தெருவிற்கு வந்த கோபி.. பாக்யா செய்த செயல்... இவ்வளவு சீக்கிரம் நிலைமை மாறும் என்று எதிர்பார்க்கலையே!
பாக்கியலட்சுமி சீரியலின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை நடிகர் சதீஷ் வெளியிட்டு இருக்கிறார்.
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கேரக்டரில் நடிகர் சதீஷ் நடித்து வருகிறார்.
சூட்டிங் ஸ்பாட்டில் கோபி செய்யும் சில செயல்களை அப்படியே புகைப்படமாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
தன்னுடைய நிலைமையை குறித்து கோபி பதிவிட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

ரசிகர்களின் ஆதரவு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் அதிகமான பெண் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. குடும்ப பெண்களின் வரவேற்பை பெற்ற இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர். தொடர்ந்து பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் கதாநாயகி பாக்கியாவை அவருடைய கணவர் வேண்டாம் என்று விட்டுவிட்டு ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து விட்ட நிலையில் தற்போது கோபியின் வாழ்க்கையில் அடுத்தடுத்த பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது.

கோபியின் மாற்றம்
பாக்கியா தனக்கு பிடிக்கவில்லை என்று தனக்கு பிடித்த ராதிகாவை திருமணம் செய்து கொண்ட கோபி தற்போது ராதிகாவால் படும் கஷ்டங்களால் மதுவுக்கு அடிமையாக மாறி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் பாக்கியா இப்போது பழனிச்சாமியோடு பேசி பழகுவதை பார்த்து கோபியால் பொறுக்க முடியாமல் கோபத்தில் கொதித்து வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய நண்பரோடு சேர்ந்து குடித்துவிட்டு நேற்றைய எபிசோடில் ராதிகாவிடம் தன்னுடைய மனதில் இருக்கும் கவலைகளை எல்லாம் கொட்டி ராதிகாவை முகத்துக்கு நேராகவே திட்டி இருந்தார்.

நாளை வரும் எபிசோடு
அதுமட்டுமல்லாமல் அடிக்கடி பாக்கியா இதற்கு முன்பு எப்படி இருந்தாள் ஆனால் இப்போ இப்படி மாறிவிட்டாலே என்று நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் பாக்யா தெருவில் நடந்து கொண்டிருக்கும்போது இனி பழனிச்சாமியோடு பேசி பழகக் கூடாது என்று கோபி மிரட்ட, அதை கேட்க நீங்க யார் என்று ராதிகா பதிலடி கொடுக்கிறார். அப்படியெல்லாம் விட முடியாது நீ என்னுடைய வீட்டில் இருக்கிறாய் என்று தன்னுடைய அதிகாரத்தை காட்ட பார்த்த கோபிக்கு ராதிகா இங்கிலீஷில் பேசி அதிர்ச்சி கொடுக்கும் எபிசோடு இன்று நாளை ஒளிபரப்பாக இருக்கிறது.

கோபியின் தத்துவம்
இந்த நிலையில் கோபி இந்த எபிசோடுக்காக சூட்டிங் எடுக்கும் போது அங்கே மலையும், வெயிலும், மேகங்களும் மாறி மாறி செய்த தாக்குதல்களால் சோர்ந்து உட்கார்ந்த தருணம். வாழ்க்கைக்கு மட்டும் வெளிச்சம் தேவை இல்லை. படப்பிடிப்பு செய்வதற்கும் வெளிச்சம் ரொம்ப முக்கியம் என்று ரோட்டில் பாக்கியாவோடு அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் கோபியின் நிலைமை இவ்வளவு சீக்கிரமாக ரோட்டுக்கு வரும் என்று யாரும் எதிர்பார்க்கலையே என்று கலாய்த்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications