மீண்டும் பாக்கியாவோடு சேர்ந்த கோபி.. அப்போ ராதிகா நிலைமை..? எதிர்பாராத ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் கோபி மீண்டும் பாக்கியா மற்றும் குடும்பத்தோடு சேர்ந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

பங்க்ஷன் வீட்டில் தன்னுடைய குடும்பத்தோடு மீண்டும் சேர்ந்த கோபியை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைகின்றனர்.

அப்போ இனி ராதிகா சீரியலில் இல்லையா என்ற கேள்விகள் அதிகரிக்கிறது.

Baakiyalakshmi Serial Gopi released a photo with Baakiya as a family

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் அதிகமான ரசிகர்களால் பார்க்கப்படும் ஒரு சீரியலாக இருந்து வருகிறது. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்க போகும் என்று எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருக்கிறது. காரணம் இன்றைய எபிசோட் பாக்யாவின் நடத்தையைப் பற்றி கோபி தவறாக பேச எழில் மற்றும் செழியன் இருவரும் சேர்ந்து கோபியை அடிக்க பாய்கின்றனர்.

இந்த நிலையில் இவர்கள் குடும்பமாக சேர்ந்து இருப்பதை பார்த்து ராதிகா இனி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருக்கிறது. அதே நேரத்தில் தன்னை சந்தேகப்பட்ட கோபிக்கு இனி பாக்யா என்ன பதிலடி கொடுக்கப் போகிறார் என்றும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

இன்றைய எபிசோட்டில் அனைவரும் பாக்யாவுக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருக்கும் நிலையில் இனி வரும் நாட்களில் பாக்கியாவிடம் எப்படி நடந்து கொள்வார்கள்? ஒரு வேலை கோபியின் பக்கம் ஈஸ்வரி சாய்ந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறதா? என்றெல்லாம் கேள்வி எழுந்து வரும் நிலையில் தற்போது கோபியாக நடிக்கும் சதீஷ் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

Baakiyalakshmi Serial Gopi released a photo with Baakiya as a family

உங்கள் பாக்கியலட்சுமி குடும்பத்தார் என கோபி, பாக்கியா, ஈஸ்வரி, ராமமூர்த்தி மற்றும் இனியா என அனைவரும் வரிசை கட்டி இருக்கின்றனர். அனைவரோடு கோபி சந்தோஷமாக இருப்பது போன்ற அந்த புகைப்படம் வெளியாகியிருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் அப்போ பாக்கியா பக்கத்தில் கோபி உட்கார்ந்து இருப்பதால் இனி ராதிகா வீட்டை விட்டு போய்விடுவாரா? கோபியும் பாக்யாவும் சேர்ந்து விடுவார்களா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

வழக்கமாக அடுத்து சீரியலில் என்ன நடக்கப்போகிறது என்பது பற்றி க்ளூ கொடுத்து வரும் நடிகர் சதீஷ் இப்போ வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து அப்போ இனி கதை எப்படி போகப்போகிறது என்று கேள்வி அதிகரித்து வருகிறது. ஏற்கனவே பழனிச்சாமியிடம் அவருடைய அம்மாவின் பிறந்தநாளை பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என்று பாக்யா கூறியிருப்பதால் பழனிசாமியின் அம்மா பிறந்தநாளுக்கு மொத்த குடும்பமும் வந்திருக்கிறார்களா? அல்லது இது வேறு எதுவும் பங்க்ஷனாக என்றும் கேள்விகள் எழுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+