பாக்கியலட்சுமி: சுதாகருக்கு பாக்யா கொடுத்த பதிலடி.. மீண்டும் கோபி வீட்டிற்கு வந்த இனியா, ஈஸ்வரி சொன்ன வார்த்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஏப்ரல் ஏழாம் தேதிக்கான எபிசோட் சுதாகர் பாக்யாவின் ரெஸ்டாரண்டை தன்னுடைய கம்பெனி பெயருக்கு மாற்றிவிட்டார் என்ற உண்மைகள் பாக்கியாவிற்க்கு தெரிய வருகிறது. இதனால் பாக்கியா என்ன முடிவெடுத்தார் என்று பார்க்கலாம்.

பாக்கியலட்சுமி சீரியலில் எதிர்பார்க்காத திருப்பங்கள் வந்து கொண்டே இருக்கிறது. நேற்று இனியாவின் திருமணம் நடைபெற்று இருக்கும் நிலையில் இன்று இனியாவை அவருடைய கணவர் வீட்டிற்கு குடும்பத்தினர் அனுப்பி வைக்கிறார்கள். பிறகு இனியாவே சுதாகர் வீட்டில் விடுவதற்காக சென்றிருந்த செழியன் மற்றும் ஜெனி இருவரும் வீட்டிற்கு கிளம்புகின்றனர். அப்போது இனியா இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு போங்க என்று சொல்கிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

மாமியார் கேள்வி

இனியாவை செழியனும் ஜெனியும் சமாதானப்படுத்திவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்கள். அடுத்த நாள் காலையில் இனியா சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது அவருடைய மாமியார் உனக்கு சமைக்க தெரியுமா என்று விசாரித்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் முதலில் எழில் போன் பண்ணுகிறார் அப்போது நான் சாப்பிடுகிறேன் என்று இனியா சொன்னதும் போனை வைத்து விடுகிறார். அடுத்ததாக கோபியும் செழியனும் போன் செய்கிறார்கள். அவர்களிடமும் நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் என்று இனியா சொல்ல அவர்களும் சரி என்று போனை வைக்கிறார்கள்.

ஆகாஷ் கேட்ட கேள்வி

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சுதாகர் உன்மேல குடும்பத்தினருக்கு ரொம்ப பாசமா என்று கேட்க ஆமா என்று இனியா சொல்கிறார். பிறகு இந்த பாசம் எவ்வளவு இருக்கிறது என்று நாளைக்கு தெரியும் என்று சுதாகர் மனதிற்குள்ளே நினைத்துக் கொள்கிறார். மறுபக்கத்தில் செல்வி தன்னுடைய மகனை கோச்சிங் கிளாசுக்கு சேர்க்கிறார். ஆனால் ஆகாஷ் வீட்டில் இருந்தே படிக்கிறேன் எங்கே கோச்சிங் கிளாசுக்கு கட்ட வேண்டிய பீஸ் தொகை உன்கிட்ட இருக்காது என்று சொல்ல அதற்கு செல்வி என்னுடைய நகைகளையும் தங்கச்சியை நகைகளையும் நான் அடகு வைத்திருக்கிறேன் நீ இனி ஒழுங்கா படி.

பீல் பண்ணும் செல்வி

நான் மீண்டும் மீண்டும் சொல்லுறேன்னு நினைக்காத, முதலில் இனியாவை ஆசைப்பட்ட ஆனால் அது நடக்கல. இப்போ இனியாவுக்கு கல்யாணம் முடிஞ்சிடுச்சி. நான் தூக்கி வளர்த்த பொண்ணு கல்யாணத்தில் கூட என்னால் போக முடியாம ஆகிடுச்சு. வேலைக்காரி பையன்னு உன்னை எல்லாரும் அசிங்கப்படுத்துனாங்க. இனி என்னை கலெக்டருடைய அம்மா என்று சொல்லவேண்டும் இது ஒன்னு தான் என்னுடைய ஆசை அதை நீ தான் நிறைவேத்தனும் என்று எமோஷனலாக பேசிக்கொண்டு இருக்கிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

சுதாகர் செய்த செயல்

அதை தொடர்ந்து பாக்யா ரெஸ்டாரண்டுக்கு வருகிறார். அங்கு செல்வி வரவில்லை என்பதால் அது பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறார். அப்போது சுதாகர் தன்னுடைய ஆட்களுடன் ஜூஸ் போடுங்க என்று அதிகாரமாக சொல்கிறார். பிறகு அதில் வித்தவுட் ஐஸ் என்று சொல்லி இருக்கிறார் . ஆனால் ஜூஸ் கொண்டு வந்த பிறகு சுகர் போடப்பட்டருக்கிறது என்று வாக்குவாதம் செய்கிறார். அதற்கு பாக்கியா பதிலடி கொடுக்கிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

ஏமாற்றிய சுதாகர்

அதை தொடர்ந்து சரி நான் வந்த விஷயத்தை சொல்லுறேன் என்று சுதாகர் பாக்யா கையெழுத்து போட்டுக் கொடுத்த பத்திரத்தை கொடுக்க அதில் இனியாவிற்கு பாக்கியா தன்னுடைய ரெஸ்டாரண்டை கொடுத்துவிட்டார் என்று இருக்கிறது. அதை பார்த்ததும் பாக்கியா அதிர்ச்சி ஆகிறார். நான் இப்படி எழுத சொல்லவே இல்லையே பெயரை மட்டும் தானே மாற்ற சரி என்று சொன்னேன் ஆனால் இப்படி எழுதி வச்சிருக்கீங்க என்று கேட்க அதற்கு சுதாகர் திமிராக பேசிக்கொண்டு இருக்கிறார்.

அதிர்ச்சியில் பாக்யா

நான் உங்களிடம ரெஸ்டாரன்ட் கேட்டு வந்த அப்போவே இந்த கம்பெனியை எங்களுக்கு தந்து இருக்கலாம் ஆனால் இப்போ பைசா செலவு இல்லாம எங்க கம்பெனிக்கு மாறிட்டு என்று சொல்கிறார். அதோடு இனி பாக்யாவிற்கு இந்த ரெஸ்டாரண்டுக்கு சம்பந்தம் இல்லை என்று சுதாகர் சொன்னதை கேட்டு பாக்கியா அதிர்ச்சியில் இருக்கிறார்.

இனியாவின் வருகை

அதை தொடர்ந்து அடுத்ததாக பாக்கியா வீட்டிற்கு சோகமாக வருகிறார். சுதாகர் பேசிய விஷயங்கள் எல்லாவற்றையும் நினைத்து பார்த்துக் கொண்டே வீட்டிற்கு வருகிறார். அப்போது இனியா வீட்டிற்கு வந்து இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+