இப்ப இருக்கிற நிலைமையில் இந்த மாதிரி கதை தேவையா? பாக்கியலட்சுமி சீரியலை திட்டும் ரசிகர்கள்
சென்னை: விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
பாக்கிய லட்சுமி சீரியலில் தன்னுடைய தந்தையான கோபி தன்னை திட்டிவிட்டார் என்று இனியா தற்கொலை முயற்சி செய்கிறார்.
ஏற்கனவே குழந்தைகளின் மத்தியில் தற்கொலை எண்ணம் அதிகரித்து வரும் நிலையில் எந்த மாதிரி ஒரு கதை தேவையா ரசிகர்கள் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.

அதிகரிக்கும் தற்கொலைகள்
சமூகத்தில் ஏற்கனவே சின்ன சின்ன பிரச்சனைகளை தாங்கிக் கொள்ள முடியாமல் இளம் வயதினர் பலரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். தங்களுடைய இன்னுயிரை சில சொற்ப காரணங்களுக்காக இழந்து வருவது வேதனையிலும் வேதனையாக இருக்கிறது. தன்னுடைய இழப்புக்கு பிறகு தன்னுடைய குடும்பத்தினர், உறவினர்கள், தன்னை நேசிக்கும் நபர்கள் எந்த அளவிற்கு கஷ்டப்படுவார்கள் என்பதை கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்காமல் அவசரப்பட்டு முடிவு எடுத்து தங்களுடைய பொன்னான வாழ்க்கையை முடித்து விடுகிறார்கள்.

இதற்கு முடிவு இல்லையா
படிப்பில் மார்க்க குறைந்து விட்டால் தற்கொலை, அப்பா திட்டி விட்டால் தற்கொலை, அம்மா திட்டினால் தற்கொலை, பள்ளியில் சின்ன பிரச்சனை என்றாலும் அதற்கும் தற்கொலை, நண்பன் பேசவில்லை என்றாலும் தற்கொலை, காதலில் தோல்வி என்றாலும் தற்கொலை, இப்படி எதற்கெடுத்தாலும் தற்கொலை என்னும் எண்ணம் சமுதாயத்தில் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அதை தூண்டும் வகையாக சின்னத்திரையில் சில நிகழ்வுகள் இருப்பதாக ரசிகர்கள் கோபத்தில் தங்களுடைய கருத்துக்களை கொட்டி வருகிறார்கள்.

இப்படி ஒரு கதையா
சில நாட்களுக்கு முன்புதான் இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமான ஒன்பது வயது சிறுமி தன்னுடைய தந்தை தன்னை அடுத்தவர்கள் முன்னாடி திட்டிவிட்டார் என்று கோபத்தில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த பிரச்சனை அடங்குவதற்குள் தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் தன்னுடைய தந்தை தன்னை திட்டிவிட்டார் என்பதற்காக இனியாவும் தற்கொலை முயற்சி செய்கிறார். இந்த மாதிரி வீட்டில் அனைவரும் உட்கார்ந்து பார்க்கும் சீரியலில் வந்தால் இதை தானே வீட்டில் இருக்கும் குழந்தைகளின் மனதிலும் எழும் என்று சமூக ஆர்வலர்கள், ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளத்தில் அதிகமான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

கதையில் இது சொதப்பல் தான்
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா கேரக்டர் தன்னுடைய கணவர் தன்னை விட்டு விட்டு சென்று விட்டாலும் தான் படிக்காமல் இருந்தாலும் அடுத்தடுத்து தான் ஒவ்வொரு தோல்விகளையும் வெற்றியாக மாற்றிக்கொண்டு தன்னுடைய குடும்பத்தை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் தூணாக இருந்து வருகிறார். இந்த மாதிரி ஒரு பாசிட்டிவ் சொல்லும் கதையில் அபத்தமான கதை இருப்பது பலருக்கும் வேதனையாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.

எதற்கும் அவசரம் தான்
தற்போதைய சூழ்நிலையில் 2k கிட்ஸ்கள் எல்லாவற்றிலும் அவசரம் அவசரமாக முடிவெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த மாதிரி தான் இனியாவும் தன்னுடைய அம்மா தன்னை தீட்டி விட்டார் என்று அப்பாவோடு தனியாக சென்றுவிட்டார். இப்போது அங்கே சின்ன பிரச்சனை என்று தெரிந்ததும் தனக்கு வாழ்க்கையே முடிந்து விட்டது என்று தூக்க மாத்திரையை போட்டு தற்கொலை முயற்சி செய்கிறார். இந்த மாதிரி தான் சமுதாயத்திலும் நடக்கிறது. இதை குறித்து சீரியலில் இனி இதற்கு விளக்கம் கொடுப்பது போன்று கதை வந்தாலும் இந்த மாதிரி ஒரு கதை வராமல் இருந்தாலே நல்லது என்று பலர் தங்களுடைய விருப்பங்களை தெரிவித்து இருக்கிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: முத்து கொடுத்த ஐடியா.. சிந்தாமணி குடும்பத்திற்கு செக் வைத்த சத்யா.. ஆட்டத்தை தொடங்கிய ரோகிணி -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி?












Click it and Unblock the Notifications