பாக்கியலட்சுமி: ஈஸ்வரிக்காக ராதிகாவிடம் கோபி கேட்ட கேள்வி.. அடிக்க பாய்ந்த எழில்.. கமலா உடைத்த உண்மை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூலை எட்டாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ஈஸ்வரி ஜெயிலுக்கு போனதால் கோபி ராதிகாவிடம் சண்டை போட, கமலா கோபிக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ஈஸ்வரி ஜெயிலுக்கு போனது பற்றி கோபி எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லிக் கொண்டிருக்க, ராமமூர்த்தி உனக்கு தெரியாம எப்பிடிடா இவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கும்? உன் வீட்டில் இருந்து தான் கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்காங்க.. உன்ன நம்பி தானே வந்தா... எங்களை எத்தனை முறை தான் இப்படி எங்களை சித்திரவதை பண்ணுவ?

அவளை வீட்டை விட்டு அனுப்பிவிட்டு இப்போ ஜெயிலுக்கும் அனுப்பிட்டியே பாவி என்று அடிக்க இனியா உங்களை பார்த்தாலே எனக்கு பிடிக்கல டாடி என்று சொல்ல, கோபி உன் மேல சத்தியமா எனக்கு எதுவும் தெரியாது என்று சத்தியம் செய்ய வர எழில் கோபியை தடுத்து நிறுத்தி அடிக்க பாய்ந்து இதற்கு மேல உங்க நாடகம் எங்ககிட்ட எடுபடாது என்று திட்டுகிறார்.
பிறகு பாக்யா எல்லாரையும் சமாதானம் செய்து வீட்டிற்குள் கூட்டிட்டு போகிறார். கோபி அந்த இடத்தில் நின்று கொண்டிருக்கும்போது அக்கம் பக்கத்தினர் எல்லாரும் கோபியை திட்டுகின்றனர். இதனால் கோபமான கோபி வீட்டு கதவை வேகமாக தட்ட ராதிகா பயந்தபடியே கதவைத் திறக்கிறார். ராதிகாவிடம் கோபி நீ எதற்காக வாசலில் நின்று பார்த்துக் கொண்டே இருந்தே? தெருவில் நின்று எங்க அம்மாவை போலீஸ் புடிச்சிட்டு போறாங்களான்னு பாத்துட்டு இருந்தியா? நீ இவ்வளவு பெரிய வன்மம் புடிச்சவளா?

எங்க அம்மாவ வீட்டை விட்டு அனுப்பிய பிறகும் உன் கோபம் அடங்கலையா? என்று திட்டிக் கொண்டிருக்க ராதிகா எதுவும் சொல்ல முடியாமல் பயந்த படி நிற்கிறார். அங்கு வரும் கமலா கோபியிடம் நீங்க எதுக்கு ராதிகாவை திட்டுறீங்க? ராதிகாவுக்கும் இதுக்கும் சம்பந்தம் கிடையாது நான்தான் உங்க அம்மா மேல போலீசில் கம்ப்ளைன்ட் கொடுத்தேன் என்று சொல்ல, கோபி அதிர்ச்சி அடைகிறார்.
அதோடு உங்க அம்மா என் பொண்ணோட குழந்தையை கொன்னுட்டாங்க என்று சொல்ல கோபி மாமியார்னு பாக்காமல் கோபமாக நீ வான்னு திட்டுகிறார். அதோடு எங்க அம்மா தான் தள்ளிவிட்டாங்கனு நீங்க பார்த்தீர்களா? இப்படியே சொல்லிட்டே இருக்கீங்க அன்னைக்கு எங்க அம்மாவ நான் வீட்டை விட்டு போக சொன்னது ராதிகாவின் மன நிம்மதிக்காகத்தான். அதுவே தப்புன்னு இன்னைக்கு வரைக்கும் நான் பீல் பண்ணிட்டு இருக்கிறேன்.

அவங்க உடம்பு சரியில்லாதவங்கன்னு தெரிஞ்சும் நீ போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து கொடுத்திருக்க... அது என்னோட குழந்தை எனக்கும் என் மனைவிக்கும் உள்ள விஷயம் அதுல தலையிடத்துக்கு நீ யாரு? என்று கமலாவை திட்டிக் கொண்டிருக்கும் போதே மயூ வந்ததும் அமைதியாகும் கோபி நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு போறேன் எங்க அம்மாவுக்கு ஏதாவது பிரச்சனை வந்தா உங்க ரெண்டு பேரையும் சும்மா விடமாட்டேன் என்று திட்டி விட்டு விட்டு போகிறார்.
பிறகு மயூ என்னாச்சு என்று பயந்த படி கேட்க ஒன்னும் இல்லடா இனி அந்த ஈஸ்வரி காலத்துக்கும் ஜெயில்ல தான் இருக்கணும். ஜெயிலில் இருந்து வர முடியாது என்று கமலா சொல்லிக் கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து கோபி போலீஸ் ஸ்டேஷனுக்கு வர அங்கு பாக்கியா எழில் ராமமூர்த்தி எல்லோரும் ஈஸ்வரியை பார்க்க ஸ்டேஷனுக்குள் விடாததால் புலம்பி கொண்டிருக்கின்றனர்.

அந்த நேரத்தில் கோபி அங்கு வந்ததை பார்த்ததும் ராமமூர்த்தி நீ எதுக்குடா இங்க வந்த என்று அவரை அடித்து துரத்த இவர்கள் சண்டை போடுவதை பார்த்து போலீஸ் இவர்களை திட்டி விட்டு இங்கே எதுவும் பேச முடியாது நாங்க இப்போ ஈஸ்வரியை கோர்ட்டுக்கு கூட்டிட்டு போக போறோம். நீங்க எதுவா இருந்தாலும் அங்க வந்து பேசுங்க என்று சொல்லிவிடுகிறார்.

வக்கீலும் கேஸ் ரொம்ப ஸ்ட்ராங்கா போட்டு இருக்காங்க, கோர்ட்ல தான் பேசணும் என்று சொல்ல மொத்த குடும்பத்தின் முன்பு ஈஸ்வரியை போலீஸ் ஸ்டேஷனிலிருந்து கோர்ட்டுக்கு ஜிப்பில் ஏற்றுக்கொண்டு போகின்றனர். ஈஸ்வரி அழுது கொண்டே ஜீப்பில் போகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications