பாக்கியலட்சுமி: பாக்யா குடும்பத்திற்கு வந்த பெரிய பிரச்சனை.. கோபிக்கு அதிர்ச்சி செய்தி.. கோபத்தில் ஈஸ்வரி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 மார்ச் 25ஆம் தேதிக்கான எபிசோடில் இனியா செல்வியின் வீட்டிற்கு சென்றதால் செல்வியின் கணவர் கோபியின் வீட்டிற்கு வந்து கோபியிடம் சண்டை இடுகிறார். அதே நேரத்தில் இனியா பற்றிய விஷயங்கள் பாக்கியாவிற்க்கு தெரிய வருகிறது. என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் எழில் வீட்டில் உட்கார்ந்திருக்கும்போது இனியா வருகிறார். அப்போது காலேஜ் போகலையா என்று எழில் கேட்க, இப்போ ஸ்டடி லீவு விட்டிருக்காங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது ஆகாஷ் எழுத போகும் எக்ஸாம் நியூஸ் வர அதை பார்த்ததும், இதை எப்படி மறந்தேன் என்று சொல்லி இனியா எழிலிடம் போன் கேட்கிறார்.

இனியா கேட்ட விஷயம்
அவருக்கு எழில் எதற்காக என்று கேட்க ஆகாஷுக்கு போன் பண்ண வேண்டும் என்று சொல்கிறார். அப்போது எழில் சிறிது நேரம் அமைதியாக இருக்க அதற்கு வேணாம் விடுனா என்று சொல்லிவிட்டு பூஜை ரூமிற்கு சென்று ஆகாஷ் நல்லபடியாக எக்ஸாம் எழுதணும் அதுக்காகத்தான் இத்தனை நாளா கஷ்டப்பட்டான் என்று வேண்டிக் கொள்கிறார்.
அப்போது எழில் இனியாவிடம் நான் உனக்கு போன் தரலைன்னு வருத்தமா என்று கேட்க, அப்படியெல்லாம் ஒன்னும் இல்லன்னா நான் அம்மாவுக்கு சத்தியம் பண்ணி கொடுத்து இருக்கிறேன் என்று சொல்ல, அதற்கு எழில் அப்போ எதுக்காக போன் கேட்ட என்று கேட்கிறார். ஆகாஷுக்கு விஷ் பண்றதுக்காக மட்டும் தான் கேட்டேன் என்று சொல்ல, சரி வா நம்ம வெளியே போயிட்டு வரலாம் என்று எழில் கூப்பிடுகிறார்.
ஆல் தி பெஸ்ட் ஆகாஷ்
எங்கே போறோம் என்று இனியா கேட்க வா சொல்றேன் என்று கூட்டிக்கொண்டு போகிறார். பிறகு ஆகாஷ் வீட்டிற்கு போனதும் இனியா நான் அம்மா கிட்ட அவனை பாக்க மாட்டேன்னு சொல்லி இருக்கிறேன் என்று இனியா சொல்ல, அதற்கு எழில் அவனுக்கு விஷ் பண்ணனும்னு ஆசைப்பட்ட வா போயிட்டு வரலாம் என்று சொல்கிறார்.
எக்ஸாம்க்கு கிளம்பியாச்சு
அதோடு நான் முதலில் வீட்டுக்கு போறேன் உன்னை முதலில் பார்த்தால் பயந்துடுவான் என்று சொல்லிவிட்டு போகிறார். அப்போது ஆகாஷ் புத்தகத்தை பேக்குக்குள் எடுத்து வைத்துக்கொண்டு இருக்கிறார். எழிலை பார்த்ததும் சிரிக்க, எழில் எக்ஸாமுக்கு படிச்சாச்சா என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். பிறகு இனியா உனக்கு வாழ்த்துக்கள் சொல்ல சொன்னா என்று சொல்ல நான் தேங்க்ஸ் சொன்னேன் என்று சொல்லிருங்க என்று ஆகாஷ் சொல்கிறார்.
ஆகாஷுக்கு சர்ப்ரைஸ்
அதை நீயே நேரில் சொல்லிவிடு என்று எழில் சொன்னதும் இனியா வந்து நிற்கிறார். இனியாவை பார்த்ததும் ஆகாஷ் கண்கலங்க ஆகாஷின் நிலமையை பார்த்து இனியாவும் கண்கலங்குகிறார். உடம்பு எப்படி இருக்கு என்று இனியா கேட்க, நல்லா இருக்கு பரவாயில்ல என்று அகாஷ் சொல்கிறார். நல்லா எக்ஸாம் எழுது ஆல் த பெஸ்ட் என்று இனியா சொல்லிவிட்டு வெளியே வந்து நிற்கிறார்.
கொஞ்ச நேரத்தில் ஆகாஷின் அப்பா அங்கு வந்து நீ எதுக்கு இங்க இருக்க? என்று கேட்க எழில் மற்றும் ஆகாஷ் இருவரும் வெளியே வருகின்றனர். அப்போது அவர் நீயும் வந்திருக்கியா எதுக்கு வந்தீங்க? உங்க பின்னாடி உங்க அப்பனும் அண்ணனும் வருவாங்களா? என் பையனை திரும்ப அடிக்க போறீங்களா என்று கேட்க நாங்க அதுக்காக வரலைங்க? என்று கோபப்படுகிறார்.
மாட்டிக்கொண்ட இனியா
அதற்கு இனியா அவன் எக்ஸாம் எழுதுறதுக்கு ஆல் த பெஸ்ட் சொல்லிட்டு போகலாம்னு வந்தோம் என்று சொல்ல, அடிச்சதெல்லாம் அடிச்சுட்டு இதுல வேற ஆல் த பெஸ்ட் வேறயா என்று அவர் கோபப்படுகிறார். ஆகாஷ் தன்னுடைய அப்பாவை சமாதானப்படுத்தி நீங்க கிளம்புங்க என்று அனுப்பி வைக்கிறார்.
செல்வியிடம் கேட்ட கேள்வி
மறுபக்கத்தில் செல்வி ரெஸ்டாரண்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது பாக்யா செல்வியை கூப்பிட்டு இன்னைக்கு ஆகாஷ்க்கு எக்ஸாம் நீ வீட்டிலிருந்து இருக்கலாம் இல்ல என்று சொல்ல, அதற்கு செல்வி அவன் அவனை பார்த்துக்கொள்வான். அவனுடைய நிலைமையை பார்த்து நான் ஏதாவது சொல்லி அவன் மனசு கஷ்டப்படக்கூடாது அதனாலதான் நான் வந்துட்டேன் என்று செல்வி சொல்லிக் கொண்டிருக்கிறார்.
ஆறுதல் சொன்ன பாக்யா
அதற்கு பாக்கியா அதெல்லாம் கவலைப்படாத ஆகாஷ் நல்லா படிப்பான். அவன் நல்லாவே எக்ஸாம் எழுதுவான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் எழில் மற்றும் இனியா இருவரும் ரெஸ்டாரண்டுக்கு வருகின்றனர். பாக்கியாவிடம் ஆகாஷ் வீட்டுக்கு போயிட்டு அவரை பார்த்துட்டு வந்த விஷயத்தை எழில் சொல்கிறார்.
இனியா பாக்யாவிடம் சொன்ன வார்த்தை
அப்போது இனியா சாரி அம்மா நீ அவன பாக்க கூடாதுன்னு சொல்லி இருக்க ஆனா அண்ணன் கூப்பிட்டு போயிட்டாரு என்று சொல்ல அதற்கு பாக்கியா சாரி எல்லாம் வேண்டாம் நீ விஷ் பண்றதுக்காகத்தானே போன விடு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். பிறகு தன்னுடைய ரெஸ்டாரண்டுக்கு ஒரு ஆள் எடுக்கணும் என்று எழிலிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.
ஆகாஷ் அப்பா வாக்குவாதம்
மறுபக்கத்தில் கோபி மற்றும் ஈஸ்வரி இருவரும் வீட்டில் இருக்கும்போது ஆகாஷின் அப்பா குடித்து விட்டு வந்து கோபியை கூப்பிட்டு திட்டுகிறார். எங்க பையன் உங்க பொண்ணை லவ் பண்ற காரணத்துக்காக அடிச்சீங்க இப்போ உங்க பொண்ணு என் பையன தேடி என் வீட்டுக்கே வரா? அவளை நீங்க நல்லபடியா வளர்த்து வைக்கல இதுதான் பொண்ணு வளர்த்த லட்சணம் என்று திட்டுகிறார். இதனால் கோபியும் ஈஸ்வரியும் பதில் பேச முடியாமல் தலை குனிந்து நிற்கிறார்கள்.

கோபப்படும் கோபி
பிறகு அவர் போனதும் இருவரும் வீட்டில் கோபமாக உட்கார்ந்து இருக்கின்றனர். அப்போது செழியன் வந்து இவர்கள் இருவரும் ஏன் இப்படி இருக்காங்க என்று ஜெனி மற்றும் அமிர்தாவிடம் கேட்கிறார். அந்த நேரத்தில் பாக்யா எழில் மற்றும் இனியா மூன்று பெரும் வீட்டிற்கு வருகிறார்கள். அவர்களை பார்த்ததும் எங்க போயிட்டு வர என்று கோபி கேக்க ரெஸ்டாரண்டுக்கு போயிட்டு வரோம் என்று இனியா சொன்னதும் கோபி கோபப்படுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications