செழியனை அடித்து தெருவில் தள்ளிய ஜோசப்.. கடும் கோபத்தில் கோபி உடைத்த ரகசியம்.. உடைந்து போன குடும்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் மார்ச் 18 ஆம் தேதியில் இருந்து இருபதாம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் ஜெனிக்கு இரண்டாவது கல்யாணம் நடக்கப்போவது பற்றி கோபி வீட்டில் வந்து போட்டுக் கொடுக்க கோபமான செழியன் ஜெனி வீட்டிற்க்கே போய் பிரச்சனை செய்கிறார்.

அதே நேரத்தில் இனி ஜெனி என்ன முடிவெடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. வீட்டு வாசலில் செழியன் ஜெனிக்காக அழுது கொண்டிருக்க என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Baakiyalakshmi Serial march 18th to 23th promo full update

அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா பிசினஸ் டல்லாக போய்க்கொண்டிருக்க கோபியின் பிசினஸ் தொடங்கியதுமே அமோகமான வரவேற்பு பெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் ஈஸ்வரி தன்னுடைய மகன் குறித்து பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார். அதோடு பாக்யா பிசினஸ் மற்றும் கோபியின் பிசினஸை கம்பேர் பண்ணி பேச இதனால் பாக்கியா மனம் வருந்துகிறார்.

அது குறித்து பழனிசாமி இடம் பாக்கியா பேச அதற்கு பழனிச்சாமி வீட்டு விஷயத்தை பிசினஸ் நடக்கும் இடத்தில் பேசக்கூடாது. பிசினஸ் விஷயத்தில் வீட்டில் போய் பேசக்கூடாது என்று அட்வைஸ் கொடுக்கிறார். இதை பார்த்துக் கொண்டிருந்த செல்வி நீங்க பாக்கியா அக்காவுக்கு வாழ்க்கை முழுக்க இப்படி துணையா இருப்பீர்களா? என்று கேட்க அதற்கு பழனிச்சாமியும் இருப்பேன் என்று சொல்லி இருக்கிறார்.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கத்தில் கோபியின் ரெஸ்டாரண்டில் அவருடைய நண்பரோடு கோபி பேசிக் கொண்டிருக்கும்போது அந்த பக்கமாக வந்த ஜோசப்பை பார்த்ததும் வரவேற்ற கோபி அவரை தன்னுடைய நண்பன் சதீஷ் இடம் இதுதான் என்னுடைய சம்பந்தி ஜெனியுடைய அப்பா என்று அறிமுகப்படுத்த அதனால் கோபமான ஜோசப் யார் யாருக்கு சம்பந்தி உங்க பையனே வேண்டாம் என்று என்னுடைய பொண்ணு டிவோசுக்கு அப்ளை பண்ணியாச்சு.

இன்னும் சில நாட்களில் டைவர்ஸ் கிடைத்ததும் நாங்கள் ஜெனிக்கு வேற கல்யாணம் பண்ணி வைக்க போறோம் என்று சொல்ல அதைக்கேடடு கோபி அதிர்ச்சியாகி இருந்தார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைந்திருக்கும் நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் வீட்டுக்கு வந்த கோபி கோபமாக ஜோசப் பேசியதை சொல்கிறார்.

Baakiyalakshmi Serial march 18th to 23th promo full update

அதாவது ஜெனிக்கு வேற கல்யாணம் பண்ண போறாங்க என்பதை என்னிடமே திமிரா பேசுறாரு என்று கோபி போட்டு கொடுக்க அதனால் கோபமான செழியன் அங்கிருந்து பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்புகிறார். பாக்கியா முதற் கொண்டு வீட்டில் இருக்கும் எல்லோரும் செழியனை தடுத்து பார்க்க செழியன் நிற்காமல் நேரா ஜெனி வீட்டுக்கு வந்து ஜெனி இடம் பேசப்போகிறார்.

அப்போது ஜோசப் செழியனை அடித்து ரோட்டில் பிடித்து தள்ளிவிட்டு கதவை பூட்டி கொள்கிறார். ஜெனி செழியா செழியா என்று உள்ளிருந்து கத்திக் கொண்டிருக்கிறார். இப்படியாக ப்ரோமோ முடிவடைந்திருக்கும் நிலையில் இனி ஜோசப்பை மீறி அங்கிருந்து கோபித்துக் கொண்டு ஜெனி செழியனோடு வீட்டிற்கு வந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Baakiyalakshmi Serial march 18th to 23th promo full update

அதே நேரத்தில் ஒருவேளை ஜோசப் ஜெனியை மிரட்டி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்து விடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி தன்னுடைய அம்மா அப்பாவுக்காக ஜெனி திருமணத்திற்கு சம்மதித்தாலும் மணமேடையில் செழியனை நினைத்து மீண்டும் அங்கிருந்து வருவார். இதுதான் எப்படியும் நடக்கப்போகிறது என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+