பாக்கியலட்சுமி: இனியாவை சந்தேகப்பட்டு, அசிங்கப்படுத்தும் நிதிஷ்.. மாமியார் கேட்ட கேள்வி.. சுதாகர் கொடுத்த அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஜூலை 5ஆம் தேதி எபிசோடு இனியாவும் ஆகாஷும் பேசியதை வைத்து நிதிஷ் பிரச்சனை செய்கிறார். அதே நேரத்தில் நித்திஷ் சொன்னதை எல்லாம் நம்பும் அவருடைய அம்மாவும் இனியாவை அசிங்கப்படுத்தி பேசுகிறார். இந்த நிலையில் பாக்கியா போன் செய்து இனியாவிடம் விசாரிக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் இனியா டிரெஸ் மாத்திட்டு வரேன் என்று கிளம்பும்போது நிதிஷ் இனியாவை நிற்க வைத்து அந்த ஆகாஷ் உன்னுடைய எக்ஸ் தானே என்று கேட்க, அதைக் கேட்டு இனியா அதிர்ச்சியில் இருக்கிறார். பயத்தில் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கும்போது ஆகாஷ் பற்றி எனக்கு எப்படி தெரியும்னு யோசிக்கிறியா? என்று கேட்க, அதற்கு இனியா பயத்தில் எதுவும் சொல்லாமல் நிற்கிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

இனியாவின் காதல் தெரிந்தது

பிறகு நிதிஷ் அந்த ஆகாஷ் கூட வெளியே எல்லாம் போய் இருக்கியா என்று கேட்கிறார். அதற்கு இனியா இல்ல பெருசா ஒரு இடமும் போனதில்லை என்று சொல்கிறார். இதைத் தொடர்ந்து நிதிஷ் உன்னுடைய எக்ஸ் தானா? இல்ல வேற ஏதாவது இருக்குதா? என்று கேட்க, அதற்கு இனியா நான் இப்பவெல்லாம் ஆகாஷ் கூட பேசுறது இல்ல, என்று சொன்னதும் எதுக்கு இப்படி பொய் சொல்லுற? நான் வரும்போது கூட நீ உங்க அம்மா ரெஸ்டாரண்டில் நின்று அவன் கூட பேசிட்டு தானே இருந்த என்று கேட்கிறார்.

மிரட்டும் நிதிஷ்

அதற்கு இனியா அவன் நல்லா இருக்கியான்னு கேட்டான் அதற்கு தான் பதில் சொன்னேன் என்று சொல்ல, அவன் நல்லா இருந்தா உனக்கு என்ன? இல்லன்னா உனக்கு என்ன? உனக்கு என்ன அவன் மேல அவ்வளவு கரிசனம்? என்று கோபமாக பேச, இனியா பயத்தில் பேசாமல் இருக்கிறார். இனி அவன் கூட பேசக்கூடாது என்று வார்னிங் கொடுத்துவிட்டு இனியாவை போக சொல்கிறார்.

பயத்தில் பாக்கியா

இனியா டிரஸ் மாத்திட்டு வந்து படுத்து விடுகிறார். அந்த நேரத்தில் நிதிஷ் குடித்து விட்டு போதையில் வந்து இனியாவை எழுப்புகிறார். இனியா பயந்து எழுந்ததும் தூங்கிட்டியா சரி தூங்கு என்று சொல்லிவிட்டு சோபாவில் உட்கார்ந்து சைக்கோ போல பேசிக் கொண்டிருக்கிறார். அதுபோல இரவில் பாக்கியாவிற்கு இனியா அழுது கொண்டு வீட்டிற்கு வருவது போன்று கனவு வருகிறது. அதனால் மறுநாள் காலையில் இனியாவுக்கு போன் செய்து எப்படி இருக்க என்று கேட்கிறார்.

தவிக்கும் இனியா

அதற்கு இனியா நான் ரொம்பவே நல்லா இருக்கிறேன் என்று சொல்லிவிடுகிறார். அடுத்ததாக நிதிஷ் இனியா பற்றிய விஷயத்தை எல்லாம் தன்னுடைய அப்பா அம்மாவிடம் சொல்ல எல்லோரும் இனியா மீது கோபத்தில் இருக்கிறார்கள். ஆனால் சுதாகர் நீங்க இதைப் பற்றி இனியாவிடம் எதுவும் பேச வேண்டாம் என்று சொல்கிறார். அடுத்ததாக அனைவரும் அமைதியாக சாப்பிட்டு கொண்டிருக்கும் போது இனியா அவர்களிடம் வந்து பேச முயற்சி செய்கிறார்.

சந்திரிகா கேட்ட கேள்வி

ஆனால் இனியாவிடம் யாருமே பேசவில்லை. இதனால் இனியா இங்கு என்னமோ நடந்திருக்கு? நீங்க எல்லாரும் ஏன் என்கிட்ட மறைக்கிறீங்க? எதுக்காக என்கிட்ட பேசாம இருக்கிறீங்க என்று கேட்க சுதாகரின் மனைவி நீ நல்ல பிள்ளைன்னு தான் நாங்க கல்யாணம் பண்னோம்‌. ஆனா உன்னை பத்தி கேள்விப்படுற விஷயம் எதுவும் நல்லதா தோணல என்று கோபப்பட்டு திட்டுகிறார். அதற்கு சுதாகர் சாப்பிடற இடத்தில் எதுவும் பேச வேண்டாம் அமைதியாக இரு என்று மனைவியை திட்ட, இனியா எதுவும் பேசாமல் அமைதியாக கிளம்பி விடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+