பாக்கியலட்சுமி: போலீசிடம் சிக்கிய கோபி.. கடும் கோபத்தில் ராதிகா காப்பாற்ற போவது யாரு? செம டுவிஸ்ட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கேரக்டரில் நடிக்கும் நடிகர் சதீஷ் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை தெளிவுபடுத்தும் விதமாக சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதில் தான் போலீஸ் ஸ்டேஷனில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். தன்னை இரண்டு போலீஸ் கையோடு பிடித்து வைத்துக் கொண்டிருப்பது போன்றும் தான் நீதிமன்றத்தில் நிற்பது போன்றும் சில புகைப்படங்களை சதீஷ் பகிர்ந்து இருக்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவின் கர்ப்பம் கலைந்ததற்கு காரணம் ஈஸ்வரி தான் என்று ராதிகாவும் கமலாவும் சொன்னதால் கோபியும் அதை நம்பி ஈஸ்வரியை வீட்டை விட்டு துரத்திவிட்டு இருக்கிறார். ஈஸ்வரி பாக்யா வீட்டிற்கு மீண்டும் வந்திருக்கும் நிலையில் அழுது கொண்டே இருப்பதால் கோபமான பாக்யா கோபி வீட்டிற்கு வந்து ராதிகாவை சமாதானப்படுத்த பார்க்கிறார்.

ஆனால் ராதிகா ஈஸ்வரி மீது இன்னும் கோபமாக இருப்பதால் வீட்டை விட்டு வெளியே வந்த பாக்கியா கோபியை பார்த்து உங்க அம்மாவை நீங்களே நம்பலைன்னா எப்படி? உங்க மேல நம்பிக்கை வச்சு தானே எங்க எல்லாரையும் வேண்டாம்னு தூக்கி போட்டுட்டு உங்க கூட வந்தாங்க. அவங்க உங்களோட குழந்தைய இல்லாம பண்ணுவாங்களா? என்று பல கேள்விகளை கேட்டதால் கோபி குழப்பத்தில் இருக்கிறார்.
அதோடு இன்றைய எபிசோடில் பழையபடி குடிக்க தொடங்கி இருக்கிறார் ரெஸ்டாரன்டில் புதியதாக வரும் ஆர்டர்களை கோபி சரியாக கவனிக்கவில்லை. அதுபோல செஃப் இடம் கோபமாக நடந்து கொள்கிறார். இப்படியான நிலையில் கோபி கேரக்டரில் நடிக்கும் நடிகை சதீஷ் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
ஏற்கனவே இவர் சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே தெரிவிக்கும் வகையில் அடிக்கடி சீரியல் அப்டேட் கொடுத்து வருவது வழக்கம் தான். அது போல இந்து முறை நேற்று போலீஸ் ஸ்டேஷனின் வாசலில் தான் தனியாக அமர்ந்திருப்பது போன்று ஒரு புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார்.

அந்த புகைப்படத்தில் என்னை இப்படி தனியாக இங்கு உட்கார வச்சிட்டாங்களே என்று கேப்ஷன் கொடுத்திருந்தார். இன்று தன்னை இரண்டு போலீஸ் கையோடு பிடித்து வைத்துக்கொண்டு நிற்பது போன்று தான் கோர்ட்டில் நிற்பது போன்று புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதனால் கோபியை போலீஸ் கைது செய்யப் போகிறார்கள் என்று தெரிகிறது.
பாக்யா கேட்ட கேள்வி.. கோபத்தில் கோபி எடுத்த முடிவு.. கடைசியில் நிலைமை இப்படி மாறிடுச்சு! பாவம் ஈஸ்வரி
ஆனால் கோபி என்ன தப்பு செய்தார் என்று தான் தெரியவில்லை. கோபி நீதிமன்றத்தில் நிற்பதை பார்க்கும்போது ராதிகா கோபியை விவாகரத்து செய்யப் போகிறாரா? அதனால் தான் கோபி போலீஸ் நீதிமன்றத்திற்கு போயிருக்கிறாரா என்று கேள்விகள் எழுகிறது. ஏற்கனவே சீரியலிலும் கோபியை கல்யாணம் செய்த பிறகு என்னுடைய வாழ்க்கையே முடிஞ்சிடுச்சு. அதுக்கு பிறகு கஷ்டம் மட்டும் தான் எனக்கு கிடைத்தது என்று ராதிகா புலம்பி கொண்டிருக்கிறார்.

கோபியும் ராதிகாவை கல்யாணம் செய்ததால் தான் என்னுடைய நிம்மதி எல்லாம் போய்விட்டது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இதனால் இவர்கள் விவாகரத்து செய்யப் போகிறார்களா என்று கேள்விகளும் எழுந்து வருகிறது. அதே நேரத்தில் போலீஸ் ஸ்டேஷனில் கோபி உட்கார்ந்து இருப்பதை பார்க்கும்போது ரெஸ்டாரண்டில் சாப்பாடில் குளறுபடிகள் நடந்ததால் ஏதாவது பிரச்சனையில் கோபி சிக்கி இருக்கிறாரா என்று கேள்விகளும் இருந்து வருகிறது.
ஏற்கனவே கோபி மீது ராதிகா கோபமாக இருப்பதால் அவரும் இனி காப்பாற்ற வர மாட்டார். அதனால் ஈஸ்வரிக்காக பாக்கியா தான் கோபியை காப்பாற்றப் போகிறாரா? என்று எதிர்பார்க்க வைக்கிறது. என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications