பாக்கியலட்சுமி: நிதிஷ் செய்த மோசமான செயல், அதிர்ச்சியில் இனியா.. ஈஸ்வரி எடுத்த எதிர்பாராத முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஜூன் 16ஆம் தேதிக்கான எபிசோடில் நிதிஷ் போதை பொருள் பயன்படுத்தியதை பார்த்து இனியா அதிர்ச்சி அடைகிறார். அதே நேரத்தில் கோபியின் வாழ்க்கைக்காக ஈஸ்வரியும் முக்கிய முடிவு எடுத்திருக்கிறார். பல நாட்களுக்குப் பிறகு மீண்டும் ராதிகா கம்பேக் கொடுத்து இருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பாக்கியா தன்னுடைய ரெஸ்டாரண்டில் பாட்டு பாடுகிறவர்களுக்கு 30% தள்ளுபடி என்ற போஸ்டரை ஒட்டி அதனை போட்டோ எடுத்து இனியாவிற்கு அனுப்பி வைக்கிறார். அப்பொழுது இனியா வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போது பாக்யாவே போன் பண்ணி விஷயத்தை சொன்னதும் இனியா சூப்பர் ஐடியா என்று பாராட்டுகிறார்.

ஈஸ்வரியின் பிளான்
மறுபக்கத்தில் ஈஸ்வரி கோபியை இப்படி விட்டுற முடியாது. அவனுக்கு ஏதாவது பண்ணி ஆகணும் என்று ராதிகாவுக்கு போன் பண்ணி இருக்கிறார். ஈஸ்வரி ராதிகாவுக்கு போன் செய்ததும் ராதிகா கொஞ்ச நேரம் யோசித்து விட்டு பிறகு போனை எடுக்கிறார். அப்போது ஈஸ்வரி கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு என்ன விஷயமா போன் பண்ணுனீங்க என்று விசாரிக்க அதற்கு நீ பெங்களூர்ல தான் இருக்கியா என்று ஈஸ்வரி கேட்கிறார்.
புது ஆஃபர்
பிறகு இல்லை சென்னையில் இருக்கிறேன் என்று சொன்னதும் அப்போ உன்னன நான் சந்திக்கிறேன் என்று ஈஸ்வரி சொல்ல சரி என்று ரெஸ்டாரண்டுக்கு வர சொல்கிறார். மறுபக்கத்தில் பாக்யாவும் செல்வியும் பேசிக்கொண்டிருக்கும் போது கவுன்சிலர் அங்கு வருகிறார். பாக்கியா ஒட்டி இருக்கும் போஸ்டரை பார்த்து பாட்டு பாடுனா 30% தள்ளுபடியா? அப்போ நாங்க நல்லாவே பாட்டு பாடுறோம் என்று பாட்டு பாடி கைதட்டி டான்ஸ் ஆடுகின்றனர்.
பாக்யாவின் சாமர்த்தியம்
அதை பார்த்து பாக்யா நல்லா இருக்கு சூப்பர் என்று பாராட்டி விட்டு சாப்பிடுங்க என்று சொல்ல எல்லோரும் சாப்பிடுகின்றனர். பிறகு சாப்பிட விட்டு பில் கொடுக்காமல் போக உங்களுக்கு ஆஃபர் போக மீதி இருக்கிற பிள்ளை கட்டினால் தானே கஷ்டமர் நம்புவாங்க என்று சொல்ல, அவர்களும் பணத்தை கட்டி விட்டு போகின்றனர். மறுபக்கத்தில் இனியா ரூமில் தனியாக உட்கார்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். அப்போது நிதிஷ் தள்ளாடியபடி வந்து அங்கு இருக்கும் சோபாவில் உட்கார்ந்து இருக்கிறார்.
நிதிஷ் நிலைமை
அதை பார்த்து இனியா பயந்து போய் நிதிஷுக்கு என்ன ஆச்சு என்று கேட்கிறார். நிதிஷ் எதுவும் பேசாமல் பெட்டில் படுத்து விட, அங்கு வரும் சந்திரிகா சுதாகரிடம் வந்து எது நடக்க கூடாதுன்னு நினைச்சமோ அது நடந்துடுச்சு. நிதிஷ் திருப்பியும் ட்ரக்ஸ் யூஸ் பண்றான்னு தோணுது என்று சொல்ல, அது நடக்கக்கூடாது என்று தான் நான் நினைச்சுட்டு இருந்தேன். ஆனால் எல்லாத்துக்கும் காரணம் இந்த இனியா தான் என்று சந்திரிகா இனியாவை திட்டிக் கொண்டிருக்கிறார்.
அதிர்ச்சியில் இனியா
அப்போது நிதிஷை பார்ப்பதற்காக சுதாகர் அங்கு வர சுதாகரிடம் நிதிஷ் குடிப்பாரா? அங்கிள் என்று இனியா கேட்க அவனுக்கு அந்த பழக்கம் எல்லாம் இல்லம்மா என்று சுதாகர் சமாளித்துக் கொண்டு நிதிஷை கூட்டிக்கொண்டு போகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications