பாக்கியலட்சுமி: பாக்கியா பற்றி தவறாக பேசும் செல்வி.. பிரச்சனையில் இனியா.. ஆகாஷ் கேட்ட கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஏப்ரல் நான்காம் தேதிக்கான எபிசோடில் இனியாவிற்கு நடக்கும் திருமண ஏற்பாடு விஷயம் குறித்து செல்வி ஆகாஷிடம் சொல்கிறார். அதே போல கோபியால் இனியாவிற்கு அதிர்ச்சி செய்தி கிடைக்கிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ஆகாஷ் படித்து கொண்டிருக்கிறார். அப்போது செல்வி ரெஸ்டாரண்டில் இருந்து சாப்பாடு எடுத்துக்கொண்டு வந்து ஆகாஷிடம் சாப்பிடுறியா என்று கேட்க, ஆகாஷ் வேண்டாமா அப்புறம் சாப்பிட்டுகிறேன் என்று சொல்கிறார். உங்க அப்பா எங்க போனாரு என்று செல்வி விசாரிக்க அவர் எங்க குடிச்சிட்டு விழுந்து கிடக்கிறாரோ என்று ஆகாஷ் சொல்லிவிடுகிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

ஆகாஷுக்கு சந்தேகம்

பிறகு செல்வி சோகமாக உட்கார்ந்து இருப்பதை பார்த்து ஆகாஷ் என்னம்மா ஆட்சி முகமே சரியில்லை என்ன பிரச்சனை என்று கேட்க, இனிமேல் நீ படிக்கிற வேலையை மட்டும் பாரு ஆகாஷ். நமக்கு அதுதான் முக்கியம். இனிமே நீ இனியா பாப்பாவை பார்ப்பதையோ பேசுவதையோ வச்சுக்காத என்று சொல்ல, அதற்காக நான் பாக்கியா ஆன்ட்டிக்கு சத்தியம் பண்ணி கொடுத்ததிலிருந்து அப்படித்தான்மா இருக்கிறேன் என்று சொல்கிறார்.

சோகத்தில் செல்வி

அதற்கு செல்வி இனியாவோட நம்பர் வச்சிருந்தா அதை டெலிட் பண்ணிடு என்று சொல்லிக் கொண்டே இருக்க ஆகாஷுக்கு புரியாமல் என்ன ஆச்சு என்று கேட்கிறார். அதற்கு இனியாவிற்கு பெரிய இடத்தில் சம்பந்தம் பேசி இருக்காங்க என்று செல்வி சொன்னதும் ஆகாஷ் கண்கலங்கி அழுகிறார். யாருமா உனக்கு சொன்னது என்று கேட்க, பாக்கியா அக்கா சொல்லுச்சு இந்த கல்யாணம் நடந்துச்சுன்னா இனியி கஷ்டப்படுவா, ரெஸ்டாரன்ட் பிரச்சனை, வீடு பிரச்சனை பற்றி சொன்னார்களே தவிர ஆகாஷ் கஷ்டப்படுவான்னு அக்கா ஒரு வார்த்தை கூட சொல்லல.

செல்வியின் அட்வைஸ்

ஆயிரம் தான் இருந்தாலும் அவங்க வீட்டுல நான் வேலை செஞ்சு இருந்தாலும் அவங்க வீட்டுல ஒரு ஆளாக முடியாது. நீ நல்லா படி ஆகாஷ் நம்ம தலை குனிஞ்சு நிக்கிற இடத்துல படிப்பால் மட்டும்தான் தலை நிமிர்ந்து நிற்க்க முடியும் என்று படித்து ஒரு நல்ல வேலைக்கு போ என்று அட்வைஸ் பண்ணிவிட்டு கிளம்பி போகிறார். அப்போது அழுது கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் இனியாவும் பாக்கியாவும் படுத்து இருக்கிறார்கள்.

பாக்கியா சொன்ன விஷயம்

இருவரும் தூங்காமல் இருக்கும்போது இனியி செழியன் மற்றும் கோபி இருவரும் பேசியதை நினைத்து யோசித்துக் கொண்டே இருக்கிறார். அதற்கு பாக்கியா நீ தூங்கலையா இனியா என்று கேட்க, இல்லம்மா அண்ணனும் அப்பாவும் என்னை ப்ரைம் வாஷ் பண்ற மாதிரியே பேசுறாங்க என்று சொல்ல, அவங்க பேசுறதெல்லாம் நீ எதுக்கு மனதில் எடுத்துக்கிறா என்று பாக்கியா கேட்கிறார்.

இனியாவின் புலம்பல்

அவர் ஏதாவது சொல்லும் போது நெஞ்சு வலிக்குதுன்னு சொல்றது எனக்கு ரொம்ப பயமாயிருக்கு என்று இனியா சொல்ல, அது மட்டும் இல்லாம ஆகாஷ் ரொம்ப பாவம் அவனுக்கு நான் ஹோப் கொடுத்துட்டு இந்த மாதிரி ஒரு தப்பு பண்ண கூடாதுல என்று இனியா கேட்க, பாக்கியா இப்போதைக்கு ஆகாஷ்... கல்யாணம் என்பது பற்றி எதுவுமே பேசாத. உனக்கு என்ன தேவையோ அதை பண்ணு.

குழப்பத்தில் இனியா

நல்லா படி என்று சொல்ல, இதுக்கு பாட்டியும், அப்பாவும் சம்பாதிப்பாஙகளா என்று இனியா கேட்டதற்கு அவங்க எதுக்கு சம்மதிக்கணும் நான் மசாலா கம்பெனி ஆரம்பிச்சு இதுவரைக்கும் அவங்களுடைய எதிர்ப்பை மீறி தான் நான் ஒவ்வொன்னா செஞ்சு சாதித்து வரேன். உன்னோட கல்யாண வாழ்க்கையில் என்ன பிரச்சனை வந்தாலும் அதை நீ தான் பாத்துக்கணும். நெஞ்சுவலின்னு சொல்ற உன் அப்பாவோ இல்லை பிளாக்மெயில் பண்ற உன் பாட்டியோ வர மாட்டாங்க என்று சொன்னதும் இனியா இப்ப நான் என்ன பண்ணட்டும் என்று கேட்கிறார்.

பாக்கியா கொடுத்த அட்வைஸ்

அதற்கு இந்த கல்யாணம் தேவையில்லை என்று சொல்லு என்று பாக்கியா சொன்னதும் இனியா சரி அவங்க கிட்ட சொல்லிடுறேன் என்று சொல்கிறார். மறுநாள் காலையில் செழியன் கிச்சனில் இருக்கும்போது பாக்யா மற்றும் எழில் காபி குடித்து கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் இனியா அங்கு வந்து உட்கார பாக்யா காபி கொடுக்கிறார்.

ஹாஸ்பிடலில் கோபி

எதுவாயிருந்தாலும் பார்த்துக்கலாம் இனியா தைரியமா இரு என்று பாக்கியா சொல்லிக் கொண்டிருக்கும் போது செழியனுக்கு போன் வருகிறது. கோபி முடியாமல் இருப்பதாகவும் ஹாஸ்பிடலில் அட்மிட் செய்திருப்பதாகவும் சொல்கிறார்கள். உடனே செழியன் பதட்டப்பட்டு பேசுகிறார். அதை பார்த்ததும் எல்லோரும் என்னாச்சு என்று விசாரிக்க அப்பாவுக்கு மூச்சு திணறல் வந்து இருக்கு.

செழியனுக்கு வந்த போன் கால்

அவரை ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணி இருக்காங்களாம் என்று சொன்னதும் இனியா பதறிப் போகிறார். அதற்கு பாக்கியா நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காத. இது கூட உங்க அப்பாவோட நடிப்பா இருக்கும் என்று பாக்கியா சொல்ல, என்னம்மா பேசிட்டு இருக்கே என செழியன் கோபப்படுகிறார். அதோடு நான் போறேன் நீங்க இஷ்டம் இருந்தால் வாங்க என்று சொல்லி விட்டு போகிறார்.

பதறிய இனியா

அதற்கு இனியா நானும் வரேன் என்று கிளம்பி போகிறார். மறுபக்கத்தில் கோபி ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி இருக்கிறார். அப்போது செழியன் மற்றும் இனியாவை பார்த்ததும் எனக்கு கொஞ்சமாக மூச்சு வாங்குச்சு அவ்வளவுதான் என்று சொல்ல கோபியின் நண்பர் ஒன்னும் பிரச்சனை இல்ல சாயங்காலம் டிஸ்சார்ஜ் பண்ணலாம்னு சொல்லிட்டாங்க என்று சொல்கிறார்.

கோபியின் நாடகம்

அப்போது இனியா என்னால தான் உங்களுக்கு பிரச்சனை என்று அழுது கொண்டிருக்க, உன் வாழ்க்கை நல்லா இருக்கணும் நான் எனக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா அதற்கு முன்பு உன்னை செட்டில் பண்ணிடனும் என்று நினைத்தேன் என்று சொன்னதும் இனியா யோசித்துக் கொண்டிருக்கிறார். அப்போது செழியன் மற்றும் ஈஸ்வரி இருவரும் மீண்டும் இனியாவின் மனதை மாற்றும் விதமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

உங்க கருத்து

பாக்கியா சொன்னது போலவே கோபி தன்னுடைய நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். இது உண்மை என்று நம்பும் இனியா திருமணத்திற்கு சம்மதம் சொல்லி விடுகிறார். அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்று பொறுத்திருந்து பார்க்கலாம். இனியாவின் திருமணத்தை கடைசி நேரத்தில் பாக்யா நிறுத்துவாரா? அல்லது இனியாவிற்கு பணக்காரர் சுதாகர் மகனுடன் கல்யாணம் நடந்து ஆகாஷ் நடுத்தெருவில் நிற்க போகிறார் என்று நீங்க நினைக்கிறீங்களா பாஸ்?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+