அமிர்தா கொடுத்த அதிர்ச்சி.. கோபத்தில் கணேஷ் எடுத்த முடிவு.. கண் கலங்கிய எழில்.. உடைந்து போன குடும்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜனவரி இரண்டாம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.

அதில் அமிர்தா செய்த செயலை நினைத்து கணேஷ் கோபத்தில் வீட்டில் பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார்.

அதே நேரத்தில் மன்னிப்பு கேட்டு அழுது கொண்டிருக்கும் அமிர்தாவுக்கு எழில் ஆறுதல் கூறுகிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்ப்போம்.

Baakiyalakshmi Serial january 2rd episode Ezhil consoles Amritha crying

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் அமிர்தா ரூமில் தனியாக அழுது கொண்டிருக்க, அங்கு வரும் ராதிகா அவருக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது நிலா பாப்பா அம்மா அழாத என்று கண்ணை துடைத்து விட அமிர்தா நான் அழலடா என்று குழந்தையை கட்டிப்பிடித்து கண் கலங்குகிறார்.

அடுத்ததாக உள்ளே வரும் இனியா செல்வி அக்கா இப்பதான் நடந்ததெல்லாம் சொன்னாங்க. ஜெனி அக்காவை போய் பார்த்துட்டு வந்தேன். அவங்க இங்க வருவாங்களான்னு தெரியல. இப்போ இப்படி ஒரு பிரச்சனை. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.... நீங்க எங்கள விட்டு போயிடாதீங்க என்று அமிர்தாவை கட்டிப்பிடித்து அழுகிறார்.

Baakiyalakshmi Serial january 2rd episode Ezhil consoles Amritha crying

மறுபக்கத்தில் ஈஸ்வரியும் ராமமூர்த்தியும் நடக்கும் பிரச்சனைகள் நினைத்து கண்ணீர் விட்டு உட்கார்ந்து இருக்க, அங்கு வரும் பாக்கியா அவர்களை சாப்பிட கூப்பிட அவர்கள் வேண்டாம் என்று சொல்கின்றனர். அதற்கு நீங்கள் மாத்திரை போடணும் இல்லன்னா உடம்பு கெட்டுப் போயிடும் என்று சொல்லி கஞ்சி எடுத்து வந்து இருவரையும் சாப்பிட வைத்து மாத்திரை போட வைக்கிறார்.

பிறகு என் பிள்ளைகளோட வாழ்க்கை இப்படி ஆகணும்னு கொஞ்சம் கூட நினைச்சு பாக்கல. என்னால முடியல என்று பாக்கியா கண்ணீர் விட்டு கதற அதற்கு ஈஸ்வரி நீ மட்டும் என்ன பண்ணுவ பாக்கியா, நான் எப்படி என் பிள்ளையை விட்டுக் கொடுக்காமல் இருக்கனோ அந்த மாதிரி தான் நீயும் அவங்க சந்தோஷமா இருக்கணும்னு நினைச்சு இருப்ப என்று எல்லோரும் கூட்டாக சேர்ந்து அழுது கொண்டிருக்கின்றனர்.

Baakiyalakshmi Serial january 2rd episode Ezhil consoles Amritha crying

அதற்குப் பிறகு எழில் ரூமிற்கு வர ராதிகாவும் இனியாவும் வெளியே வருகின்றனர். அப்போது அமிர்தா எனக்கு கணேஷ் உயிரோடு இருக்கிறார் என்று சத்தியமா தெரியாது. நான் உங்க வாழ்க்கையே கெடுக்கணும் உங்களோட சந்தோஷத்தை கெடுக்கனும்னு ஒருநாளும் நினைச்சதில்ல என்று எழிலிடம் மன்னிப்பு கேட்க அதற்கு எழில் இதெல்லாம் உனக்கு தெரியாதுன்னு எனக்கு தெரியும்.

Baakiyalakshmi Serial january 2rd episode Ezhil consoles Amritha crying

அவங்க அப்பா அம்மாவே அவர் உயிரோட இல்லன்னு தானே நினைச்சிட்டு இருந்தாங்க. அப்படி இருக்கும்போது நான் எப்படி உன்னை தப்பா நினைப்பேன். இருந்தாலும் எனக்கு நடக்கிறது எல்லாம் பார்க்கும்போது பயமா இருக்கு. நீயும் நிலாவும் என் கூட இருக்கணும். உங்க ரெண்டு பேரும் மேல தான் நான் உயிரையே வச்சிருக்கேன் என்று கண்கலங்குகிறார்.

அதை தொடர்ந்து கணேஷ், அமிர்தா என்னை பார்த்து பயந்து போய் அவன் பின்னாடி போய் நிற்கிறா... அவா என்கூட தான் இருக்கணும். நிலா பாப்பா எனக்கும் அவளுக்கும் பிறந்த குழந்தை. அவங்க ரெண்டு பேரும் இங்க வரணும் அதுக்காக நான் என்ன வேணா செய்வேன் என்று கோபப்பட்டு அங்கிருக்கும் பொருள்களை தூக்கி உடைக்கிறார். இதனால் கணேஷின் அப்பாவும் அம்மாவும் பதறுகின்றனர்.

Baakiyalakshmi Serial january 2rd episode Ezhil consoles Amritha crying

பிறகு ராதிகா கோபிக்கு காபி கொடுத்துவிட்டு இவ்வளவு பிரச்சனைகளில் நீங்க இன்னைக்கு தான் சரியா நடந்துட்டு இருக்கீங்க என்று பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் பாக்கியா நான் என்னைக்குமே அவர் நல்ல அப்பா கிடையாது என்று சொன்னது இல்ல. இந்த வீட்ல இருக்கிற யாரும் அப்படி நினைச்சு கூட பார்க்க மாட்டாங்க என்று கோபியிடம் எழிலுக்காக பேசியதற்கு நன்றி சொல்கிறார்.

அதற்கு கோபி கவலைப்படாத பாக்யா எழில், அமிர்தா எப்பவும் இனி சந்தோஷமாக இருப்பாங்க... எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம் என்று ஆறுதல் சொல்கிறார். ராதிகா இதற்கு எதுவும் சொல்லாமல் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+