பாக்கியலட்சுமி: பாக்யாவிடம் மன்னிப்பு கேட்ட ராதிகா.. 10 நாள் தான் கெஞ்சிய கோபி.. ஈஸ்வரிக்கு அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஜனவரி 3ஆம் தேதி எபிசோடு ராதிகா, பாக்யாவுக்கு கொடுத்த பிரச்சனைகளுக்கு எல்லாம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். அதே நேரத்தில் கோபி பாக்கியாவிடம் தான் பத்து நாளில் இந்த வீட்டை விட்டு போய் விடுவேன் என்று சொல்லி இருக்கிறார்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் இரவு தூங்கும் போது மயூ உடன் பாக்கியா பேசிக் கொண்டிருக்கிறார்‌ அப்போது எனக்கு உங்கள மாதிரி இருக்கிறது தான் புடிச்சிருக்கு. எல்லோரும் சண்டை போடுறாங்க. ஆனா எனக்கு சண்டை போடுறது பிடிக்காது என்று சொல்லிக் கொண்டிருக்க பாக்கியா மயூவை சமாதானப்படுத்தி தூங்க வைக்கிறார்.

television baakiyalakshmi serial vijay tv

அந்த நேரத்தில் இனியா பெட்ஷீட்டை போட்டுக்கொண்டு ரூமுக்குள் வர மயூ திருடன் என்று நினைத்து பயப்படுகிறார். இனியாவிடம் பாக்யா என்னாச்சு என்று கேட்க, அதற்கு இனியா ஏசி இல்ல, ஃபேன் ஓடல சாக்குபோக்கு சொல்லி இங்கேயே தூங்க போறேன் என்று பாக்யாவின் பக்கத்தில் படுக்கிறார். பிறகு பாக்யாவின் ஒரு பக்கத்தில் மயூவும் ஒரு பக்கத்தில் இனியாவும் கட்டிப்பிடித்து தூங்குகின்றனர்.

மறுபக்கத்தில் கோபி ரூமில் காத்திருக்கும் போது ராதிகா வந்ததும் எங்க போயிருந்த என்று கேட்க, மொட்ட மாடியில் போன் பேசிக்கொண்டு இருந்தேன். உடம்பு சரியில்லாத எங்க அம்மாவை அனுப்பி வச்சது எனக்கு வருத்தமா இருந்தது என்று பேசிக் கொண்டிருக்கிறார். பிறகு மயூவை கூட்டிட்டு வரேன் என்று ராதிகா சொல்ல, வேண்டாம் பாக்கியா கூட போறேன் என்று மயூ சொன்னதும் பாக்யா கூட்டிட்டு போயிட்டா என்று கோபி சொல்கிறார்.

television baakiyalakshmi serial vijay tv

அதற்கு ராதிகா அவர்களுக்கு ஏன் சிரமம் என்று சொல்ல, அதற்கு கோபி பாக்யா ஆசைப்பட்டு தான் மயூவை கூட்டிக்கொண்டு போனா என்று பாக்கியா பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறார். பிறகு ராதிகா நானும் ஒருத்தங்களை பார்த்தா இவங்க இப்படித்தான் என்று என்னால் புரிந்து கொள்ள முடியும் ஆனால் பாக்கியாவை மட்டும் என்னால் புரிந்துகொள்ளவே முடியல.

அவங்களுக்கும் அவங்க பசங்களுக்கும் நான் எவ்வளவு துரோகம் பண்ணி இருக்கிறேன் அதை தெரிந்தும் என் மேல அக்கறையா இருக்காங்க. உங்களுக்கு உடம்பு சரியில்லாத போது நான் வீட்டுக்கு வந்து பார்க்கும்போதும் சரி, வீட்டை காலி பண்ணும் போதும் சரி, அவங்க மட்டும்தான் எனக்கு ஆறுதலாக இருந்தாங்க என்று சொல்கிறார்.

television baakiyalakshmi serial vijay tv

அப்போது கோபி பழைய பாக்கியாவிற்கும் இப்போ இருக்கிற பாக்கியாவிற்கும் மிகப்பெரிய டிரான்ஸ்பர்மெஷன் இருக்கிறது. இப்ப பாக்கியா ரொம்ப ஸ்மார்ட்டா பேச ஆரம்பிச்சிட்டா. வாடகை கொடுத்துட்டு இருன்னு சொல்லும்போது அவளோட மெச்சூரிட்டி நல்லா இருந்தது.

