பாக்கியலட்சுமி: குடும்பத்தினர் முன்பு சுதாகரை சிக்க வைத்த பாக்கியா.. இனியா கேட்ட கேள்வி! கோபி சொன்ன வார்த்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஏப்ரல் 11ஆம் தேதிக்கான எபிசோடில் பாக்கியாவின் ரெஸ்டாரண்டை வாங்குவதற்காக ஏமாற்றிக் கொண்டிருக்கும் சுதாகரை குடும்பத்தினர் முன்பு பாக்கியா சிக்க வைத்திருக்கிறார். அதே நேரத்தில் ஆகாஷை நான் இன்னும் மறக்கவில்லை என இனியா பீல் பண்ணிக் கொண்டிருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பாக்யா சுதாகர் மீது சொன்ன குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக கோபி சுதாகர் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு சுதாகர் நான் ரெஸ்டாரண்டை எழுதி தந்தால் தான் கல்யாணத்தை நடத்த விடுவேன் என்று மிரட்டவில்லை சம்மந்தி தப்பா புரிஞ்சுகிட்டாங்க. குழந்தைகளின் எதிர்காலத்திற்காக தான் நான் இப்படி பேசினேன் என்று சமாளித்து விடுகிறார். இதனை கோபியும் நம்பி சந்தோஷப்படுகிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

சோகத்தில் இனியா

மறுபக்கத்தில் இனியா ரெடியாகி கொண்டிருக்கிறார். அப்போது இனியா சோகமாக இருப்பதை பார்த்து ஜெனி என்ன ஆச்சு எதுக்காக சோகமா இருக்க என்று விசாரிக்கிறார். அதற்கு இனியா அம்மா வந்துட்டாங்களா என்று கேட்க, இன்னும் வரல என்று ஜெனி சொன்னதும் எழில் அண்ணாவிடம் பேச வேண்டும் என்று சொன்னதும் அமிர்தா எழிலை கூட்டிக் கொண்டு வருகிறார்.

இனியா கேட்ட கேள்வி

அப்போது இனியாவை பார்த்ததும் எழில் நீ அழகா இருக்க என்று வர்ணித்துக் கொண்டிருக்கிறார். அதற்கு எதுவுமே பேசாமல் இருக்கும் இனியா அம்மாவோட கனவு அந்த ரெஸ்டாரன்ட் ஆனால் அவங்க அதை கேட்பது சரியா? அம்மா அந்த ரெஸ்டாரண்டை ரெடி பண்ணுவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டாங்க? அதற்காக எத்தனை நாள் தூங்காமல் இருந்து இருக்காங்க தெரியுமா? ஆனால் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ரெஸ்டாரண்ட் கேட்கிறது தப்பு தானே என்று சொல்ல, அதற்கு எழில் அதையெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம் அப்பா அதை பற்றி பேச தான் சுதாகர் சார் வீட்டுக்கு போயிருக்காரு. அதுக்கு ஒரு கிளாரிபை கிடைச்சிடும்.

Baakiyalakshmi Serial vijay TV

பாக்கியா எமோஷனல்

நீ எதைப் பற்றியும் கவலைப்படாத என்று ஆறுதல் சொல்ல அதற்கு இனியா எனக்கு ஆகாஷை நினைத்து வருத்தமா இருக்கு என்று சொல்கிறார். அதற்கு எழில் இப்ப நீ நினைக்கிறதால ஒன்னும் மாறப்போவதில்லை. ஆகாஷுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையும் என்று ஆறுதல் சொல்கிறார். பிறகு இனியா ரூமில் இருக்கும்போது அங்கு வரும் பாக்கியா இனியா அழகாக இருக்கிறார் என்று திருஷ்டி பொட்டு வைக்கிறார்.

புகழும் குடும்பத்தினர்

பிறகு குடும்பத்தினர் இனியா தேவதை மாதிரி இருக்கா என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கொஞ்ச நேரத்தில் சுதாகர் மனைவி வந்து போட்டோஸ் எடுக்க கூப்பிட்டு போகிறார். பாக்யாவின் குடும்பத்தில் இருப்பவர்கள் இனியாவை வரவேற்று மேடைக்கு அழைத்து செல்ல நிதிஷ் இனியாவிடம் ரொம்ப அழகா இருக்க இனியா, ஏற்கனவே நீ ரொம்ப அழகா இருப்ப இப்போ இந்த கெட்டப்பில் நீ ரொம்ப சூப்பரா இருக்க எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா? அழகுல மயங்கி மயக்கம் வந்துட்டா நீ என்ன பிடிச்சிக்கிறியா என்று கேட்க இனியா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

கோபத்தில் இனியா

அதற்கு நான் பேசுவது க்ரின்ஜா இருக்கா என்று நிதிஷ் கேட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு சுதாகர் நீங்க பேசுறது நாளைக்கு கூட பேசிக்கலாம் இப்போ கொஞ்சம் போட்டோவுக்கு போஸ் கொடுங்க என்று சொல்ல எல்லோரும் சிரிக்கிறார்கள். பாக்கியா குடும்பத்தினர் எல்லோருடைய சந்தோசத்தை பார்த்து என்னால யாருடைய சந்தோஷமும் கெட வேண்டாம் என்று சொல்லிவிட்டு அங்கு அந்த இடத்தை விட்டு நகர போகிறார்.

பாக்கியா சொன்ன வார்த்தை

அதை பார்த்து சுதாகர் பாக்யாவிடம் வந்து ரெஸ்டாரண்ட்... இனியா கிப்ட் என்ன ஆச்சு என்று கேட்கிறார். அதற்கு பாக்யா ரெஸ்டாரண்ட் கொடுக்கலன்னா கல்யாணத்தை நிறுத்திடுவேன்னு சொல்லுறீங்களா என்று கேட்க அப்படி எல்லாம் இல்ல. நான் அப்படி சொல்ல மாட்டேன். இது பசங்களோட வாழ்க்கை. கல்யாணத்துக்கு அப்புறம் எந்த பிரச்சனையும் வரக்கூடாதுல்ல அதுக்காகத்தான் சொல்றேன் என்று சொன்னதும் பாக்கியா நான் ரெஸ்டாரண்ட் பெயரை மாற்றுவதற்கு சம்மதிக்கிறேன், ஆனால் அதற்கு இப்பவே டாகுமெண்டில் கையெழுத்து போட்டு கொடுத்துடலாம் என்று சொன்னதும் சுதாகர் அதிர்ச்சியாகிறார்

Baakiyalakshmi Serial vijay TV

சிக்கும் சுதாகர்

ஆனாலும் அதிர்ச்சியை வெளியே காட்டிக்காமல் நிற்கிறார். பிறகு தன்னுடைய பிஏவை கூப்பிட்டு இந்த குடும்பத்துக்காரங்க ரொம்ப அலர்ட்டா இருக்காங்க . ரெஸ்டாரண்டின் பெயரை மட்டும் நமக்கு எழுதி தருவதற்காக டாக்குமெண்ட் கையெழுத்து கேக்குறாங்க. இப்போதைக்கு இவங்களை விட்டு பிடிக்கணும். இந்த இடத்தில் நாம முடியாதுன்னு சொன்னா இவங்க நம்மள பத்தி யோசிக்க தொடங்கிடுவாங்க. என்று இப்போ பாக்யா சொன்ன மாதிரி டாக்குமெண்ட் ரெடி பண்ண சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+