பாக்கியலட்சுமி: கோபியால் தோற்றுப்போன இனியா.. ராதிகாவுக்கு நடந்த கொடுமை! பாக்யா சொன்ன வார்த்தை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஜனவரி 24ஆம் தேதிக்கான எபிசோடில் கோபி செய்த செயலால் நண்பர்கள் கிண்டல் செய்ததை நினைத்து இனியா சரியாக டான்ஸ் ஆடாமல் தோற்றுப் போய் விடுகிறார். இதனால் இனியா ராதிகா மீது தன்னுடைய மொத்த கோபத்தையும் காட்டி சண்டை போடுகிறார்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் இனியாவின் பெற்றோரை மேடைக்கு அழைக்க, அங்கு ராதிகாவும் கோபியுடன் வருகிறார். அப்போது பாக்கியாவும் அங்கு வந்ததை பார்த்ததும் அங்கிருந்த இனியாவின் நண்பர்கள் இது என்ன வித்தியாசமான குடும்பம் என்று இனியாவை எல்லோரும் கிண்டல் செய்கின்றனர்.

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்புதான் தெருவில் நின்று சண்டை போட்டுக் கொண்டு இருந்தாங்க. இப்போ மொத்தமா குடும்பத்தோடு மேடைக்கு வந்துட்டாங்களே என்று கிண்டல் பண்ண இனியா அழுது கொண்டிருக்கிறார். அப்போதே பாக்கியா தனியாக சென்று இனியாவை சமாதானப்படுத்துகிறார். அங்கு கோபியும் வருகிறார்.
இதனால் கோபி மீது கோபப்பட்ட இனியா ஏன் இப்படி பண்ணுனீங்க? என்கூட பேச வேண்டாம்.. என்னை தனியா விட்டு விடுங்கள் என்று அழுகிறார். அதற்குப் பிறகு இனியாவின் நண்பர்களும் ராதிகாவுடன் போட்டோ எடுக்கலாமா? என்று கேட்டு இனியாவை அசிங்கப்படுத்துகின்றனர்.
இதைத்தொடர்ந்து டான்ஸ் காம்பெடிசன் நடக்கிறது. அதில் நண்பர்கள் கேலி செய்ததை நினைத்து பார்க்கும் இனியா சரியாக டான்ஸ் ஆட முடியாமல் திணறுகிறார். இதை பார்த்து சபையில் உள்ளவர்கள் சிரிக்கிறார்கள். கடைசியில் இனியாவிற்க்கு மூன்றாவது பரிசு கிடைக்கிறது. இதுவரைக்கும் நடந்த சுற்றுகளில் முதல் ஆளாக தேர்வான இனியா இப்போது மூன்றாவது பரிசு கிடைத்ததும் அழுது கொண்டே வீட்டிற்கு வருகிறார்.

வீட்டுக்கு வந்ததும் கத்தி கதறி ஆர்ப்பாட்டம் பண்ணுகிறார். மேலும் ராதிகா யார் எனக்கு? எதுக்காக அவங்கள கூட்டிட்டு வந்தீங்க? அவங்க நல்லவங்க கிடையாது. அவங்களால தான் எல்லா பிரச்சனையும் என்று எல்லை மீறி இனியா பேசுகிறார். அப்போது கோபி இனியாவிடம் மன்னிப்பு கேட்டு இனியாவை சமாதானம் செய்யப் போகிறார்.
அதற்கு இனியா ராதிகா எங்க குடும்பத்துக்கு வேண்டாம். அவங்க வந்தாலே பிரச்சனைதான். அவங்களால தான் பாட்டிக்கு பிரச்சனை, எனக்கு பிரச்சனை, அம்மாவுக்கு பிரச்சனை, எல்லாருக்கும் பிரச்சனை என்று பேச பாக்கியா இனியாவை தடுக்கிறார். அதோடு ராதிகாவிடம் மன்னிப்பு கேளு என்று சொல்கிறார்.
கடைசியில் நடந்த எல்லா பிரச்சனைக்கும் காரணம் உங்க அப்பா தான். ராதிகா ஆபீஸ் போவதாக சொன்னாலும் அவர்தான் வற்புறுத்தி கூட்டிட்டு வந்தார். அவர்தான் மேடைக்கு ஏற்றினார். அவர் மீதுதான் எல்லா தப்பும் இருக்கிறது. ஒருத்தர் விருப்பப்பட்ட வாழ்க்கை வாழ்வதற்காக எந்த தடையும் இல்லை. ஆனால் இரண்டு வீடு வேண்டும் என்று பேராசைபடுவது தான் எல்லா பிரச்சனையும் என்று கோபிக்கு பாக்கியா பதிலடி கொடுக்கிறார்.

அப்போது ஈஸ்வரி நீ எல்லா தப்பையும் கோபி மீது தான் போடுவியா? அவன் கூப்பிட்டா இவ எதுக்காக வந்தா? என்று ராதிகாவை திட்டுகிறார். அதற்கு ராதிகா தப்பு எல்லாம் என் மேல தான் என்ன மன்னிச்சிடுங்க. நான் வந்திருக்கவே கூடாது என்று சொல்ல, இனியா மேலும் கோபப்படுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications