பாக்கியலட்சுமி: திருமணம் பற்றி கோபியிடம் இனியா சொன்ன வார்த்தை.. பாக்யா கொடுத்த பதில்.. செம சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கான எபிசோடில் இனியாவின் திருமண விஷயம் பற்றி கோபி வீட்டில் வந்து பேசுகிறார். அப்போது இனியா யாரும் எதிர்பார்க்காத செயலை செய்கிறார். அதே நேரத்தில் பாக்கியா கோபத்தில் இருக்கிறார் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ஈஸ்வரி தனியாக உட்கார்ந்து புலம்பி கொண்டிருக்கிறார். ஒரு வயசான பொம்பள ஒருத்தி தனியா இருக்கேன்னு யாருக்காவது அக்கறை இருக்கா என்று புலம்பி கொண்டிருக்கும் போது செழியன் அங்கு வருகிறார். இப்ப தானடா போன அதுக்குள்ள மீண்டும் வந்துவிட்டா என்று ஈஸ்வரி கேட்க அப்பா தான் வர சொன்னாரு என்று செழியன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே கோபி சந்தோஷமாக வீட்டிற்கு வருகிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

சந்தோஷத்தில் கோபி

என்னப்பா விஷயம் என்று செழியன் கேட்க, இதை எப்படி சொல்றதுனே தெரியல நான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன். உங்களுக்காக ஒரு குட் நியூஸ் சொல்ல போறேன் என்று சொல்லி செழியனிடம் உனக்கு ஒரு லிங்க் அனுப்பி வைத்து இருக்கேன் செக் பண்ணுனியா என்று கேட்க, ஆமா அவர் பெரிய பிசினஸ் மேன் அவர் பெரிய பணக்காரங்க லிஸ்ட்ல இருக்காரு என்று பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்.

குழப்பத்தில் செழியன்

அதோடு அவர் கூட நீங்க ஏதாவது பிசினஸ் பண்ண போறீங்களா என்று கேட்க, இது அதைவிட ஒரு படி மேல என்று சுதாகர் நடந்து கொண்ட விஷயம் பற்றி கோபி சொல்ல ஈஸ்வரி மற்றும் செழியன் இருவரும் சந்தோஷப்படுகின்றனர். இனியாவை டிவியில் பார்த்துவிட்டு அவங்க பையன் ஆசைப்பட்டதாக சொல்றாங்க. இனியா ரொம்ப பெரிய இடத்தில் சந்தோஷமாக வாழ போறா ஆனால் உங்க கிட்ட கேட்காம நான் சம்மதம் சொல்லிட்டு வந்துட்டேன் என்று சொல்ல, அதற்கு ஈஸ்வரி நீ சம்மதம் சொல்லாம வந்து இருந்தா தான் உன்ன திட்டி இருப்பேன். நீ இப்போ நல்ல விஷயம் பண்ணி இருக்க என்று சொல்கிறார்.

மகிழ்ச்சியில் ஈஸ்வரி

அதற்கு செழியன் அம்மா இதற்கு சம்மதிப்பாங்களா? என்று கேட்க, நாம பேசி தான் ஆகணும் இனியாவோட வாழ்க்கை நல்லா இருக்கணும்னா நாம இந்த கல்யாணத்தை பண்ணி வைக்கணும் என்று கோபியும் ஈஸ்வரியும் சொல்கிறார்கள். அப்போது ஈஸ்வரி நாளைக்கு காலையில் நம்ம பாக்கியாவை பார்த்து பேசிட்டு வரலாம். நீ இனியா கிட்டயும் பேசு என்று கோபி இடம் சொல்கிறார்.

செழியன் சொன்ன வார்த்தை

மறுநாள் காலையில் செழியன் உக்கார்ந்து கொண்டிருக்கும் போது பாக்கியா வீட்டில் இருக்கிறாரா என்று கேட்டுவிட்டு ஈஸ்வரி வீட்டிற்கு வருகிறார். அப்போது எழில் மற்றும் பாக்கியா இருவரும் வேலைக்கு கிளம்புகிறார்கள். அந்த நேரத்தில் செழியன் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் என்று அவர்களை நிறுத்தி வைத்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் கோபியும் ஈஸ்வரியும் வீட்டிற்குள் வருகின்றனர்.

வீட்டுக்கு வந்த ஈஸ்வரி

அவர்களை பார்த்ததும் பாக்கியா வரவேற்கிறார். பிறகு கோபி அவரிடம் ஒரு முக்கியமான விஷயம் பேசுவதற்காக தான் இங்க வந்தேன் என்று சொல்லிவிட்டு பேச தொடங்குகிறார். ஒரு பெரிய பிசினஸ்மேன் பையன் இனியாவை டிவியில் பாத்துட்டு இனியாவை தான் கல்யாணம் பண்ணுவேன்னு சொல்லி இருக்கிறாராம் என்று சொல்ல, அதற்கு பாக்கியா இனியாவுக்கு இப்ப கல்யாணம் பண்ண அவசியம் இல்ல.

பாக்கியாவின் எதிர்ப்பு

கொஞ்ச நாள் போகட்டும் என்று பாக்கியா என்று சொல்ல, அதற்கு கோபியும் ஈஸ்வரியும் அதுதான் இனியா இப்போ படிச்சு முடிச்சுட்டு வேலைக்கு போயிட்டாளே இனி கல்யாணம் தானே பண்ணனும் என்று சொல்ல, அவ இன்னொரு டிகிரி படிக்கணும் இப்ப அவளுக்கு கல்யாணம் தேவை இல்லை என்று பாக்கியா உறுதியாக செல்கிறார். அதற்கு கோபி உன்கிட்ட இனியாவுடைய வாழ்க்கையை விட்டுட்டா நீ எதுவும் பண்ண மாட்ட. இனியா கல்யாணம் நாங்க பண்ண தான் போறோம் என்று சொல்ல பாக்கியா அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வருகிறார்.

கோபியின் அட்வைஸ்

ஆனால் போதும் நிறுத்து இதற்கு அப்புறம் உன்கிட்ட வந்து கல்யாணம் பண்ண சம்மதம் வேணும்ன்னு கேட்கல. நாங்க கல்யாணம் பண்ண போறோம் என்று சொல்ல தான் வந்து இருக்கோம் என்று சொல்லிவிட்டு வெளியே கிளம்புகிறார்கள். பிறகு கோபி இனியாவை சந்தித்து சுதாகர் பேசிய விஷயத்தை சொன்னதும் அவருடைய மகன் ஃபோட்டோவை காண்பிக்கிறார்.

இனியாவின் முடிவு

அப்போது இனியா எனக்கு இப்போ கல்யாணத்துல விருப்பமில்ல என்று சொல்கிறார். அதற்கு கோபி ஆகாஷ் பற்றி யோசிக்கிறியா? என்று கேட்க, ஆகாஷ் கதையை விடுங்க டாடி எனக்கு இப்போதைக்கு கல்யாணத்துல சுத்தமா விருப்பம் இல்ல. நான் இன்னும் படிக்கணும் பெரிய வேலைக்கு எல்லாம் போகணும் என்று சொல்லிவிட்டு கிளம்பி போகிறார்.

கோபி கேட்ட கேள்வி

உடனே கோபி பேசிட்டு இருக்கும்போது இப்படி போறது என்ன பழக்கம் இனியா உனக்கு என்ன பிரச்சனை சொல்லு என்று கேட்க இனியா ஒரு பிரச்சனையும் இல்லை எனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம் என்று முடிவாக சொல்லிவிட்டு போகிறார். பிறகு அடுத்த நாள் காலையில் இனியா, செழியன், ஜெனி, அமிர்தா எல்லோரும் வீட்டில் நடந்த பிரச்சனை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது கோபி தன்னிடம் வந்து பேசியது குறித்து இனியா சொல்கிறார். அதற்கு ஜெனி எல்லோரும் இந்த திருமணத்தில் உனக்கு விருப்பமா? என்று கேட்க, எனக்கு இப்போதைக்கு திருமணம் வேண்டாம் நான் இன்னும் படிக்கணும் வேலையில் பெர்மனண்ட் ஆகணும் ஆனா பாட்டியும் அப்பாவும் படுத்திரு அவசரத்தை பார்த்தா இந்த திருமணம் நடந்திடுமோனு பயமாயிருக்கு என்று இனியா சொல்லிக் கொண்டிருக்கிறார்.

பதறிப்போன இனியா

அப்போது அங்கு வந்து செழியன் இனியா மீது கோபப்படுகிறார். உனக்கு எவ்வளவு திமிர் வேண்டாம். உனக்காக அப்பா எவ்வளவு யோசிக்கிறாரு நீ அவரிடம் வேண்டான்னு முகத்துல அடிச்சது போல சொல்லிட்டு வந்துட்ட. நீ பேசிட்டு வந்த பிறகு மீண்டும் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆயிடுச்சு என்று சொன்னதும் இனியா பதறிப்போய் அப்பா இப்போ எங்க இருக்காங்க? எப்படி இருக்காங்க? நான் அவரை பாக்கணும் என்று கிளம்புகிறார். இதை பார்த்து பாக்கியா அதிர்ச்சியில் இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+