பாக்கியலட்சுமி: பாக்யாவுக்கு வந்த பெரிய பிரச்சனை.. சுதாகருக்கு இனியா பதிலடி.. நறுக்குனு ஈஸ்வரியிடம் கேட்ட கேள்வி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஏப்ரல் 30ஆம் தேதிக்கான எபிசோடில் பாக்கியாவின் புதிய ஹோட்டலில் பாக்யாவிற்கு பிரச்சனை வந்திருக்கிறது. அதே நேரத்தில் சுதாகர் கேட்ட கேள்விக்கு இனியா சரியான பதிலடி கொடுத்திருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பாக்கியா புதிய ஹோட்டலில் வழக்கம்போல வேலையை தொடங்கப் போகிறார். ஆனால் அங்கு வந்த ஓனர் நீங்க இனி இந்த ஹோட்டலை தொடர்ந்து நடத்த வேண்டாம், உங்களால் தொடர்ந்து பிரச்சனை வந்துகொண்டே இருக்குது. நீங்க வெளியே போங்க என்று சொல்லி ஹோட்டலை இழுத்து மூடுகிறார். இதனால் பாக்கியா அதிர்ச்சியாகி அவரிடம் எவ்வளவோ கெஞ்சி பார்க்கிறார். ஆனாலும் அவர் சம்மதிக்காமல் போய்விடுகிறார்.

வருத்தத்தில் பாக்யா
இதனால் பாக்கியா சோகமாக வீட்டிற்கு வருகிறார். மறுபக்கத்தில் ஈஸ்வரி பாக்யாவிடம் உங்க மாமா என்னுடைய கனவில் வந்தாரு, நீ இந்த ஹோட்டலை மூடுனா தான் சந்தோஷமா இருக்க முடியும் என்று சொன்னாரு என்று சொல்ல, கண்டிப்பாக மாமா இப்படி சொல்லி இருக்கவே மாட்டாரு என்று பாக்யா பதில் கொடுக்கிறார். அதோடு நீங்கதான் என்ன புரிஞ்சிக்கணும் நீங்களும் என்னை புரிஞ்சிக்காம இப்படி பேசுறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என்று பாக்கியா வருத்தப்பட்டு பேசிக் கொண்டிருக்கிறார்.
பாக்கியாவுக்கு கிடைத்த பணம்
அந்த நேரத்தில் மினிஸ்டரை சந்திக்க ஏற்பாடு செய்த நபர் அங்கு வருகிறார். அவர் நீங்க செய்த சாப்பாடு அருமையாக இருந்தது என்று சொல்லி உங்க வேலைக்கு உங்களுக்கு பணத்தை கொடுத்துட்டு வரச் சொல்லி மினிஸ்டர் அனுப்புனாரு என்று பணத்தைக் கொடுக்கிறார். ஆனால் பாக்கியா அந்த பணம் வேண்டாம் என்று சொல்கிறார். ஆனாலும் நீ செஞ்ச வேலைக்கு கூலி கிடைச்சாகணும். அது போல அந்த கவுன்சிலரின் உண்மையான முகத்தையும் நீங்க வெளியே கொண்டு வந்துட்டீங்க அதற்கு நன்றி என்று சொல்லிவிட்டு பணத்தை கொடுத்து விட்டு போகிறார்.
இனியா பதிலடி
மறுபக்கத்தில் சுதாகர் இனியாவிடம் செழியனால் ஜெயிலிலிருந்து வர முடியுமா? என்று ஏளனமாக கேட்கிறார். அதற்கு இனியா, செழியனை அண்ணா நேற்றைக்கு வந்துட்டாங்க. எங்க அம்மா தான் அண்ணனை வெளியே வர வச்சாங்க என்று சொல்கிறார். இதை கேட்டு சுதாகர் கோபப்படுகிறார். அதை பார்த்ததும் நித்திஷ் அப்பாவிடம் இப்படி எதிர்த்து பேசக்கூடாது என்று இனியாவை அதட்டுகிறார்.
பாக்கியா செய்த உதவி
மறுபக்கத்தில் ஓனர் வீட்டுக்கு பாக்கியா வருகிறார். அப்போது பாக்கியாவை பார்த்ததும் இந்த நேரத்தில் நீங்கள் இங்கே எதற்கு வந்தீங்க? என்று அந்த நபர் கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது ஹோட்டல் ஓனரின் மருமகன் வந்து பணத்தைக் கேட்டு பிரச்சினை செய்கிறார். பணம் தரவில்லை என்றால் உங்கள் மகளை வீட்டில் இருக்க சொல்லுங்க என்று அவர் சொல்ல, ஹோட்டல் காரர் மருமகனிடம் கெஞ்சி கொண்டிருக்கிறார். கடைசியில் பாக்கியா அவர் கேட்ட ஐந்து லட்சம் பணத்தை கொடுக்கிறார். இதனால் ஹோட்டல்காரர் சந்தோஷப்படுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications