பாக்கியலட்சுமி: இனியாவை வைத்து பிளான் போடும் பாக்யாவின் வில்லன்.. கோபி எடுக்க போகும் முடிவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 மார்ச் 28ஆம் தேதிக்கான எபிசோடில் இனியாவை வைத்து பாக்கியாவை மிரட்டுவதற்காக சுதாகர் பிளான் போட்டு இருக்கிறார். சுதாகரிடம் நேருக்கு நேராக பாக்கியா சவால் விட்டு இருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாக்கியாவின் ரெஸ்டாரண்டுக்கு சிலர் வந்து எங்களுடைய பாஸ் சுதாகர் சார் இந்த ரெஸ்டாரண்டை வாங்க சொல்லி இருக்காரு என்று சொல்ல, பாக்கியலட்சுமி இது என்னோட ரெஸ்டாரண்ட் நான் யாருக்கும் கொடுக்க விருப்பமில்லை. நீங்க இங்கிருந்து கிளம்புங்க என்று அனுப்பி வைக்கிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

சுதாகர் என்ட்ரி

உடனே அவர் சுதாகரை சந்தித்து நடந்த விஷயத்தை சொல்ல எவ்வளவு பணம் கொடுக்கிறேன்னு சொன்னீங்க என்று கேட்கிறார். பணத்தை பற்றி பேசவில்லை சார் என்று அவர்கள் சொன்னதும் ஒரு பொருளை சும்மா வாங்கினால் சும்மா கொடுப்பார்களா? பணம் கொடுக்கிறேன் என்று சொல்லி பாருங்க அவங்க தரேன்னு சொல்லிடுவாங்க, ஒருவேளை பணம் கொடுத்தும் தர முடியாதுன்னு அவங்க சொல்றாங்கன்னு கதையை சொல்லிட்டு வராதீங்க. எனக்கு அந்த ரெஸ்டாரன்ட் வேணும் என்று வார்னிங் கொடுத்து அனுப்புகிறார்.

புது பிரச்சனை

மறுபக்கத்தில் எழில் பாக்கியாவின் ரெஸ்டாரண்டக்கு வந்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது தான் புதியதாக இன்னொரு படத்தில் கமிட் ஆகி இருப்பதாகவும் படத்தின் பூஜை விரைவில் நடக்கப் போகிறது என்றும் சொல்ல, பாக்யா சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு இருக்கும் செல்வி இடமும் ஆகாஷ் எப்படி இருக்கிறான் என்று எழில் கேட்டதும் அவனை பற்றி கேட்காதீங்க தம்பி எனக்கு அழுக வருது என்று சொல்ல அவன் பெய்லியர் ஆயிட்டான்னு நீங்களே மனம் தளராதீங்க.

எழில் கொடுத்த அட்வைஸ்

நானும் இப்படி இருந்தவன் தானே இப்போ வாழ்க்கையில் முன்னேறுகிறேன் என்றால் எங்க அம்மா கொடுத்த உத்வேகம் தான். நீங்க ஆகாஷுக்கு துணையாய் இருங்க என்று அட்வைஸ் சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் சுதாகர் ஆட்கள் மீண்டும் ரெஸ்டாரண்டுக்கு வருகிறார்கள். அவர்களை பார்த்ததும் பாக்கியா நான் உங்களை அப்பவே வர வேணாம்னு சொன்னேல்ல? இப்போ எதுக்கு வந்திருக்கீங்க? என்று கேட்கிறார்.

பாக்யா கொடுத்த பதிலடி

இந்த ரெஸ்டாரண்டை எங்க சுதாகர் சாருக்கு வேணும் எவ்வளவு காசு வேணாலும் வாங்கிக்கோங்க டீல் போட்டுக்கலாம் என்று சொல்ல எழில் என்ன பேசிட்டு இருக்கீங்க என்று கோபப்படுகிறார். அதற்கு பாக்கியா நீ அமைதியா இரு எழில் என்று, நீங்கள் கோடி கோடியாக கொடுத்தாலும் இந்த ரெஸ்டாரண்டை கொடுக்க முடியாது. நீங்க மீண்டும் வந்தீங்கன்னா போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து விடுவேன் என்று மிரட்டுகிறார்.

கோபி செய்த செயல்

இதனால் அவர்கள் அங்கிருந்து போய் விடுகிறார்கள். மறுபக்கத்தில் செழியன் ஈஸ்வரி மற்றும் கோபியை சந்தித்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது இனியாவிற்கு மாப்பிள்ளை பார்ப்பது பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். கோபி இனியாவை பெரிய வசதியான வீட்டில் திருமணம் செய்து கொடுப்பது என்னுடைய வேலை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

வீட்டிற்கு வந்து மிரட்டும் சுதாகர்

மறுபக்கத்தில் பாக்கியா வீட்டில் சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது ஆட்களோடு சுதாகர் அங்கு வருகிறார். அவர் பாக்கியாவிடம் தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார். அதனால் கோபமான பாக்கியா நான் தான் உங்க ஆள் கிட்ட சொல்லி அனுப்பிட்டேன் கொடுக்க முடியாதுன்னு மறுபடியும் எதற்காக வந்து தொந்தரவு பண்ணுறீங்க என்று கேட்க, அதற்கு அவர் என்ன பத்தி உங்களுக்கு தெரியாது என்று மிரட்டுற மாதிரி பேசுகிறார்.

பாக்யா குடும்பம் பற்றிய தகவல்

அதற்கு பாக்கியா உங்களை மாதிரி நிறைய பேரை பார்த்து தான் நான் இந்த இடத்தில் வந்து இருக்கிறேன். உங்களால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோங்க. இப்ப வெளிய போங்க என்று விரட்டி விடுகிறார். இதனால் அவமானப்பட்டு வந்த சுதாகர் வீட்டில் இதையே நினைத்துக் கொண்டிருக்கிறார். தன்னுடைய ஆட்களிடம் பாக்கியா அதைப்பற்றி விசாரித்து வர சொல்கிறார்.

சுதாகருக்கு கிடைத்த ஐடியா

அப்போது அவர்கள் வந்து பாக்யாவும் கோபியும் பிரிந்திருப்பது பற்றியும், பாக்யாவின் பிள்ளைகள் பற்றியும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். கடைசியாக இனியா என்ற ஒரு மகள் இருக்கிறார் என்று சொன்னதும் அவருடைய போட்டோவை காட்டுங்கள் என்று சுதாகர் கேட்க இனியா வீடியோவை காட்டுகிறார்கள். அதை பார்த்ததும் கோபியின் நண்பன் செந்தில் நம்ம ஆஃபீஸில் தானே வேலை பார்க்கிறார். அவரை என்ன வந்து பார்க்க சொல்லுங்க கோபியை நான் சந்தித்து பேசணும் என்று சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+