பாக்கியலட்சுமி: கோபியின் நண்பன் கேட்ட கேள்வி.. கோபத்தில் மிரட்டிய ராதிகா! எழிலோடு கிளம்பும் பாக்யா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஜனவரி 16ஆம் தேதிக்கான எபிசோடில் கோபியை பார்க்க வந்த இடத்தில் அவருடைய நண்பர் கேட்ட கேள்வியால் ராதிகா கடும் கோபம் அடைகிறார். அதே நேரத்தில் பாக்யாவை எழில் தன்னுடைய வீட்டிற்க்கே கூப்பிடுகிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ராதிகாவிடம் ஈஸ்வரி நீ என்னை பற்றி பாக்கியா கிட்ட எதுக்கு அப்படி பேசுற என்று கேட்க அதற்கு ராதிகா நான் அப்படித்தான் பேசுவேன். நீங்க கடைஞ்சு எடுத்த சுயநலவாதி. உங்களுடைய சந்தோசத்தை மட்டும் தான் நீங்க பார்ப்பீங்க. அடுத்தவங்களோட சுயமரியாதை கௌரவத்தை பற்றி உங்களுக்கு எந்த கவலையும் கிடையாது.

பாக்கியா மாதிரி அமைதியா இருப்பேன்னு மட்டும் நினைச்சுக்காதீங்க என்று மிரட்டிக் கொண்டு இருக்க, எந்த பதிலும் சொல்ல முடியாமல் ஈஸ்வரி அதிர்ச்சியில் இருக்கிறார். அதோடு நீங்க ஒழுங்கா நடந்துக்கோங்க இல்லன்னா நான் இப்படித்தான் பேசுவேன் என்று மிரட்ட அதற்கு ஈஸ்வரி பெரிய மனுஷினு மரியாதை இல்லாம பேசுற என்று கேட்க, மரியாதையாக தான் இப்ப பொறுமையா பேசிட்டு இருக்கேன் இல்லன்னா அவ்வளவுதான் என்று மிரட்டிக் கொண்டிருக்கிறார்.
அப்போது இனியா வந்து என்ன ஆச்சு எதுவும் பிரச்சனையா என்று கேட்க, இல்லையே சும்மாதான் பேசிட்டு இருந்தோம் என்று ராதிகா சமாளித்த விடுகிறார். அடுத்ததாக கோபியும் ராதிகாவும் ஹாலில் உட்கார்ந்து போனில் எதையோ பார்த்து ஆர்டர் போட்டு வாங்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அதை எல்லாம் கிச்சனிலிருந்து பார்த்த ஈஸ்வரி என்னமோ இவ காசில் வாங்குறது மாதிரி சொல்லுறா என்று திட்டிக் கொண்டிருக்க, அதற்கு பாக்கியா அவங்க சம்பாதிக்கிறாங்க அவங்க வாங்கிக்கிறாங்க உங்களுக்கு என்ன அத்தை என்று பதிலடி கொடுக்கிறார்.
அந்த நேரத்தில் கோபியின் நண்பர் வீட்டிற்கு வர அவரை வரவைத்து எல்லோரும் நலம் விசாரிக்கிறார்கள். அவரிடம் சாப்பிட்டுவிட்டு தான் போக வேண்டும் என்று ஈஸ்வரி சொல்ல அவரும் சரி என்று சொல்கிறார். உடனே சரி கோபியை முன்னாடி பார்த்ததற்கும் இப்போ பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கா என்று கேட்க? இருக்குமா என்று அவர் சொல்கிறார்.

இந்த வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் தான் நிம்மதியாக இருக்கான் என்று ராதிகாவை வம்பு இழுக்கிறார். அதற்கு அவங்க ரொம்ப நாள் கழிச்சு மீட் பண்ணி இருக்காங்க அவங்க போய் தனியா பேசட்டும் என்று ராதிகா சொன்னதும் கோபியும் ஆமாம் என்று தன்னுடைய நண்பனை தனியாக கூட்டிக்கொண்டு போகிறார்.
பிறகு ஈஸ்வரி வேணும்னு தானே இப்படி பண்ணினா? என்று கேட்டதும் ராதிகா ஆமாம் என்று சொன்னதும் ஈஸ்வரி டென்ஷன் ஆகிறார். உடனே பாக்கியாவை பார்த்து முறைக்க, பாக்யா என்னை எதுக்கு அத்தை முறைக்கிறீங்க? நான் ஒன்னும் பண்ணல என்று சொல்கிறார். பிறகு வெளியே வந்த கோபியிடம் என்னடா ரெண்டு பொண்டாட்டி ஒரே வீட்டில் வைத்து சந்தோஷமாக இருக்கிற மாதிரி இருக்க என்று கேட்கிறார்.
அதற்கு கோபி, முதல்ல நானும் பாக்கியா உள்ளே விடமாட்டா பிரச்சனை பண்ணுவா என்று தான் நினைச்சேன் ஆனா எல்லாமே ஸ்மூத்தா போயிட்டு இருக்கு இதே மாதிரி போனா நல்லா இருக்கும் என்று சொல்லி, பாக்யாவை பற்றி பெருமையாக பேசுகிறார். அதை ராதிகாவும் மறைந்து நின்று கேட்டுவிட்டு உள்ளே சென்று விடுகிறார்.

பிறகு செந்தில் கிளம்பி போகிறார் அடுத்ததாக எழில் அமிர்தாவோடு வீட்டுக்கு வருகிறார். அப்போது பாக்கியா இப்பதான் உன்ன நினைச்சுட்டு இருந்தேன் அதற்குள் சரியா வந்துட்டே என்று சொல்கிறார். பிறகு வழக்கம்போல ஈஸ்வரி, கோபி எல்லோரும் எழிலை மீண்டும் வீட்டுக்கு குடும்பத்தோடு வர சொல்கிறார்கள்.
ஆனால் எழில் சாதித்து விட்டு தான் வரவேண்டும் என்று வழக்கம்போல பாக்கியா அவருக்கு சொல்கிறார். தன்னுடைய மகன் என் பேச்சை தான் கேட்பேன் என்று பாக்யா சொன்னதுமா ஈஸ்வரி கோபப்படுகிறார். அடுத்ததாக பல நாள் கழித்து தன்னுடைய நண்பனை பார்த்த விஷயத்தை பற்றி கோபி சந்தோஷமாக பேசுகிறார்.
அப்போது ராதிகா கதவை பூட்டுகிறார். அதற்குத் கோபி என்ன ராதிகா ரொமான்ஸ் பண்ண போறியா என்று கேட்க, நான் செம கோபத்தில் இருக்கிறேன் என்று ராதிகா சண்டை போடுகிறார். நீங்க உங்க நண்பனிடம் எப்படி நான் ரெண்டு பொண்டாட்டியுடன் இருந்து சந்தோஷமா இருக்கிறேன் என்று சொல்ல முடியும் என்று கேட்க, கோபி சமாளித்துக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோட் முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications