பாக்கியலட்சுமி: செழியனுக்காக முட்டாள்தனமாக பேசிய ஜெனி.. பாக்யா கேட்ட கேள்வி! இனியா எடுத்த விபரீத முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 மார்ச் 14ஆம் தேதிக்கான எபிசோடில் ஆகாஷை அடித்ததற்காக செழியனை பாக்கியா அடிக்கிறார். அதனால் ஜெனி கோபப்படுகிறார். அதுபோல மொத்த குடும்பமும் பாக்கியாவிற்கு எதிராக பேசுகிறார்கள். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடில் பாக்யா செழியனை திட்டிக் கொண்டிருக்க செழியன் இன்னொரு முறை ஆகாஷ் என் தங்கச்சிக்கு போன் பண்ணுனா அவனை கொன்னு போட்டு விடுவேன் என்று சொன்னதும், பாக்யா போட்டு அடிக்கிறார். அதற்கு ஜெனி நிறுத்துங்க ஆண்ட்டி இனியா செழியன் தங்கச்சி. தங்கச்சியின் வாழ்க்கை எப்படி எல்லாம் இருக்கணும் என்று செழியன் யோசித்து இருப்பான். ஆனால் அது நடக்கல என்றதும் அவனுக்கு கோபம் வந்திருக்கும்.

அதிர்ச்சியில் பாக்கியா
அதனால் தான் அவன் அப்படி எல்லாம் பண்ணியிருக்கிறான். அதுக்காக நீங்க அடிக்கிறது தப்பு என்று சொல்ல, பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். அதற்கு ஈஸ்வரி நீ இன்னைக்கு தான் சரியா பேசி இருக்க ஜெனி என்று சொல்கிறார். பிறகு பாக்கியா செல்வி கம்ப்ளைன்ட் கொடுத்தா செழியன் நிலைமை என்ன ஆகும்னு தெரியுமா? செல்வியும் அவ மகனும் எவ்வளவு பாவம்? அவங்க அழுதுட்டு இருக்காங்க என்று கேட்கிறார்.
ஜெனி சொன்ன வார்த்தை
அதற்கு ஜெனி, செல்வி அக்கா பாவம் தான். அவங்க நல்லவங்க தான். ஆனா அவங்க பையன் நம்ம இனியா மீது ஆசை படலாமா? எனக்கும் செழியனுக்கும் எல்லா விதத்திலும் ஸ்டேட்டஸ் இக்குவல் தான். ஆனாலும் நாங்க காதலிக்கும் விஷயம் தெரிந்ததும் எங்க அப்பா செழியனை போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் கூட்டிட்டு போனாரு என்று சொல்ல, அப்போ செழியன் பண்ணுனது சரின்னு சொல்லுறியா? என்று பாக்யா கேட்க, அதற்கு அவன் தப்பு பண்ணலன்னு எனக்கு தோணுது.

ஜெனியின் மனமாற்றம்
அவன் தங்கச்சி மேல இருக்கிற பாசத்தில் தான் இப்படி எல்லாம் பண்ணி இருக்கிறான். செழியன் ஆகாஷை அடிச்சது தப்புன்னா நீங்க செழியனை அடிப்பதும் தப்பு தானே? என்று கேட்க, பாக்யா அதிர்ச்சியில் இருக்கிறார். பிறகு எல்லோரும் அங்கிருந்து கிளம்பியதும் பாக்கியா எழிலிடம் என்னடா எல்லாரும் இப்படி பேசுறாங்க என்று ஃபீல் பண்ணி பேசிக் கொண்டிருக்கிறார்.
கதறி அழும் இனியா
அடுத்த கட்டத்தில் இனியா அழுது கொண்டிருக்க பாக்கியா சமாதானம் செய்கிறார். அப்போது ஆகாஷ் நிலைமை எப்படி இருக்கிறது? நீ பேசக்கூடாது பார்க்க கூடாதுன்னு சொன்ன பிறகு நான் அவன்கிட்ட பேசலம்மா. ஆனால் எல்லாரும் இப்படி பண்ணுறது கஷ்டமா இருக்கு. அவன் எந்த இடத்திலும் தொந்தரவு பண்ணல. நான் தான் அவன் கிட்ட என்னுடைய காதலை சொன்னேன்.

எழில் செய்த செயல்
அவன் ரொம்பவே பயந்துட்டு தான் இருந்தான். இப்போ அவன் நிலைமையை நினைச்சா எனக்கு குற்ற உணர்ச்சியா இருக்கு என்று அழுது கொண்டு இருக்க, பாக்கியா சமாதானம் செய்கிறார். அடுத்ததாக எழில் ஆகாஷை பார்ப்பதற்கு ஹாஸ்பிடலுக்கு போகிறார். அங்கு ஆகாஷ் எழிலை பார்த்ததும் பயப்படுகிறார். சாரி அண்ணே நான் தெரியாம பண்ணிட்டேன் என்று பயந்து கொண்டு இருக்கிறான்.
பயப்படும் ஆகாஷ்
அதைப் பார்த்த செல்வி பாத்தீங்களா என் பையன் எப்படி பயந்து இருக்கான் என்று அழுது கொண்டு இருக்க, எழில் செல்வி மற்றும் ஆகாஷுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு சாப்பாடு வாங்கிக் கொடுத்துவிட்டு அங்கேயே இரவு முழுக்க இருக்கிறார். பிறகு அடுத்த நாள் காலையில் வீட்டிற்கு எழில் வரும்போது கோபி எங்க போயிட்டு வர நைட்டு வீட்டுக்கு வரலையா என்று கேட்க, எழில் எதுவும் சொல்லாமல் இருக்கிறார்.
கோபி போட்ட ரூல்ஸ்
கோபி மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்க நான் ஆகாஷை பாத்துட்டு நைட் அங்க தான் இருந்துட்டு வரேன் என்று சொன்னதும் ஈஸ்வரி கோபமாகி கத்துகிறார். கோபி இனி யாரும் அந்த செல்வியையும் அவன் மகனையும் பார்க்க போகக்கூடாது என்று ரூல்ஸ் போடுகிறார். இதனால் வீட்டில் எல்லோரும் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இனியா எடுத்த முடிவு
அப்போது இனியா நான் தான் இத்தனை பிரச்சனைக்கும் காரணம். ஆகாஷ் வேண்டாம் என்ற சொல்ல சொல்ல நான் தான் அவன் கிட்ட பேசினேன். அம்மாகிட்ட அவனை பார்க்க மாட்டேன், பேச மாட்டேன்னு சத்தியம் செஞ்ச பிறகு நான் பேசாம தான் இருக்கிறேன். நீங்க இனி அவனை போய் அடிக்காதீங்க. என்னை வேணா அடிங்க. நான் இங்கே இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலைன்னா சொல்லுங்க நான் எங்கேயாவது போயிடுறேன் என்று அழுது கொண்டிருக்கிறார். இப்படியாக இன்று எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications