பாக்கியலட்சுமி: சுதாகரை கதறவிட்ட பாக்யா.. குடும்பத்தினருக்கு செம பதிலடி.. கடைசியில் தரமான சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 மே இரண்டாம் தேதிக்கான எபிசோடில் பாக்கியா தன்னுடைய ரெஸ்டாரண்டுக்கு பணம் கேட்டு இருந்த நிலையில் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றிவிடலாம் என்று சுதாகர் நினைத்திருந்த நிலையில் பாக்யா சுதாகருக்கு சரியான பதில் அடி கொடுத்து இருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பாக்யாவிடம் ஈஸ்வரி நீ என் சம்பந்தியிடம் பணம் கேட்டது தப்பு என்று சொல்ல, அதற்கு பாக்கியா நான் ரெஸ்டாரண்டுக்காக 41 லட்சம் கடன் வாங்கி வச்சிருக்கேன் அந்த கடனை நீங்க கொடுப்பீங்களா? இந்த ரெஸ்டாரெண்ட் மட்டுமல்ல இன்னொரு ரெஸ்டாரண்டும் என்னை விட்டு போயிடுச்சு. இனி நான் கடனை எப்படி அடைப்பேன்? என்று கேட்க கோபி இவ்வளவு கடன் இருக்கா என்று கேட்கிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

கோபி சப்போர்ட்

அதற்கு ஒரு பாக்கியா உங்களுக்கு மாதிரி எனக்கு யாரும் ஹெல்ப் பண்ணல. நான் என்னுடைய சொந்த முயற்சியால் தான் இவ்வளவு பெரிய ரெஸ்டாரண்ட்டை ஓபன் செய்தேன். இதற்காக எவ்வளவோ கடன் வாங்கி இருந்தேன். அதில் பாதி தான் கட்டி முடித்து இருக்கிறேன் இன்னும் 41 லட்சம் கட்ட வேண்டியது இருக்கு என்று சொன்னதும் செழியன் இதுல என்ன சொல்றதுன்னு தெரியலமா என்று சொல்ல, நீ எதுவுமே சொல்ல வேண்டாம் என்று பதிலடி கொடுத்துவிட்டு கிளம்பி போய் விடுகிறார்.

ஈஸ்வரியின் திமிர் பேச்சு

பாக்யா போனதும் பாக்யாவுக்கு பண பேய் பிடிச்சிருக்கு என்று ஈஸ்வரி சொல்ல அதற்கு கோபி பாக்யா சொல்றது சரிதான் என்று பாக்யாவுக்கு சப்போர்ட் செய்து பேசிக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் சுதாகரின் மேனேஜர் சுதாகரிடம் நீங்க நிஜமாகவே அந்த அம்மாவுக்கு பணம் கொடுக்க போறீங்களா சார்? என்று கேட்க அதற்கு சுதாகர் அவங்ளுக்கு பணம் கொடுக்காத அளவுக்கு பேசி பார்ப்போம் இல்ல அவங்க பணம்தான் எதிர்பார்க்கிறார்கள் என்றால் அவங்க எதிர்பார்த்ததை விட குறைவா தான் கொடுக்கணும் என்று பேசும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அதிர்ச்சியில் சுதாகர்

அந்த நேரத்தில் பாக்கியா அங்கு வருகிறார் அப்போது பாக்கியாவிடம் ரெஸ்டாரண்டுக்கு என்ன சம்பந்தி எதிர்பார்க்கிறிங்க என்று கேட்க, நான் இந்த இடத்துக்கு எவ்வளவு செலவு பண்ணி இருக்கிறேன் என்று டீடைல்ஸ் வைத்திருக்கிறேன் அதை செக் பண்ணிக்கோங்க என்று பைலை கொடுக்க அதை பார்த்து மேனேஜரிடம் சுதாகர் கொடுக்கிறார். பிறகு தனக்கு 60 லட்சம் வேண்டும் என்று சுதாகர் சொன்னதும் என்னால் அவ்வளவு கொடுக்க முடியாது நீங்க அந்த இடத்தை வாங்கும்போது ஏமாந்து இருக்கிறீங்க நான் 15 லட்சம் தரேன் வேணும்னா 5 லட்சம் போட்டு 20 லட்சம் தரேன் இவ்வளவுதான் கொடுக்க முடியும் என்று சொல்கிறார்.

பாக்கியா பதிலடி

நான் உங்களுக்கு அதை கிப்ட்டா கொடுக்கல என்கிட்ட இருந்து நீங்க அபகரிச்சு இருக்கீங்க என்று பாக்கியா சொன்னதும் வேணும்னா 40 லட்சம் தரேன் என்று சொல்ல, அந்த ரெஸ்டாரன்ட் நல்லபடியா ஓடிக்கிட்டு இருக்கு என்று பாக்யா சொன்னதும் சரி 50 லட்சம் தரேன் அதுக்கு மேல பத்து ரூபா தரமாட்டேன் என்று சொல்கிறார். அதற்கு பாக்கியா எனக்கு கம்மியான ரேட் தான். என்ன பண்றது தெரிஞ்சவங்களா போயிட்டீங்க நீங்க பணத்தை கொடுத்துட்டீங்கன்னா பிரச்சனை முடிஞ்சிடும்.

Baakiyalakshmi Serial vijay TV

பாக்கியா எடுத்த முடிவு

என் பொண்ணுக்காக நல்ல ரிலேஷன்ஷிப்ல இருக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கிறேன். நடந்ததை எல்லாம் மறந்திடுவேன் நீங்க மறந்திடுவீங்கன்னு நம்புறேன் என்று சொல்லிவிட்டு செல்கிறார். சுதாகர் பணத்தை அனுப்பிவிட பேங்கில் சென்று கடனை அடைத்து விடுகிறார். பிறகு செல்விக்கு போன் செய்து வேலை பார்ப்பவர்கள் எல்லாரையும் வீட்டிற்கு கூட்டிட்டு வா என்று சொல்கிறார்.

வீட்டுக்கு வந்த செல்வி

பிறகு செல்வி வேலை பார்ப்பவர்களுடன் வீட்டு வாசலில் வந்து நிற்க பாக்யா வீட்டிற்கு கூப்பிடுகிறார். அந்த நேரத்தில் கோபி மற்றும் ஈஸ்வரி வீட்டிற்குள் உட்கார்ந்து இருக்கின்றனர். செல்வியை பார்த்ததும் ஈஸ்வரி அதிர்ச்சியாகுகிறார். ஆனால் செல்வி நான் வீட்டிற்குள் வரவில்லை என்று வெளியேவே நிற்கிறார். அப்போது பாக்கியா வெளியே வந்து எல்லோருக்கும் கொஞ்சம் கொஞ்சமாக பணம் கொடுக்கிறார். பிறகு செல்வியிடமும் பணம் கொடுக்க, செல்வி எனக்கு வேண்டாம் என்று சொல்லி விடுகிறார். அப்போது ஈஸ்வரி வழக்கம்போல பாக்கியாவை திட்டிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+