கோபியால் செழியன் வாழ்க்கையில் வந்த பிரச்சனை.. எழில் வேற இப்படியா செய்யணும்? நடுத்தெருவில் பாக்கியா
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் மார்ச் 19ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்று இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம். அதில் ஜெனிக்கு இரண்டாவது கல்யாணம் பண்ண போவதாக ஜோசப் சொன்னதை கோபி வீட்டில் வந்து சொல்ல அதனால் செழியன் ஜெனி வீட்டிற்கு போய் பிரச்சனை செய்கிறார்.
அதே நேரத்தில் செழியனை ஜோசப் அடித்து ரோட்டில் தள்ளிவிட்டபோது அங்கு வரும் எழில் அடுத்த பிரச்சனையை உருவாக்குகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாக்கியாவும் ராதிகாவும் கிச்சனில் சமையல் செய்து கொண்டிருக்கும் போது கடுகை வைத்து மாறி மாறி புருஷனுக்கு எடுத்துக்காட்டு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் வீட்டுக்கு வந்த கோபி கோபமாக இருப்பதை பற்றி ஈஸ்வரி விசாரிக்க அதற்கு கோபி ஜோசப் தன்னை பார்த்தது பற்றியும் பிறகு ஜெனிக்கு இரண்டாவது கல்யாணம் பண்ண போகிறேன் என்று சொன்னதைப் பற்றி சொல்ல மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகின்றனர்.
அதனால் செழியன் கோபமாக வண்டி எடுத்துக்கொண்டு ஜெனியை பார்க்க போகிறார். ஜெனி இடம் உன்னையும் குழந்தையும் விட்டுக் கொடுக்க மாட்டேன். நீ இன்னொரு கல்யாணம் பண்ண போறியா? என்று கேட்க என்னை எதுவும் பேசாமல் நிற்கிறார். அதற்கு ஜோசப் ஜெனியை பேச விடாமல் செழியனை வீட்டை விட்டு வெளியே துரத்த முயற்சி செய்கிறார். அதற்கு செழியன் ஜெனியிடம் என் தரப்பு நியாயத்தை கொஞ்சமாவது காது கொடுத்து கேளு.
என்ன நடந்தது என்பதை பற்றி நான் சொல்கிறேன் என்று சொல்ல அதற்கு ஜோசப் அதையெல்லாம் ஏற்கனவே மாலிடி வந்து சொல்லிட்டா நீ வெளியே போ என்று ஜோசப் செழியனை தெருவில் அடித்து தள்ளுகிறார். அப்போது ஜெனியும் மரியமும் இருவரையும் தடுக்க ஜோசப் செழியனை வீட்டை விட்டு வெளியே துரத்தி கதவை பூட்டி விடுகிறார். அதனால் செழியன் வீட்டு வாசலிலேயே அழுது கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் பாக்யா ரொம்ப நேரம் ஆகியும் செழியன் வராததால் பயந்து போய் தெருவில் நின்று பார்த்துக் கொண்டே இருக்கிறார். அப்போது அங்கே வந்த ராமமூர்த்தி விசாரிக்க அப்போது பாக்கியா செழியன் கோபமாக போனதால் ஜெனி வீட்டில் போய் எதுவும் பிரச்சனை பண்ணியிருப்பானோனு எனக்கு பயமாக இருக்கு என்று சொல்ல, அதை கேட்ட ராமமூர்த்தி ஆமா நானும் இதை யோசிக்காமல் விட்டுவிட்டேன்.
இப்போ என்ன பண்ண என்றுதான் யோசித்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் பாக்கியா எழிலுக்கு போன் போட்டு நடந்த விஷயங்களை சொல்ல எழில் நான் போய் பார்க்கிறேன் என்று ஜெனி வீட்டிற்கு வர அங்கு முகமெல்லாம் அடிபட்டு வீட்டு வாசலில் செழியன் அழுது கொண்டிருப்பதை பார்த்ததும் பதறிப்போன எழில் என்ன ஆச்சு என்று கேட்க அதற்கு செழியன் ஜெனிக்கு வேற கல்யாணம் பண்ண போறாங்களாம் என்று மீண்டும் மீண்டும் புலம்பி கொண்டே இருக்கிறார்.
அதற்கு செழியன் எழில் உன்னை அடிச்சது யாருன்னு சொல்லு என்று கேட்க ஜோசப் தன்னை அடித்ததை சொன்ன செழியன் அவர் என்ன அடிச்சாலும் பரவாயில்லை, அவமானப்படுத்தினாலும் பரவால்ல ஆனா ஜெனியை என்னால் விட்டுக் கொடுக்க முடியாது என்று புலம்பி கொண்டு இருக்க கோபமான எழில் அந்த ஆளுகிட்ட நான் போய் பேசுறேன் என்று கிளம்புகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications