பாக்கியலட்சுமி: ஈஸ்வரி எடுத்த விபரீத முடிவு.. கோபத்தில் பாக்யா, இனியாவின் மனமாற்றம்.. கோபி அடித்த பல்டி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 மார்ச் 18ஆம் தேதிக்கான எபிசோடில் இனியாவை பொண்ணு பார்க்க வருவதை தெரிந்து கொண்ட பாக்கியா கோபப்படுகிறார். அப்போது என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ஈஸ்வரியிடம் யாரு வராங்க என்று கோபி கேட்டதும் ஈஸ்வரி அவரை தனியாக கூட்டிட்டு போய் இனியாவை பொண்ணு பார்க்க வரும் விஷயத்தை சொல்கிறார். அதனால் கோபி எதுக்குமா இவ்வளவு சீக்கிரமா அவளுக்கு கல்யாணம் பண்ணனும்? அவ படிச்சுட்டு இருக்கா எதுவுமே தெரியாம அவசரப்பட்டு இப்போ இந்த முடிவு எடுக்கணுமா? என்று கேட்கிறார்.

ஈஸ்வரியின் பிளான்
அதற்கு ஈஸ்வரி நான் நல்லா விசாரிச்சுட்டேன் இனியாவிற்கு இப்போ உடனே திருமணம் செய்து வைக்கப் போறது கிடையாது. அவளுக்கு எங்கேஜ்மென்ட் மட்டும்தான் இப்போ செய்ய போறோம். படிச்சு முடிச்ச பிறகு கல்யாணம் செஞ்சுக்கலாம் என்று சொன்னதும், கோபி பாக்கியா கிட்டகூட சொல்லாம எப்படி என்று கேட்க பாக்கியா கிட்ட சொன்னா அவ ஏதாவது பேசி பிரச்சனையா மாத்திடுவா. அதனால எதுவும் சொல்ல வேண்டாம்.
கோபத்தில் ஈஸ்வரி
சாயங்காலம் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்த பிறகு பேசிக்கலாம் என்று சமாளிக்கிறார். அப்போது கோபி இனியா ஆகாஷ் கிட்ட பேச மாட்டேன் என்று சத்தியம் பண்ணி கொடுத்து இருக்கிறா. அவளை நான் கவனிக்கிறேன் திரும்பவும் ஆகாஷ் கிட்ட பேசுற மாதிரி இருந்தா இதை பத்தி யோசிக்கலாம் என்று சொல்ல, அதற்கு ஈஸ்வரி கோபம் ஆகிறார்.
ஈஸ்வரி கொடுத்த விளக்கம்
இனியா ஒன்னும் தப்பு பண்ணாத பொண்ணு கிடையாது. ஒருவாட்டி தப்பு பண்ணிட்டு நான் இதுக்கு மேல எந்த தப்பும் பண்ணவே மாட்டேன்னு சொல்லுவா. ஆனா அதைவிட பெருசா பண்ணிட்டு வந்து நிப்பா. அதே மாதிரி தான் இப்ப வரைக்கும் நடந்துட்டு இருக்கு. ஒரு நாள் ஆகாஷை கல்யாணம் பண்ணிட்டு வந்து மாலையும் கழுத்தும்மா நின்னா என்ன பண்ணுவ என்று கேட்டதும், கோபி நீங்க பேச்சுக்கு கூட இதுபோல சொல்லாதிங்க அம்மா மனசே வெடிச்சிடும் போல இருக்கு எனக்கு என சொல்கிறார்.
பயத்தில் கோபி
அதற்கு ஈஸ்வரி எனக்கும் தான் இப்படி சொல்ல வாய் கூசுது, அப்படி நடந்தால் என்ன பண்ணுவ என்று ஈஸ்வரி கேட்டதும் கோபி ஈஸ்வரியின் முடிவுக்கு சம்மதம் சொல்லி விடுகிறார். பிறகு ஈஸ்வரி மற்றும் கோபி ஹாலில் உட்கார்ந்து கொண்டிருக்கும்போது இனியா கிச்சனில் நிற்கிறார். அப்போது அவரை கூப்பிட்டு என்ன ட்ரெஸ் போட்டு இருக்க? என்று சொல்ல, எதுக்கு பாட்டி வீட்டில் தானே இருக்கிறேன் என்று இனியா சொல்ல,
சொந்தக்காரங்க வராங்க நல்ல டிரஸ்ஸா போட்டுட்டு வா என்று ஈஸ்வரி சொல்ல, என்னை பார்க்கவா வராங்க என்று இனியா கேட்க நீ சொன்னா செய்வியா இல்லையா என்று கோபப்பட்டதும் சரி என்று இனியா போய்விடுகிறார். அப்போது பாக்கியா ஈஸ்வரியிடம் இது பற்றி பேச வர அப்போது அந்த நேரத்தில் இனியாவை பெண் பார்க்க ஆட்கள் வந்து விடுகிறார்கள். இதனால் பாக்கியாவால் எதுவும் பேச முடியாமல் போய்விடுகிறது.
மாப்பிள்ளை வீட்டார் வருகை
குடும்பத்தினர் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும்போது, வீட்டில் இருப்பவர்களுக்கு எதுவும் புரியாமல் நின்று கொண்டிருக்கிறார்கள். பிறகு ஜெனியிடம் இனியாவை கூட்டிட்டு வா என்று சொல்லும் போது தான் அனைவருக்கும் உண்மை தெரிகிறது. உடனே ஜெனியும், அமிர்தாவும் இனியாவை கூட்டிக்கொண்டு வர மாப்பிள்ளை வீட்டுக்காரர்களுக்கு இனியாவை பிடித்து விடுகிறது.
குடும்பத்தினருக்கு அதிர்ச்சி
அப்போது ஈஸ்வரி உங்களுக்கும் பொண்ணை பிடிச்சிருக்கு, எங்களுக்கும் பையனை பிடிச்சிருக்கு நிச்சயம் பண்ணிடலாம் என்று சொன்னதும் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். நாங்க நாளைக்கு ஊருக்கு போகணும் அதற்குள் எங்கேஜ்மென்ட் செய்து முடித்துவிடலாம் என்று மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் சொல்லிவிட்டு கிளம்புகிறார்கள்.
ஈஸ்வரியின் திமிர் பேச்சு
அவர்கள் போனதும் பாக்கியா ஈஸ்வரியிடம் கோபப்பட அதற்கு ஈஸ்வரி சமாளிக்கிறார். செழியன், எழில் என எல்லோரும் ரவுண்டு கட்டி ஈஸ்வரியிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்க, அதற்கு ஈஸ்வரி எனக்கு எல்லாம் தெரியும் உங்ககிட்ட எல்லாம் கேட்டுட்டு தான் நான் எதுவும் செய்ய வேண்டும் என்று அவசியம் கிடையாது.
கோபியின் மனமாற்றம்
உன்னுடைய முடிவு மேல எனக்கு எந்த நம்பிக்கையும் இல்ல. அதனால் நான் சொல்வதுதான் இந்த வீட்டில் நடக்கணும் என்று சொல்லி விட்டுப் போகிறார். இதனால் பாக்கியா கோபமாகி கோபியிடம் உங்க அம்மா இப்படி பேசிட்டு இருக்காங்க நீங்க எதுவும் சொல்ல மாட்டீங்களா? என்று கேட்க, அதற்கு கோபி அம்மா சொல்றதும் தப்புன்னு தெரியல என்னைக்கா இருந்தாலும் குழந்தைக்கு கல்யாணம் பண்ணி தான பார்க்கணும் என்று சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications