பாக்கியலட்சுமி: குடும்பத்தின் முன்பு சுதாகரை சிக்க வைத்த பாக்யா.. இப்போதாவது இந்த முடிவு எடுத்தாங்களே! சூப்பர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 மே ஒன்றாம் தேதிக்கான எபிசோடில் பாக்யாவுக்கு எதிராக சூழ்ச்சி செய்த சுதாகருக்கு பாக்யா சரியான பதிலடி கொடுத்திருக்கிறார். அதோடு குடும்பத்தினர் எல்லோரையும் பாக்யா லெஃப்ட் ரைட் வாங்கியிருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாக்யா தன்னுடைய ரெஸ்டாரண்டுக்கு வந்து மீதமுள்ள பொருட்களையும் எடுத்துக்கொண்டு வெளியே போகிறார். அப்போது ரெஸ்டாரண்ட் திறப்பு விழா போது நடந்த நிகழ்வுகளை எல்லாம் பாக்யா நினைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார். பிறகு பாக்யாவும் செல்வியும் பேங்க் மேனேஜரை போய் பார்க்க போகிறார்கள். அவரிடம் இன்னும் எவ்வளவு பெண்டிங் இருக்கு என்று விசாரிக்க, அதற்காக கிட்டத்தட்ட 40 லட்சம் கிட்ட இருக்கிறது என்று சொல்கிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

வீட்டுக்கு வந்த சுதாகர்

பிறகு பாக்கியாவும், செல்வியும் வெளியே வரும்போது இந்த கடனை எல்லாம் எப்படி அடைக்கிறது? புதியதாக என்ன பிசினஸ் தொடங்குவது என்று பேசிக்கொண்டே வருகிறார்கள். பாக்யா வீட்டிற்கு வரும்போது சுதாகர், கோபி, ஈஸ்வரி, செழியன் எல்லோரையும் கூப்பிட்டு வைத்து வீட்டில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். சுதாகரை பார்த்ததும் பாக்கியா அதிர்ச்சி அடைகிறார்.

ஏமாறும் கோபி

அந்த நேரத்தில் சுதாகர் கடற்கரை பக்கத்தில் இனியா மற்றும் நிதிஷுக்காக தான் புதியதாக வாங்கிய வீடு போட்டோவை எல்லோரிடமும் காட்டிக் கொண்டிருக்கிறார். ஈஸ்வரி அந்த புகைப்படத்தை காட்ட பாக்யா நல்லா இருக்கிறது என்று சொல்கிறார். பிறகு இதை சொல்வதற்காக நீங்க நேரில் வந்திருக்கனுமா? ஃபோனில் சொல்லியிருந்தால் போதுமே? நீங்க ரொம்ப பெரிய பிசியா இருப்பிங்க என்று ஈஸ்வரி சொல்கிறார்.

சுதாகரின் நாடகம்

அதற்கு சுதாகர் என்னுடைய அப்பா அம்மாவும் இல்ல, என்னுடைய மனைவியின் அப்பா அம்மாவும் இல்லை. இப்போ நம்ம குடும்பத்தில் பெரியவங்க நீங்கதான் இருக்கீங்க அதனால உங்க கிட்ட சொல்ல வந்தேன் என்று ஈஸ்வரிக்கு ஐஸ் வைக்கிறார். பிறகு சம்மந்தி அம்மா என்ன தவறா புரிஞ்சு இருக்காங்க அதை சரி பண்றதுக்காக தான் நான் வீட்டுக்கு வந்தேன் என்று சொல்கிறார்.

பாக்யா வாக்குவாதம்

அதற்கு பாக்கியா நீங்க என்னுடைய பழைய ரெஸ்டாரன்ட் வாங்கிட்டேன்னு என்கிட்ட சொன்னதெல்லாம் பொய்யா? என்று கேட்க, நமக்குள் அப்படி ஒரு பேச்சு வார்த்தையே நடக்கவே இல்லையே என்று சுதாகர் சொன்னதும் பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். இதை கேட்டு கோபி மற்றும் செழியன் இருவரும் என்னமா இப்படி எல்லாம் பேசுற என்று பாக்யா பேச்சை நிறுத்த பாக்கிறார்கள். ஆனால் பாக்கியா தொடர்ந்து சுதாகரிடம் வாக்குவாதம் செய்வது போன்றே பேசிக் கொண்டிருக்கிறார்.

பாக்கியா கொடுத்த பதிலடி

அதற்கு சுதாகர் நான் நம்ம ரெண்டு பேரும் குடும்பத்துக்குள்ளயும் எந்த பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் ரெஸ்டாரண்டுக்கு பணம் தரேன் என்று உங்களிடம் பலமுறை சொன்னேன். உங்களை ரெஸ்டாரன்டை விட்டு காலி பண்ண சொல்லும்போது கூட பணம் தரேன்னு சொன்னேனே ஆனால் நீங்க தானே வேண்டாம் என்று சொன்னீங்க என்று சொல்ல, அதற்கு பாக்கியா ஆமா நீங்க பலமுறை சொன்னீங்க நான்தான் வேண்டாம்னு சொல்லிட்டே ஆனால் அதனால் நம்ம குடும்பத்துக்கு எந்த பிரச்சினையும் வந்துவிடக்கூடாது அதனால் நீங்க ரெஸ்டாரண்டுக்கு உரிய தொகையை கொடுத்துடுங்க நான் வாங்கிக்கிறேன் என்று சொன்னதும் சுதாகர் அதிர்ச்சி ஆகிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

மாட்டிக்கொண்ட சுதாகர்

பாக்யா சொன்னதை கேட்டு குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைகின்றனர். ரெஸ்டாரெண்ட்டை கிப்ட்டுனு கொடுத்துட்டு பணம் வாங்க கூடாது என்று கோபி, செழியன், ஈஸ்வரி என எல்லோரும் சொல்ல பாக்கியா கேட்காமலேயே நான் பணத்தை வாங்காமல் விட்டால் சுதாகர் சார் பீல் பண்ணுவாரு. அதனால் குடும்பத்துக்குள் எதுவும் பிரச்சனை வந்துவிடக்கூடாது அதனால் எனக்கு ரெஸ்டாரண்டுக்கு நஷ்டம் வராத வகையில் பணத்தை கொடுங்க நான் வந்து வாங்கிக்கிறேன், அது எங்க வரனும் என்று கேட்டதும் சுதாகர் சிறிது நேரம் யோசித்து நாளைக்கு என்னுடைய ஆஃபீஸ்க்கு வந்துடுங்க என்று சொல்கிறார்.

பாக்கியா கேட்ட கேள்வி

பிறகு சுதாகர் கிளம்பி போனதும் கோபி ஈஸ்வரி செழியன் எல்லோரும் பாக்கியாவை ரவுண்டு கட்டி கேள்வி கேட்கிறார்கள். அப்போது பாக்கியா நான் இந்த ரெஸ்டாரன்ட் வைப்பதற்காக 40 லட்சம் கடன் வாங்கி இருக்கிறேன். இப்போ ரெஸ்டாரண்டை மூடியாச்சு இந்த கடனுக்கு யார் பொறுப்பு? நீங்க கொடுப்பீங்களா? என்று கேட்டதும் மூன்று பேரும் வாய் பேச முடியாமல் அதிர்ச்சியில் நிற்கிறார்கள். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+