நான் இந்த வீட்டுக்கு வந்ததிலிருந்து பார்த்துட்டு தான் இருக்கிறேன் இப்போ வேற லெவல் பாக்கியவா இருக்கா என்று கோபி புகழ்ந்து பேச ராதிகா முகம் மாறுகிறது. மறுநாள் காலையில் பாக்கியாவும் செல்வியும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ராதிகா அங்கு வந்து நன்றி சொல்கிறார். அதோடு தான் உங்களுக்காக எத்தனையோ பிரச்சனை கொடுத்தாலும் கூட நீங்க எனக்கு நல்லது நடக்கனும்னு நினைக்கிறீங்க. என்னை மன்னிச்சிடுங்க என்று மன்னிப்பு கேட்கிறார் .

நான் கிச்சன் யூஸ் பண்ணிக்கலாமா என்று ராதிகா கேட்க, உங்க ஹஸ்பண்ட் அதுக்கும் சேர்த்து தான் பே பண்ண போறாரு பண்ணிக்கோங்க என்று சொல்கிறார். இருவரும் கிச்சனில் சமையல் செய்து கொண்டிருக்கும் போது சிரித்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்து ஈஸ்வரி கோபம் ஆகிறார்.

television baakiyalakshmi serial vijay tv

ஆனால் கோபி ராதிகாவும் பாக்கியாவும் சிரித்து பேசுவதை பார்த்ததும் சந்தோஷப்படுகிறார். அப்போது பாக்கியாவிடம் ராதிகாவை எதுக்கு கிச்சனுக்குள்ள விட்டா என்று ஈஸ்வரி கேட்க அதற்கு பாக்கியா கிச்சனுக்கும் சேர்த்து தான் உங்க மகன் பணம் தரேன் என்று சொல்லி இருக்கிறாரே என்று சொல்கிறார்.

அடுத்ததாக கோபி பாக்கியாவிடம் பத்து நாட்களுக்கு வாடகை பணத்தை கொடுக்கிறார். அப்போது பாக்கியா நீங்கள் மேலும் இந்த வீட்டில் இருந்தால் அதற்கு வாடகை கொடுக்கணும் என்று சொல்ல, அதற்கு ராதிகா நாங்கள் பத்து நாளுக்குள் கிளம்பி விடுவோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

பிறகு ஹாலில் உட்கார்ந்து கொண்டு இருக்க கோபியும் வந்து உட்கார்ந்து ஏம்மா பாக்யாவை திட்டிட்டே இருக்கீங்க? பாக்கியா பாவம் என்று சொல்ல, நீ எதுக்கு அப்போ ஹார்ட் அட்டாக் காரிய கூட்டிட்டு வந்தே என்று கேட்க, ஹார்ட் அட்டாக் காரியா யாருமா? அது என்று கேட்க, அந்த ராதிகா தான்... நீ அந்த ராதிகாவோட சிரித்து பேசி நான் பார்த்தது இல்ல ஆனா அவளை உனக்கு எப்படித்தான் பிடிச்சோ என்று ஈஸ்வரி கோபி திட்டிக் கொண்டிருக்கிறார்.

பிறகு பாக்கியா குடும்பத்தினர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது கோபி மயூ ராதிகா சாப்பிட வருகின்றனர். அப்போது ராதிகா பாக்கியாவிடம் நீங்க சாப்பிடுறதை பாக்காம நாங்க வந்துட்டோம். நாங்க அப்புறமா சாப்பிட வரோம் என்று சொல்ல, அதற்கு பாக்கியா எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம் நீங்களும் உட்காருங்க என்று சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+