ராதிகாவை அலட்சியப்படுத்தும் கோபி.. மூக்கை உடைத்த பாக்யா.. ஈஸ்வரி மாறிட்டாங்களே? சந்தோஷத்தில் பழனி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூன் 14ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் பழனிசாமியின் கடை திறப்பு விழாவை பாக்கியா பிரமாண்டமாக செய்து முடிக்க மொத்த குடும்பமும் சந்தோஷத்தில் இருக்கின்றனர். மறுபக்கத்தில் கோபி ரெஸ்டாரண்ட் மற்றும் ஈஸ்வரியை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பழனிச்சாமியின் ரெஸ்டாரண்ட் ஓப்பன் பண்ணுவதற்காக பாக்கியா டெக்ரேசன் செய்து வைத்திருக்கிறார். பிறகு பழனியின் அம்மா கடையை திறந்து வைக்க எல்லோரும் விளக்கு ஏற்றுகின்றனர். அப்போது பாக்யாவையும் விளக்கேற்ற வைக்கின்றனர். பிறகு பாக்யா சர்ப்ரைஸ் என்று சொல்லி பழனிச்சாமியின் குடும்பத்திற்கு ஸ்வீட் செய்து கொடுக்கிறார்.

இந்த இரண்டு கடையும் இனி ஒன்றுதான். ஒன்றே ஒன்றை பிரித்து பார்க்க வேண்டாம் என்று பழனி பாக்கியாவிற்கு கைகொடுக்க பழனியின் அம்மாவும் அக்காவும் அதை பார்த்து சந்தோஷப்படுகின்றனர். அப்போது பழனியின் அக்கா மகன் உங்க குடும்பத்தில் இருந்து வேறு யாரும் வரலையா? என்று பாக்யாவிடம் கேட்க பாக்கியா உங்க மாமா கூப்டா தானே வருவாங்க என்று சொல்ல, அதற்கு பழனிச்சாமி நான் வேணும்னு கூப்பிடாம இருக்கல.
நான் கடை திறப்பு விழாவை சிம்பிளா முடித்துவிடலாம் என்று நினைத்தேன். ஆனா நீங்கதான் இவ்வளவு கிராண்டா செஞ்சு வச்சிருக்கீங்க. இனி எல்லாரையும் வர வச்சி ஒரு பார்ட்டி வெச்சிடலாம் என்று பழனிசாமி சொல்ல எல்லாரும் சிரித்துக் கொண்டிருக்கின்றனர். மறுபக்கத்தில் கோபி டைமுக்கு டைம் ரெஸ்டாரண்ட் வேலையும் பார்த்துக்கொண்டு ஈஸ்வரிக்கு சாப்பாடு மாத்திரைகளையும் கொடுத்து வருகிறார்.

ஆனாலும் ரெஸ்டாரண்டில் சின்ன மனக்கசப்பு ஏற்படுகிறது. அதற்குப் பிறகு கோபி போனில் பேசிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் அங்கு வரும் ராதிகா கோபி இடம் பேச போகும்போது கோபி அவரிடம் பேசாமல் அவாய்ட் பண்ணுவது போல போனில் பேசிக்கொண்டு இருக்க, ராதிகா கோபத்தில் திரும்பி சென்று விடுகிறார். அடுத்த நாள் காலையில் கோபியும் ஈஸ்வரியும் வாக்கிங் சென்று கொண்டிருக்கும்போது கோபி வீட்டையும் ரெஸ்டாரண்டையும் மேனேஜ் பண்ண முடியல என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்.
இதற்கு ஈஸ்வரி பாக்யா உன்னை விட எத்தனையோ வருஷம் பிசினஸ் பண்றா, ஆனா ஒரு நாள் கூட முகம் சுளிச்சது இல்ல, புலம்பியதும் இல்லை என்று பாக்கியாவை பற்றி பெருமையாக பேசுகிறார். இதைத் தொடர்ந்து பாக்யாவும் ராமமூர்த்தியும் வாக்கிங் வர ராமமூர்த்தி ஈஸ்வரியோடு தனியாக பேச செல்கிறார்.

அப்போது கோபி பாக்யாவிடம் சென்று நீ எப்படி ரெஸ்டாரண்டையும் கவனித்துக் கொண்டு வீட்டையும் மேனேஜ் பண்ற என்று கேட்க, அதற்கு பாக்கியா நீங்கதான் ரொம்ப புத்திசாலி ஆச்சே! என்று பதிலடி கொடுத்துவிட்டு போகிறார். இறுதியாக ராமமூர்த்தி இடம் அத்தை எப்படி இருக்காங்க என்று பாக்யா கேட்க, அதற்கு ராமமூர்த்தி உன்னுடைய சாப்பாட்டை தான் ரொம்ப மிஸ் பண்ற, ஆனாலும் இன்னும் அவ அங்க பட்டுட்டு தான் திரும்பி வரணும் என்று சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications