மொத்த குடும்பத்திற்கும் அதிர்ச்சி கொடுத்த ஈஸ்வரி.. பரிதாப நிலையில் ராதிகா.. கோபி இப்படியும் பேசுவாரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூன் 10ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் மருத்துவமனையில் அட்மிட் ஆன ஈஸ்வரி கோபி பேச்சை கேட்டு பாக்யா வீட்டிற்கு வர மறுக்கிறார். மறுபக்கத்தில் கோபி மீது ராதிகா படும் கோபத்தில் இருக்கிறார்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ஹாஸ்பிடலில் எல்லோரும் இருக்கும்போது டாக்டர் ரிப்போர்ட் எல்லாம் வந்துடுச்சு எதுவும் பெருசா பிரச்சனை இல்ல, ஆனா இன்னைக்கு ஒரு நாள் மட்டும் இங்கேயே இருக்கட்டும் நாளைக்கு வீட்டுக்கு கூட்டிட்டு போங்க என்று சொல்ல பாக்யா எழில் மற்றும் ராமமூர்த்தியை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு செழியன் உடன் ஹாஸ்பிடலில் தங்குகிறார்.

Television Baakiyalakshmi Serial Vijay TV Entertainment

கோபி, ராதிகாவை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு அவரும் ஹாஸ்பிடலில் தங்குகிறார். பாக்யா நைட் எல்லாம் கண் முழித்து ஈஸ்வரி பக்கத்தில் உட்கார்ந்து இருக்க, கோபி காபி வாங்கி வந்து கொடுக்கிறார். மறுநாள் காலையில் ராமமூர்த்தி ஹாஸ்பிடல் வந்து ஈஸ்வரியை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போயிடலாம் என்று சொல்ல கோபி இல்ல அம்மாவை நான் தான் கூட்டிட்டு போவேன். அவங்கள நான் நல்லபடியா பார்த்துக்கொள்வேன் என்று மீண்டும் சொல்கிறார்.

அதற்கு ராமமூர்த்தி, கிழிச்ச எனக்கு ஸ்டோக் வர நீ தான் காரணம். இப்போ ஈஸ்வரியும் இங்க வந்து படுத்திருக்க நீ தான் காரணம். நீ ஒன்னும் பாத்துக்க தேவையில்லை என்று சொல்கிறார். அதற்கு கோபி உள்ளே வந்து அம்மா என்கூட தான் வரணும். நீங்க இப்போ பாக்யா வீட்டுக்கு போயிட்டா, அப்புறம் நான் உடைந்து போயிடுவேன். நீங்க இல்லாம என்னால வாழ முடியாது என்று செண்டிமெண்டாக பேச ஈஸ்வரியின் மனமும் லேசாக மாறுகிறது.

அப்போது கோபி இனிமே உங்களை நான் நல்லா பாத்துக்குவேன், என் கூடவே வாங்க என்று கண் கலங்குகிறார். பிறகு ராமமூர்த்தி பாக்யா செழியன் உடன் ஈஸ்வரி தங்களுடைய வீட்டிற்கு கூப்பிட அதற்கு ஈஸ்வரி நான் இப்போ உங்களோட வந்துட்டா கோபி ரொம்ப வருத்தப்படுவான். அவன் இனி என்னை நல்லபடியா பாத்துக்குவான்.

இனிமேல் நான் ஒழுங்கா மூணு வேலையும் சாப்பிடுகிறேன் என்று கோபியுடன் கிளம்பி போகிறார். மறுபக்கத்தில் கோபி ஈஸ்வரி பேச்சை கேட்டு தன்னைத் திட்டியதை, ராதிகா நினைத்து கண்கலங்க கமலா நீ ஒன்னும் கவலைப்படாத அந்த அம்மா ஆஸ்பத்திரிக்கு போனது கூட நல்லதுக்கு தான். இனிமே பாக்யா வீட்டில் அவங்களை இங்கு அனுப்ப மாட்டாங்க.

அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிருவாங்க. நீயும் மாப்பிள்ளையும் சந்தோசமா இருக்கலாம் என்று சொல்ல, அப்போது பெல் அடித்ததும் கமலா பார் நான் சொன்னதும் பெல் கூட அடிக்கிறது என்று சொல்லியபடியே கதவை திறக்க, வெளியே கோபி ஈஸ்வரியை கூட்டிகொண்டு வந்து நிற்கிறார்.. இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+