பாக்கியலட்சுமி: சாபம் கொடுத்த ஈஸ்வரி.. கோபிக்கு கிடைத்த அதிர்ச்சி.. எழில் சப்போர்ட்! பாக்யா செம
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஜனவரி 11ம் தேதிக்கான எபிசோடில் கோபிக்கு பாக்யா கொடுத்த கம்ப்ளைன்ட் காரணமாக கோர்ட்டில் இருந்து சம்மன் வந்திருக்கிறது. இதனால் ஈஸ்வரி பிரச்சனை செய்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் இன்று எதிர்பாராத பல சம்பவங்கள் நடைபெற்றிருக்கிறது. இதுவரைக்கும் எத்தனையோ முறை கோபியால் பிரச்சனையில் சிக்கினாலும் திருந்தாத ஈஸ்வரி இன்று நடந்து கொண்ட விதம் பார்க்கும் ரசிகர்களை கோவப்பட வைத்தது. அதிலும் தப்பு செய்த கோபிக்காக ஈஸ்வரி, செழியன், இனியா என மூன்று பேரும் சப்போர்ட் செய்து பேசிக் கொண்டிருந்தனர்.

சரி என்ன நடந்தது என்று பார்க்கலாம். அதாவது எபிசோடின் ஆரம்பத்தில் கோர்ட்டில் இருந்து கோபிக்கு நோட்டீஸ் வந்திருக்கிறது. அதை பார்த்ததும் ஈஸ்வரி என்ன என்று கேட்க செழியன் அம்மா அப்பா மீது கொடுத்த கேசுக்காக தான் இப்போ நோட்டீஸ் வந்து இருக்கு என்று சொல்கிறார். இதனால் ஈஸ்வரி பாக்யாவை திட்டுகிறார்.
நான் ஏற்கனவே உன்கிட்ட கேஸை வாபஸ் வாங்க சொன்னேன் நீ இத்தனை நாளாக வாங்காம தான் இருந்தியா? என்று கோபப்பட, அதற்கு செழியன் கோர்ட்டில் கேஸ் நடக்கும்போது வாபஸ் வாங்க முடியாது என்று சொல்கிறார். ஆனாலும் ஈஸ்வரி கேட்கிற மாதிரி தெரியல, தன் மகன் பாசத்தில் ஈஸ்வரி திட்டிக்கொண்டே இருக்க ஒரு கட்டம் வரை அமைதியாக இருந்து எழில் அம்மா ரெஸ்டாரண்ட் பிரச்சனையில் கண்ணீர் விட்ட போது என்ன செய்தீர்கள் என்று கேட்கிறார்.

ஆனாலும் ஈஸ்வரி நீ உங்க அம்மாவுக்கு தானே சப்போர்ட் பண்ணுவ என்று புலம்புகிறார். அப்போது கோபி இந்த விஷயத்தை வைத்து யாரும் சண்டை போட வேண்டாம். நான் செஞ்ச தப்புக்கு நான்தான் தண்டனை அனுபவிக்கிறேன். பாக்யா மீது எந்த தப்பும் இல்லை என்று சொல்கிறார்.
அப்போது இனியா பாக்யாவிடம் நீ ஓவரா பண்ணுறமா? அப்போ உனக்கு அப்பா ஜெயிலுக்கு போகணுமா? என்று கோபப்பட்டு திட்டிவிட்டு போகிறார். இதைத் தொடர்ந்து ரூமுக்கு சென்ற கோபி நான் ஜெயிலுக்கு போய் விட்டால் என்ன செய்வது மயூவின் படிப்பு இனியாவின் கல்யாணம் என்று பிளான் பண்ணி வைத்திருக்கிறேன் என்று பேசிக் கொண்டிருக்க ராதிகா அப்படியெல்லாம் நடக்காது உங்களுக்காக தமிழ்நாட்டில் நம்பர் ஒன் வக்கீலை ஹையர் பண்ணி இருக்கிறேன் என்று சொல்லுகிறார்.
கோபி பாக்யா பற்றி நல்லவிதமாக பேசிக் கொண்டிருக்க, பாக்யாவை பற்றி நீங்கள் ஏற்கனவே புரிந்து கொண்டிருந்தால் இப்படி எல்லாம் நடந்திருக்காது தானே என்று ராதிகா கேட்க, இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் கோபி தவிக்கிறார். பிறகு அடுத்த நாள் காலையில் ஈஸ்வரி கோபிக்கு எதுவும் ஆகிட கூடாது என்று சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் பாக்யா சமையல் கட்டில் இருக்க அங்கு வந்து பேசுகிறார். அப்போது கோபியும் ராதிகாவும் இறங்கி வர ராதிகா கூட போக வேண்டாம், ராதிகா பாக்கியாவின் பிரண்டு தான் ரெண்டு பேரும் பிளான் பண்ணி உன்னை ஜெயிலில் அடைத்து விடுவாங்க என்று திட்டுகிறார்.
கோபிக்கு எதுவும் நடந்தால் நான் உயிரோடவே இருக்க மாட்டேன். கோபி திருந்தி விட்டான் தானே அவனை துரத்தி துரத்தி அடிக்க வேண்டுமா? ஒரு அம்மாவா நான் கதறுதன். இந்த பாவம் உன்னை சும்மா விடாது என்று பாக்யாவுக்கு ஈஸ்வரி சாபம் கொடுக்கிறார். கடைசியாக பாக்யாவும் கோபியும் நீதிமன்றத்தில் ஆஜராகுகின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications