பாக்கியலட்சுமி: எழில், செழியனுக்கு ஏற்பட்ட சண்டை.. ஈஸ்வரி எடுத்த முக்கிய முடிவு.. அதிர்ச்சியில் பாக்யா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 மார்ச் 17ஆம் தேதிக்கான எபிசோடில் எழில் மற்றும் செழியன் இருவருக்கும் இடையே சண்டை ஏற்படுகிறது. அப்போது ஈஸ்வரி முக்கிய விஷயம் ஒன்றை சொல்கிறார். அதேபோல வீட்டில் நடக்கும் செயல்களை பார்த்து பாக்கியா அதிர்ச்சி அடைகிறார்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் செல்வி, ஆகாஷ் உடன் ஹாஸ்பிட்டலில் இருக்கும்போது பாக்கியா இரண்டு பேருக்கும் சாப்பாடு எடுத்துட்டு வருகிறார். அப்போது செல்வி முதலில் வேண்டாம் என்று சொல்கிறார். ஆனாலும் பாக்கியா சாப்பிடு என்று சொல்லிவிட்டு ஆகாஷிடம் நலம் விசாரிக்கிறார். பிறகு நாளைக்கு என் பையனுக்கு எக்ஸாம் இருக்கு இந்த கைய வச்சிட்டு எப்படி எக்ஸாம் எழுத போறான்னு தெரியல என்று செல்வி அழுது கொண்டு இருக்க செல்விக்கு ஆறுதல் சொல்கிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

பாவம் செல்வி

பிறகு ஹாஸ்பிடலில் ஆகாஷுக்கு பில் கட்ட சொல்லி வருகிறது. அதை கட்டியாச்சா என்று பாக்யா கேட்க, இல்லை என்று செல்வி செல்கிறார். ஹாஸ்பிட்டலின் மொத்த செலவையும் நானே பார்த்துக்கொள்கிறேன் என்று பாக்யா சொல்ல செல்வி வேண்டாம் என்று சொல்கிறார். ஆனாலும் பாக்கியா பணத்தை கட்டி விட்டு வருகிறார்.

மறுபக்கத்தில் செழியன் கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது அமிர்தா ஜெனியிடம் நான் ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா என்று கேட்க, வேண்டாம் நானே முடிச்சிட்டேன் என்று சொல்கிறார். பிறகு நான் உங்களிடம் ஒன்று கேட்பேன் நீங்க தப்பா நினைச்சுக்க மாட்டீங்களா? நான் வரதுக்கு முன்னாடி இந்த வீட்டில் நீங்க இருக்கீங்க அம்மா எப்பவும் நியாயமா பேசுவாங்கன்னு உங்களுக்கு தெரியாதா? அப்புறம் எதுக்கு நீங்க அம்மாவ புரிஞ்சுக்காம பேசினீங்க என்று கேட்கிறார்.

திடீர் வாக்குவாதம்

அதற்கு ஜெனி நான் யார் மேலயும் கோபப்படல எனக்கு எந்த வன்மமும் கிடையாது. இனியா விஷயமோ ஆகாஷ் விஷயத்தையும் பற்றியோ நான் பேசறது தப்புன்னு சொல்லல. ஆனா அத்தனை பேரு முன்னாடி செழியனை அடிச்சது தப்பு தானே என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ஈஸ்வரி வந்து என்ன பிரச்சனை என்று கேட்க, நடந்த பிரச்சனையை ஜெனி சொல்கிறார்.

உடனே ஈஸ்வரி வழக்கம்போல அமிர்தாவை திட்ட தொடங்கி விட்டார்‌. உன்னை போல ஒன்னும் இல்லாதவளை இந்த வீட்டில் வரிசையாக கொண்டுட்டு வரணுமா என்று அவமானப்படுத்தி பேசிக் கொண்டிருக்கிறாார். அந்த நேரத்தில் பாக்கியா வீட்டிற்கு வருகிறார். பாக்யா என்ன ஆச்சு என்று கேட்க, நடந்த பிரச்சனைகளை ஒன்றுக்கு இரண்டாக ஈஸ்வரி சொல்கிறார்.

அமிர்தா ஜெனி சண்டை

உன்னால தான் அமிர்தா ஜெனிக்கு சண்டை வந்துடுச்சு என்று சொன்னதும் பாக்கியா இனி இதைப்பத்தி யாரும் பேச வேண்டாம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து போகிறார். அப்போது அமிர்தா பாக்யாவிடம் மன்னிப்பு கேட்கிறார். என்னால தான் இப்போ பிரச்சனை ஆயிடுச்சு நான் அன்னைக்கு நடந்ததை பத்தி பேசி இருக்க கூடாது என்று சொல்ல இனி இந்த விஷயத்தை பற்றி பேசாத அமிர்தா கொஞ்ச நாள் போகட்டும் என்று பாக்கியா சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அதை தொடர்ந்து பாக்யாவும் எழிலும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது எழில் செழியன் இடம் நீ பேச்சுவார்த்தையோடு நிறுத்தி இருக்கலாம் என்று கேட்க, அதற்கு செழியன் கோபப்படுகிறார். அவனுக்கு நம்மளை பார்த்தா பயம் வரணும் என்பதற்காகத்தான் இப்படி பண்ணினேன். ஆனா நீயும் அம்மாவும் போய் அவனை பார்த்துட்டு பேசிட்டு வரீங்க அப்புறம் எப்படி அவனுக்கு பயம் இருக்கும் என்று சொல்ல எழில் கோபப்படுகிறார்.

எழில் செழியன் வாக்குவாதம்

அந்த நேரத்தில் கோபி வந்துவிட வழக்கம்போல செழியனுக்கு சப்போர்ட் பண்ணி பேசுகிறார். ஒரு கட்டத்துக்கு மேல் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட இப்படியே பேசிட்டு இருந்தா உன்னையும் அடிக்க வேண்டியது இருக்கும் என்று செழியன் சொல்ல அடிச்சிடுவியா அடிச்சிடுவியா என்று அடிக்கப் போகிறார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது.

அப்போது கோபி இருவரையும் சமாதானம் செய்து செழியனை கூட்டி சென்று விட பாக்கியா எழிலிடம் இதுக்கு மேல எதுவும் பேச வேண்டாம் அமைதியா இரு என்று சொல்கிறார் மறுநாள் காலையில் பாக்கியா கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது ஈஸ்வரி வருகிறார்.

ஈஸ்வரி எடுத்த முடிவு

எல்லாரும் டைனிங் ஹாலில் உட்கார்ந்திருக்கின்றனர். அவர்களிடம் உங்களுக்கெல்லாம் இன்னைக்கு வேலை இருக்கா என்று ஈஸ்வரி கேட்க எல்லோரும் வேலை இருக்கு என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அதற்கு ஈஸ்வரி இன்னைக்கு யாரும் வேலைக்கு போக வேண்டாம் நம்ம வீட்டுக்கு சொந்தக்காரங்க வராங்க என்று சொன்னதும் யார் வராங்க என்று கோபி கேட்க, நம்ம சொந்தக்காரங்க வராங்க இன்னைக்கு எல்லாரும் வீட்டில் இருக்கணும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+