீட்டில் ஒற்றுமையை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications