ஈஸ்வரி பெயரால் பாக்யாவுக்கு வந்த பிரச்சனை.. மனம் மாறிய ராதிகா.. கோபி இப்படி செஞ்சிட்டாரே..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மார்ச் 15ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் புதியதாக ரெஸ்டாரண்ட் தொடங்கிய கோபிக்கு குடும்பத்தினர் எல்லோரும் வாழ்த்துக்கள் சொல்கின்றனர். அதே நேரத்தில் பாக்யா ரெஸ்டாரண்டில் பாக்யாவுக்கு பிரச்சனை வருகிறது.

அதுபோல பாக்கியாவால் மீண்டும் மயூ வீட்டிற்கு வந்து இருப்பதை பார்த்ததும் ராதிகா மனம் மாறுகிறார். ஆனால் கோபி பாக்கியாவிற்கு அதிர்ச்சி கொடுக்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

Baakiyalakshmi Serial march 16th promo and episode full update

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ராமமூர்த்தி தன்னுடைய துணிகளை காய வைத்து கொண்டு இருக்கும் போது அங்கே வரும் ஈஸ்வரி ராமமூர்த்தியுடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். இருவரும் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கும் போது பாக்கியாவோடு மயூ வீட்டிற்கு வருகிறார். அப்போது இவர்களை பார்த்ததும் பயந்து போய் நான் வீட்டுக்கு போய் விடுகிறேன் என்று சொல்கிறார்.

ஆனாலும் பாக்கியா வீட்டிற்கு கூட்டிட்டு வந்து மயூக்கு ஜூஸ் போட்டு கொடுக்கிறார். பிறகு மயூவை ஷாப்பிங் கூட்டிட்டு போயிட்டு வருகிறார். இருவரும் மீண்டும் வீட்டிற்கு வந்த நேரத்தில் ராதிகா வீட்டிற்கு வருகிறார். அப்போது நீ எப்படி வீட்டுக்கு வந்தா என்று ராதிகா கேட்க, அதற்கு நான் உங்களுக்கு பலமுறை போன் பண்ணுனேன். நீங்க போனை எடுக்கல. உங்க போனுக்கு என்ன ஆச்சும்மா? நான் வாசலில் நின்றுகொண்டு இருந்தேன்.

அப்புறம் பாக்கியா ஆன்ட்டி தான் என்னை ஷாப்பிங் கூட்டிட்டு போயிட்டு வந்தாங்க. எனக்கு நிறைய சாக்லேட் எல்லாம் வாங்கி கொடுத்தாங்க. எல்லாத்தையும் வாங்கிட்டு வந்துட்டோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ராதிகாவிடம் பாக்யா நீங்க மயூவை இங்கேயே இருக்க வைக்கலாம் என்று சொல்ல அதற்கு ராதிகா ஏற்கனவே நாங்க ரெண்டு பேரும் இங்கே இருக்கிறோம்.

அது உங்களுக்கு புடிக்கல என்று எங்களுக்கு தெரியும் ஆனாலும் வேற வழி இல்லன்னு தான் நான் இங்கே இருக்கிறேன். இதில் மயூவும் வந்தால் நல்லா இருக்காது என்று சொல்லிக் கொண்டு மயூவை கடைக்கு கூட்டிட்டு போனதுக்காக நன்றி சொல்லிவிட்டு ராதிகா கிளம்புகிறார். பிறகு பாக்யா ரெஸ்டாரண்டுக்கு போக அங்க சாப்பாடு மீதம் இருப்பதை பார்த்து இதை வேலை செய்பவர்கள் எல்லோரும் சாப்பிட்டால் சரியாக போய்விடும் என்று பேசிக் கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் கோபியின் ரெஸ்டாரண்டை ஈஸ்வரியும் ராமமூர்த்தியும் திறந்து வைக்க எல்லோரும் சந்தோஷமாக ரெஸ்டாரண்டில் இருக்கின்றனர். அப்போது அங்கு முதல் நாளே கூட்டம் அமோகமாக இருப்பதை பார்த்து ஈஸ்வரி என்னுடைய மகனை இப்படி பார்த்து எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு என்று பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

Baakiyalakshmi Serial march 16th promo and episode full update

அதே நேரத்தில் ராதிகாவும் அங்கே வேலை செய்து கொண்டிருக்கிறதை பார்த்து ஈஸ்வரி பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் கோபியும் ஈஸ்வரி பெயரில் கிச்சன் ஓபன் பண்ணி இருப்பதை பார்த்து இனியா அம்மாவும் ஈஸ்வரி பெயரில்தான் தொடங்கி இருக்காங்க. அப்பாவும் ஈஸ்வரி பெயரில் தான் தொடங்கி இருக்காங்கன்னு சொல்ல ஈஸ்வரி வெட்கப்படுகிறார். ஆனால் செழியன் இதனால் பிறகு பிரச்சனை வந்து விடக்கூடாது என்று சொல்ல அதற்கு கோபி அப்படியே பிரச்சனை வரதா இருந்தா பாக்கியாவை பெயர் மாற்ற சொல்லுங்க என்று அதிர்ச்சி கொடுக்கிறார்.

Baakiyalakshmi Serial march 16th promo and episode full update

அந்த நேரத்தில் எழில் பாக்கியாவின் ரெஸ்டாரண்டுக்கு போய் அங்கு பேசிக் கொண்டிருக்க எல்லோரும் நீங்க கோபி ரெஸ்டாரண்டுக்கு போகலையா என்று கேட்கின்றனர். அதற்கு எழில் எனக்கு அங்க போக பிடிக்கல என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்று எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+