பாக்கியலட்சுமி: பிளாக்மெயில் செய்த ஈஸ்வரி.. மாறும் இனியா..செல்வி வீட்டில் பாக்யா, ஆகாஷ் கேட்ட கேள்வி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 மார்ச் 19ஆம் தேதிக்கான எபிசோடில் இனியாவின் திருமணத்திற்கு பாக்யா சம்மதம் தெரிவிக்காததால் ஈஸ்வரி பிளாக் மெயில் செய்கிறார். அதனால் இனியா மனம் மாறுகிறார். இதனால் நடந்த சம்பவங்கள் என்ன என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ஈஸ்வரி நாளைக்கு இனியாவிற்கு நிச்சயதார்த்தம் நடக்கும் என்று சொன்னதும் பாக்கியா, எனக்கு இதில் விருப்பம் கிடையாது அவங்க கிட்ட போன் பண்ணி எதுவும் நடக்காது என்று சொல்லுங்கள் என்று சொல்ல, எதுக்கு சொல்லணும் என்று ஈஸ்வரி கேட்க, எனக்கு முன்ன பின்ன தெரியாதவர்களுக்கு என் பொண்ணை கட்டி கொடுக்க விருப்பம் இல்ல.

ஈஸ்வரியின் பிடிவாதம்
அதுவும் இல்லாம இனியாவிற்கு வந்தது எல்லாருக்கும் வயசுல வர பிரச்சனை தான். அதுக்கு நம்ம என்ன பண்ணனும், பண்ண கூடாதுன்னு சொன்னா அவங்க புரிஞ்சுக்குவாங்க. அவளுக்கு இப்போ கல்யாணம் தேவையில்லை என்று சொன்னதும், எழில் தப்பு பண்ணுனா கல்யாணம் பண்ணி வச்சிரணும்னு சொன்னது எல்லாம் அந்த காலம் பாட்டி? இப்போ அப்படி எல்லாம் இல்லை என்று சொல்ல, அதற்கு டைரக்டர் நீங்க எழுதுற கதை உங்க படத்தோட வச்சுக்கோங்க என்று எழில் வாயை அடைக்கிறார்.
அடுத்ததாக நீங்க பண்றது தப்பு பாட்டி என்று ஜெனி சொன்னதும், அன்று எங்களுக்கு சப்போர்ட் பண்ணுன, இன்னைக்கு உன் மாமியாருக்கு சப்போர்ட் பண்ணுறியா? ஒரு பக்கமா இருக்க மாட்டியா என்று கேட்க, இது வீடு தானே எந்த பக்கம் நியாயம் இருக்கோ அதை தான் நானும் சொல்கிறேன் என்று சொல்கிறார்.
பாக்கியா பதிலடி
அதற்கு செழியன் இப்போ இனியாவுக்கு கல்யாணம் பண்ணனும் என்ற அவசியமே இல்ல பொறுமையா பண்ணிக்கொள்ளலாம் பாட்டி என்று சொன்னதும் எல்லாரும் நீங்க எனக்கு எதிராக பேசிக்கிட்டு இருந்தாலும் அதை பற்றி நான் கவலைப்பட மாட்டேன். கண்டிப்பா இந்த எங்கேஜ்மென்ட் நடக்கும் என்று சொல்ல, அதற்கு பாக்கியா நீங்க உங்க பையனோட வாழ்க்கையில் முடிவெடுக்கிறிங்க அதோட நிறுத்திக்கோங்க என்னுடைய பொண்ணு விஷயத்துல தலையிடற வேலை வச்சுக்காதீங்க என்று கோபப்பட்டு இனியாவை அங்கிருந்து கூட்டி சென்றுவிடுகிறார்.
பிறகு ஈஸ்வரி கோபியிடம் நாளைக்கே பட்டுப் புடவை எல்லாம் எடுக்க முடியாது. அதனால இனியா கிட்ட இருக்கிற ஒரு நல்ல டிரஸையே போட்டுக்க சொல்லு என்று சொல்ல, அதற்கு கோபி பாக்கியா உறுதியா வேண்டாம்னு சொல்லும் போது எப்படிம்மா என்று கேட்க, அதற்கு ஈஸ்வரி தன்னுடைய முடிவில் உறுதியாக இருப்பதாக சொல்கிறார்.
இனியாவின் குழப்பம்
அடுத்ததாக ஈஸ்வரி ரூமில் உட்கார்ந்து கொண்டிருக்கும் போது இனியாவை கூட்டிக்கொண்டு கோபி வருகிறார். ஈஸ்வரி கோபியிடம் மாப்பிள்ளை வீட்டில் இருந்து போன் பண்ணி இருந்தாங்க. இனியாவை ரொம்ப பிடிச்சிருக்கு என்று சொன்னாங்க என சொல்ல, அதற்கு இனியா திடீர்னு வந்தாங்க நிச்சயம் கல்யாணம் எல்லாம் பேசுறீங்க எனக்கு பயமாயிருக்கு என்று சொல்ல, பயப்பட என்ன இருக்கு இனியா நீ இந்த பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டா வாழ்க்கையில் ரொம்ப சந்தோஷமா இருக்கலாம்.
மனதை மாற்றும் ஈஸ்வரி
அங்கு நிறைய சொத்து சுகம் எல்லாம் இருக்கு. நம்மளோட சொந்தக்காரங்க உன்னை நல்லா பாத்துக்குவாங்க அதோட நீ செஞ்ச வேலையால உங்க அப்பாவுக்கு நிம்மதி இல்லாம போயிடுச்சு அவன் இதை நினைச்சு பயந்துக்கிட்டே இருக்கான். அவனுக்கு ஏதாவது ஆயிடுமோன்னு எனக்கு பயமா இருக்கு. ஏற்கனவே ஒருவாட்டி செத்து பிழைத்து இருக்கிறான்.
உங்க அம்மா அவனை வீட்டை விட்டு வெளியே போனு சொல்லிக்கிட்டு இருக்கா. உங்களால அவனுக்கு மாத்தி மாத்தி பிரச்சனை. அவனுக்கு இன்னொரு வாட்டி ஹார்ட் அட்டாக் வந்தா அவனும் செத்து போயிடுவான். அவன் இல்லாத வாழ்க்கையில் நானும் இருக்க மாட்டேன் என்று சென்டிமென்டாக பேச இனியா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்.
புலம்பும் இனியா
அடுத்த கட்டத்தில் பாக்யாவிடம் நான் ஒரு தப்பு பண்ணுனேன், அதை புரிஞ்சுகிட்டேன். இதுக்கு மேல அந்த தப்பு பண்ண மாட்டேன்னு சொல்லுறேன் ஆனா இவங்க எதுக்காக இப்படி எனக்கு தண்டனை கொடுக்குறாங்க என்று அழுது கொண்டு இருக்க, பாக்கியம் இனியாவிற்கு ஆறுதல் சொல்கிறார். பிறகு அடுத்த நாள் ஆகாஷை ஹாஸ்பிடலில் இருந்து கூட்டிக்கொண்டு வீட்டிற்கு வந்துவிடுகிறார்கள்.

ஆகாஷ் கேட்ட கேள்வி
பாக்யா செல்வி வீட்டிற்கு சென்று ஆகாஷை பார்க்கிறார். அப்போது எப்படி இருக்க என்று ஆகாஷிடம் நலம் விசாரிக்கிறார் பிறகு பாக்கியா கிளம்பும்போது இனியா எப்படி இருக்கா என்று ஆகாஷ் கேட்க, நல்லா இருக்கா நாங்க அவளை பார்த்துக்கறோம் என்று சமாளித்துவிட்டு அங்கிருந்து பாக்கியா கிளம்புகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications