நிலாவை வைத்து அதிர்ச்சி கொடுத்த கணேஷ்.. எழில் எடுத்த முடிவு.. ஈஸ்வரியால் வந்த புது பிரச்சனை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜனவரி ஐந்தாம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது. அதில் கணேஷ் எழிலிடம் உன்னிடம் இருந்து அமிர்தா மற்றும் நிலாவை நான் பிரித்து விடுவேன் என்று சபதம் போட்டு இருக்கிறார்.அதற்கு எழில் நான் உயிரோடு இருக்கிற வரைக்கும் என்னிடமிருந்து நிலாவையும் அமிர்தாவையும் பிரிக்க முடியாது என்று பதிலுக்கு பேசி இருக்கிறார்.
இந்த நிலையில் செழியன் விவாகரத்து விஷயமாக கோர்ட்டுக்கு போயிருந்த நிலையில் அங்கு ஈஸ்வரியால் பிரச்சனை ஏற்படுகிறது. ஆனால் விவாகரத்துக்கு போயிருந்த இடத்தில் ஜெனியின் மாற்றத்தை பார்த்து செழியன் சந்தோஷப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் இன்று என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் நீதி மன்றத்தில் ஜெனி குடும்பமும் பாக்கியா குடும்பமும் இருக்கின்றனர். அப்போது நீதிபதி செழியன் மற்றும் ஜெனியை அழைக்க இருவரும் நீதிபதி முன்பு நிற்கின்றனர். அப்போது ஜெனியின் வக்கீல் செழியன் கூட வாழ ஜெனிக்கு விருப்பமில்லை என்று வாதிடுகிறார்.

அதில் இரண்டு வருஷத்துக்கு முன்னாடி ஜெனி செழியனை பெற்றோர்களை எதிர்த்து விரும்பி தான் கல்யாணம் செய்து கொண்டார். ஆனால் செழியன் மாலினி என்ற பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளார். அதனால் ஜெனிக்கு ரொம்பவும் மனரீதியாக வருத்தத்தை கொடுத்து இருக்கிறார் என்று சொல்ல, அதற்கு ஈஸ்வரி எழுந்து நின்று ஏன் என்னோட பேரன் கஷ்டப்படலையா? அது என்ன உன் பொண்ணுக்கு மட்டும் தான் கஷ்டமா?

செழியன் தப்பு பண்ணுனான் தான் இல்லன்னு சொல்லல அதுக்காக விவாகரத்து தான் முடிவா? என்று எழுந்து நின்று பேச, அதற்கு ஜட்ஜ் நீங்க அமைதியா உட்காருங்க இல்லன்னா கன்டென்ட் ஆப் கோர்ட் என்று உங்க மேல கேஸ் போடுவோம் என்று சொல்வதையும் கேட்காமல் ஈஸ்வரி திரும்பத் திரும்ப எழுந்து பேசுகிறார். இதனால் பயந்து போன கோபி ஈஸ்வரியை வெளியே கூட்டிட்டு வந்து இப்படியெல்லாம் பேசக்கூடாது.

செழியனுக்காக நம்ம வக்கீல் வாதாடுவார். அதுதான் முறை நீங்க இப்படியே பேசிட்டு இருந்தா உங்கள போலீஸ் ஸ்டேஷனில் அடைத்து வைத்து விடுவார்கள் என்று சொல்ல அதற்கு ஈஸ்வரி பயப்படுகிறார். பிறகு ஜட்ஜ் இந்த கேசை இன்னும் கொஞ்சம் நாளைக்கு ஒத்தி வைக்கிறேன் என்று சொல்லிவிடுகிறார். அந்த நேரத்தில் எழில் பைக்கில் போய்க்கொண்டிருக்கும் போது கணேஷ் ஹெல்மெட் அணிந்தபடி வந்து வழிமறித்து நிற்கிறார்.

அப்போது எழில் யார் என்று தெரியாமல் நகருங்க நான் போகணும் என்று எழில் சொல்ல, கணேஷ் ஹெல்மெட்டை எடுத்துவிட்டு ஒரு நிமிஷம் உன்னோட வழியில் குறுக்க வந்ததற்கே உனக்கு இப்படி இருக்குன்னா என்னோட வாழ்க்கையிலே நீ குறுக்க வந்துட்டியே எனக்கு எப்படி இருக்கும். அமிர்தா பத்தி என்ன முடிவு எடுத்து வச்சிருக்கே என்று கேட்க எழில் அதற்கு அமிர்தாவும் நிலாவும் என்கூட தான் இருப்பாங்க..
என்னை மீறி அவர்களை எப்படி கூட்டிட்டு போறேன்னு நான் பார்த்துக்கிறேன் உன்னால முடிஞ்சதை பார்த்துக்க என்று சவால் விடுகிறார். அதற்கு கணேஷூம் நான் அமிர்தாவையும், நிலாவையும் என்கூட கூட்டிட்டு போய் காண்பிக்கிறேன் என்று சவால் விடுகிறார். மறுபக்கத்தில் ஜெனிகோர்ட்டில் வெளியே தனியாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.

அப்போது அவருக்கு விக்கல் எடுக்கிறது அதை பார்த்து செழியன் பதறி போய் காரில் இருந்து தண்ணீர் எடுத்துட்டு வந்து ஜெனி பக்கத்தில் வைக்கிறார். முதலில் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கும் ஜெனி பிறகு சிறிது நேரம் கழித்து அந்த பாட்டிலில் இருக்கும் தண்ணீரை எடுத்து குடிக்கிறார். அதை பார்த்து பாக்கியாவும் எழிலும் சந்தோஷப்படுகிறார்கள். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications