பாக்கியலட்சுமி: ஈஸ்வரிக்காக கூண்டில் ஏறி பாக்யா சொன்ன வார்த்தை.. பரிதவித்த கோபி.. ராதிகா மாறிட்டாரே

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூலை பத்தாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ஈஸ்வரியின் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்திருக்கும் நிலையில் ராதிகா மற்றும் கமலா ஈஸ்வரிக்கு எதிராக சாட்சி சொல்லி இருக்கின்றனர். அதே நேரத்தில் பாக்யா சொன்ன வார்த்தையை கேட்டு எல்லோரும் ஃபீல் பண்ணுகின்றனர். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

இந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் போலீஸ் ஈஸ்வரியை விசாரணை செய்ய ஈஸ்வரி எனக்கு ராதிகாவை பிடிக்காது தான், எனக்கு அவங்களோட கல்யாணத்துல விருப்பம் இல்லை, ஆனால் குழந்தையை கொல்லுற அளவுக்கு நான் கொடூரமானவ கிடையாது. நான் எதுவும் செய்யல என்று அழுது கொண்டிருக்க அதை நம்பாத போலீஸில் லத்தியை காட்டி ஒழுங்கு மரியாதையா உண்மைய ஒத்துக்கோங்க என்று மிரட்டுகின்றனர்.

Baakiyalakshmi Serial

மறுபக்கத்தில் ராமமூர்த்தி உடைந்து போய் இருக்க பாக்கியா அத்தை நிச்சயமா எதுவும் செஞ்சு இருக்க மாட்டாங்க. நாளைக்கு அவங்க கண்டிப்பா வீட்டுக்கு வந்துருவாங்க அழாதீங்க மாமா என்று ஆறுதல் சொல்கிறார். அடுத்த நாள் காலையில் ஈஸ்வரியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர். அதற்கு முன்பு பாக்யா தன்னுடைய குடும்பத்தோடு நீதிமன்றத்தில் காத்திருக்கிறார். அதுபோல ராதிகாவும் அவருடைய அம்மாவும் நீதிமன்றத்தில் இருக்கின்றனர்.

அங்கு வரும் கோபி ராதிகாவும் கமலாவும் நிற்பதை பார்த்து கோபப்படுகிறார். பக்கத்திலேயே பாக்கியா நிற்பதை பார்த்து எங்கே போகலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். அப்போது கமலா பாத்தியா இப்ப கூட கோபி நாம் நிற்கிறதை பார்த்து நம்மிடம் வரவில்லை. பாக்கியாவிடம் போகவா நம்மிடம் வரவா என்று யோசித்திட்டு இருக்காரு என்று ஏற்றி விடுகிறார்.

Baakiyalakshmi Serial

அதைத் தொடர்ந்து ஈஸ்வரியை கோர்ட்டுக்குள் கூட்டிட்டு வந்ததும் ராமமூர்த்தி கதறி அழுகின்றார். அவரை எல்லாரும் சமாதானப்படுத்துகின்றனர். பிறகு கேஸ் விசாரணைக்கு வருகிறது. அப்போது ஈஸ்வரியிடம் கோபி ராதிகா கல்யாணத்தில் உங்களுக்கு விருப்பமில்லை.. அதுபோல அவங்க குழந்தையை கலைக்க சொல்லி இருக்கீங்க... ஏற்கனவே ராதிகாவுடன் உங்க மகன் வாழ்வது பிடிக்காமல் நீங்க கோபியை வீட்டுக்கு கூட்டிட்டு போயிருக்கீங்க.

Baakiyalakshmi Serial

பிறகு ராதிகா அங்கே வந்து இருந்தது உங்களுக்கு சுத்தமா பிடிக்கல, அப்ப கூட ராதிகாவிடம் இருந்து என்னுடைய மகனை நிரந்தரமா பிரித்திடுவேன் என்று நீங்க சபதம் போட்டு இருக்கீங்க இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது நீங்க தான் ராதிகாவை தள்ளிவிட்டு குழந்தையை கலைத்தீர்களா? என்று கேட்க, ஈஸ்வரி நான் எதுவும் பண்ணல என்று சொல்கிறார். அதற்குப் பிறகு ராதிகா மற்றும் கமலா என ஒவ்வொருத்தராக கூண்டில் ஏறி விசாரிக்க ராதிகா இவங்கதான் என்னை தள்ளி விட்டாங்க என்று அதிர்ச்சி கொடுக்கிறார்.

Baakiyalakshmi Serial

கமலா இவங்க ராதிகாவை பிடித்து தள்ளுனதை நான் என் ரெண்டு கண்ணால பார்த்தேன் என்று சாட்சி சொல்லி ஷாக் கொடுக்கிறார். அடுத்ததாக பாக்யாவை கூண்டில் ஏற்றி விவாகரத்தான பிறகு வீட்டை விட்டு வெளியே போகலாமே என்று கேட்க, பாக்கியா விவாகரத்து ஆனதால் மற்ற உறவுகள் முறிந்து போயிடனுமா? என்று பதில் சொல்கிறார். மாமியார் ராதிகாவை பிடித்து தள்ளி இருப்பாங்களா என்று கேட்க... நிச்சயமா இல்ல. அத்தை அப்படி பண்ணவே மாட்டாங்க என்று சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+