வீட்டிற்கே வந்து ராதிகாவை கடுப்பாக்கிய பாக்யா.. கோபி செய்த செயல்.. ஃபீல் பண்ணிய ராமமூர்த்தி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூன் 12-ம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ஈஸ்வரியை பார்க்க வேண்டும் என்பதற்காக பாக்கியாவும் ராமமூர்த்தியும் ராதிகா வீட்டிற்கு வந்திருக்கின்றனர்.
அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் கோபி ஈஸ்வரிக்கு சாப்பாடு கொடுத்து சாப்பிட வைக்கிறார். பிறகு இரவு ஆனதும் பாக்யா ரெஸ்டாரண்டில் இருந்து லேட் ஆகி வீட்டிற்கு வர, டைம் ஆகிவிட்டதால் இனியாவையும் கூப்பிட்டு வேலை செய்ய சொல்கிறார். இவர்கள் வேலை செய்து கொண்டிருக்கும் போது ராமமூர்த்தி கிச்சனுக்கு வர, பாக்கியா அவரிடம் பசிக்குதா? என்று கேட்கிறார்.

அதற்கு ராமமூர்த்தி இல்லம்மா என்று சொல்கிறார். ஆனாலும் அவர் டல்லாக இருப்பதை பார்த்த பாக்கியா மாமா ஏன் டல்லா இருக்கீங்க? என்று கேட்க, மனசு சரியில்லமா, ஈஸ்வரியை பாக்கணும் போல இருக்கு என்று சொல்கிறார். அதோடு ஈஸ்வரியை பார்ப்பதற்கு துணையாக இனியாவை கூப்பிட, இனியா அங்க மயூவோட பாட்டி இருப்பாங்க நான் வரல என்று சொல்கிறார்.
பிறகு அமிர்தாவை கூப்பிட, அமிர்தா தாத்தா நான் எப்படி அங்க வர என்று அவரும் மறுத்து விடுகிறார். பிறகு ஜெனி எனக்கும் பாட்டியை பாக்கணும் போல இருக்கு. ஆனால் நானும் வரவில்லை என்று சொல்லிவிடுகிறார். இதைத்தொடர்ந்து பாக்கியா நான் உங்க கூட வரேன் மாமா என்று சொல்லி கிளம்பி போகிறார். ராதிகா வீட்டு காலிங் பெல் அடிக்க ராதிகா கதவை திறக்க இவர்களை பார்த்து ஷாக் ஆகிறார்.
பாக்யா மாமா அத்தையை பாக்கணும்னு சொன்னாரு அதான் கூட்டிட்டு வந்தேன் என்று சொல்ல, ராதிகா உள்ளே வர சொல்கிறார். ஈஸ்வரி இவர்களை பார்த்ததும் சந்தோஷப்பட்டு உள்ளே கூப்பிடுகிறார். பிறகு பாக்யா ஈஸ்வரிக்கு கொண்டு வந்த சாப்பாட்டை கொடுத்து சாப்பிட வைக்கிறார். ஈஸ்வரி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே கோபியும் வீட்டிற்கு வந்து விடுகிறார்.
அப்போது ஈஸ்வரி பாக்யா சாப்பாட்டை சாப்பிட்ட பிறகுதான் செத்துப்போன நாக்குக்கு உயிர் வந்த மாதிரி இருக்கு என்று ஈஸ்வரி சொல்கிறார். அப்போது கோபியும் பாக்கியாவும் ஈஸ்வரியை மாறி மாறி கவனித்துக் கொள்கின்றனர் இதை பார்த்து ராதிகா மற்றும் கமலா கடுப்பாகின்றனர். அதற்குப் பிறகு இவர்கள் வீட்டிற்கு கிளம்பவும் ஈஸ்வரி அடிக்கடி வீட்டுக்கு வாங்க என்று சொல்கிறார்.
பிறகு பாக்யா இனியாவுடன் உட்கார்ந்து ப்ராஜெக்ட் வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து இனியா தூங்கப்போனதும் எழில் கீழே வந்து கதை எழுதவே முடியல. இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு. கிடைத்த வாய்ப்பை சரியா பயன்படுத்திகிட மாட்டேனோனு பயமாயிருக்கு என்று சொல்கிறார். அதற்கு பாக்கியா இதற்கு பெயர் தான் மைண்ட் பிளாக் னு சொல்லுவாங்க என்று டீ போட்டுக் கொடுத்து எழிலை கூலாக்கி கதை எழுத வைக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications