ஈஸ்வரியை அடிக்க பாய்ந்த கமலா.. கோபி கொடுத்த அதிர்ச்சி.. பழிவாங்கிய ராதிகா.. பாக்கியா கேட்ட கேள்வி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூன் 22ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ராதிகா வீட்டில் எல்லோரும் குழந்தை கலைந்து போனதற்கு காரணம் ஈஸ்வரி தான் என்று சொல்லி ஈஸ்வரியை வீட்டை விட்டு துரத்த ஈஸ்வரி மீண்டும் பாக்யா வீட்டிற்கு வந்திருக்கிறார்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாக்கியா ஈஸ்வரி பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் போது செல்வி, எழில் எல்லோரும் அவங்களை பற்றி எதுக்கு யோசிக்கிறீங்க என்று திட்ட, அதற்கு பாக்கியா அவங்க என்னுடைய அத்தை. அவங்களை பத்தி உங்களுக்கு தெரியாது. அவங்க வெளியே என்னதான் பேசினாலும் அவர்களை யாராவது ஏதாவது சொன்னால் தாங்கிக்க மாட்டாங்க.

அவங்களுக்கு ஏதோ பிரச்சனை இருக்கு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் ராதிகா டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வர ஈஸ்வரி உள்ளே இருப்பதை பார்த்து ராதிகா, கமலா, கோபி என எல்லோரும் அதிர்ச்சி அடைகிறார்கள். கமலாவும் ராதிகாவும் உங்களால தான் எங்க குழந்தை போயிடுச்சு என்று ஆர்ப்பாட்டம் செய்ய அதற்கு ஈஸ்வரி நான் எதுவும் செய்யல என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது கமலா ஈஸ்வரியை அடிக்க போகிறார்.
ஆனாலும் கோபி எதுவும் சொல்லாமல் நிற்கிறார். அதோடு கமலா இனி நீ இந்த வீட்டில் இருக்கக் கூடாது என்று ஈஸ்வரியை சொல்ல, கோபி எதுவுமே பேசாமல் இருக்கிறியே அம்மா எதுவும் செய்ய மாட்டாங்க என்று சொல்ல மாட்டியா என்று கண்கலங்க அதற்கு கோபி என்னமா சொல்ல சொல்லுறீங்க? எல்லாம் நீங்கதான் பண்ணுனீங்க? என்று கோபியுடன் தன் பங்குக்கு கோவப்பட ஈஸ்வரி உடைந்து போய் அழுகிறார்.
கமலா என்ன மாப்பிள்ளை அவ்வளவுதானா? இவங்க பேர பிள்ளைங்க நல்லா இருக்க வேண்டும் என்று தானே உங்க குழந்தை இந்த பூமிக்கு வருவதற்கு முன்னாடியே கொன்னுட்டாங்க.. இன்னும் எதுக்கு இவங்க இந்த வீட்டில் இருக்கணும் வெளியே போக சொல்லுங்க என்று சொல்ல ராதிகாவும் தயவுசெய்து வெளியே போயிடுங்க என்று சொல்ல கோபியும் நீங்க பண்ணுன வரைக்குமே போதும் வெளிய போயிடுங்க என்று என்று சொல்கிறார்.
இதனால் ரூமுக்கு போன ஈஸ்வரி அங்கு உட்கார்ந்து வீட்டில் எல்லாரையும் சொன்னதையும் கேட்காமல் கோபியோடு வந்தது, பிறகு ஹாஸ்பிட்டலில் இருக்கும்போது கூட ராமமூர்த்தி வீட்டுக்கு கூப்பிட்டதும், நான் என்னுடைய மகனுக்காக வரலை என்று சொன்னது என எல்லாவற்றையும் நினைத்து பார்த்து அழுது கொண்டிருக்கிறார். அப்போது கமலா வெளியே வர போறீங்களா? இல்ல கழுத்தை புடிச்சு தள்ளவா? என்று கேட்க, ராமமூர்த்தி உனக்கு அந்த வீட்டிலதான் போய் அவமானப்பட்டால் தான் புத்தி வரும் அப்பதான் பாக்கியாவோட அருமை தெரியும் என்று சொன்ன விஷயத்தை நினைத்து கண்கலங்குகிறார்.
உடனே அழுது கொண்டே சூட்கேஸ் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வருகிறார். பிறகு ஈஸ்வரி ரோட்டில் நின்றபடி இருக்க பாக்கியா யாரோ கூப்பிட்டது போல இருக்கிறது என்று வெளியில் ஓடி வந்து பார்க்க ஈஸ்வரியை பார்த்து அதிர்ச்சி அடைந்து ஓடி வந்து என்னாச்சு அத்தை என்று கேட்க, ஈஸ்வரி பதில் ஏதாவது பேசாமல் தலையில் அடித்துக் கொண்டு பாக்யாவை கட்டிப்பிடித்து அழுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications