பாக்கியலட்சுமி: சுதாகரை கதறவிட்ட இனியா.. நித்திஷ் சுயரூபம் தெரிந்தது.. பாக்கியா கொடுத்த அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 மே 13ஆம் தேதிக்கான எபிசோடில் ரெஸ்டாரண்ட் பற்றி இனியாவிற்கு தெரிய வந்திருக்கிறது. அதை பற்றி சுதாகரிடம் கேள்வி கேட்கிறார் அதே நேரத்தில் நிதிஷ் பற்றி இனியாவிற்கு சந்தேகம் வந்திருக்கிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடில் இனியாவும் நித்திஷும் காரில் வந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது இனியா அமைதியாக இருப்பதை பார்த்ததும் நிதிஷ் என்ன ஆச்சு என்று விசாரிக்கிறார். அதற்கு நீங்கள் ஏன் என்கிட்ட பொய் சொன்னீங்க, உங்க சித்தப்பா அடுத்த வாரம் தானே ஊருக்கு கிளம்புறாராம்? ஆனா நீங்க இன்னைக்கு நாளைக்கு போறதா சொல்றாங்க என்று கேட்க நிதிஷ் எனக்கு அப்படித்தான் சொன்னாங்க. அங்க போன பிறகுதான் எனக்கே தெரியும் டாடி பேசுவதை மீறி என்னால் ஒன்னும் பண்ண முடியாது, நீயும் அப்படித்தான் இருக்கனும்ன்னு புரிஞ்சுதா என்று கோபப்படுகிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

நித்திஷ் கொடுத்த அதிர்ச்சி

இனியா பதில் பேசாமல் அமைதியாக இருக்க காரை வேகமாக ஓட்டுகிறார். அடுத்ததாக இனியா எழிலுடன் பாக்யாவின் ஹோட்டலுக்கு வர ஹோட்டலை பார்த்து இனியா அதிர்ச்சியடைந்து நிற்கிறார். என்ன அண்ணா அம்மா பெரிய ரெஸ்டாரண்ட் ஓபன் பண்ணி இருப்பாங்கன்னு நினைச்சேன், ஆனா இப்படி சின்னதா ஒரு மெஸ் தொடங்கி இருக்காங்க என்று கேட்க, எழில் அம்மாகிட்ட கேட்டுக்கோ என்று இதில் சமாளித்து விடுகிறார்.

பாக்கியா கொடுத்த விளக்கம்

இனியாவை பார்த்ததும் பாக்கியா கட்டியணைத்து வரவேற்கிறார். அப்போது நீ எதுக்கு இவ்வளவு சின்ன இடமா ரெஸ்டாரன்ட் பண்ணி இருக்கிற என்று கேட்க, பாக்யா ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார். அப்போது செல்வி உண்மையை சொல்ல வரும்போது அவரை சொல்ல விடாமல் பாக்கியா தடுத்து வருகிறார். பிறகு இனியாவை அங்கிருந்து பாக்கியா அனுப்பி வைக்கிறார். பிறகு இனியா எழில் உடன் பைக்கில் வரும்போது குடும்பத்தை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார். ஆனால் இனியா ஒரு இடத்தில் பைக்கை நிறுத்த சொல்லி ரெஸ்டாரண்ட் என்ன ஆச்சு என்று கேள்வி மேல் கேள்வி கேட்க எழில் நடந்த விஷயத்தை எல்லாம் சொல்கிறார்.

இனியா கேட்ட கேள்வி

இதனால் கோபமான இனியா மீண்டும் ரெஸ்டாரண்டுக்கு எழிலை கூட்டிக்கொண்டு வருகிறார். அங்கு பாக்யாவை பார்த்து கட்டிப்பிடித்து அழுது கொண்டிருக்கிறார். எனக்காக நீ எதற்கு உன்னுடைய ரெஸ்டாரண்டை இழந்த ரெஸ்டாரண்ட் கொடுத்தாதான் கல்யாணம் நடக்கும்னு சொன்னாங்களா? என்று கேட்க, அதற்கு பாக்கியா இல்லை நான் உனக்காகத்தான் கிப்டாக கொடுத்தேன் என்று சமாளிக்கிறார். ஆனாலும் இனியா அதை நம்பாமல் உன்னை ஏமாற்றி வாங்கிட்டாங்களா? என்று பேசிக் கொண்டிருக்க பாக்கியா அப்படியெல்லாம் இல்லை என்று சமாளித்து அனுப்புகிறார்.

சுதாகருக்கு அதிர்ச்சி

அடுத்ததாக இனி சுதாகர் வீட்டில் எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்போது இனியா சுதாகரிடம் அம்மாவின் ரெஸ்டாரண்டில் என்ன நடந்தது? அம்மா எதுக்காக உங்களுக்கு ரெஸ்டாரண்ட்டா எழுதி தந்தாங்க என்று கேட்டதும் சுதாகர் அதிர்ச்சியாகி இருக்கிறார். இதை எதிர்பார்க்காத நித்திஷ் கோபத்தில் இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+