பாக்கியலட்சுமி: இருக்கிற பிரச்சனையில் பாக்யா செய்த புது குழப்பம்.. ஜெனி-செழியனுக்கு காத்திருந்த ஷாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மார்ச் 7ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் செழியன் மற்றும் ஜெனியை பேச வைக்க வேண்டும் என்று பாக்யா மற்றும் மரியம் செய்த பிளானால் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.

ஏற்கனவே ஜெனியின் அப்பா ஜோசப் செழியன் மீது பயங்கரமான கோபத்தில் இருக்கும் நிலையில் இப்போது பாக்கியம் மற்றும் மரியம் செய்த செயல் தெரிந்தால் என்ன பிரச்சனை வரப்போகிறதோ என தெரியவில்லை. இந்த நிலையில் இன்று என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Baakiyalakshmi Serial march 27th promo and episode full update

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாக்யா மற்றும் எழில் இருவரும் செழியனை கூட்டிக்கொண்டு வெளியே கிளம்ப அப்போது சோபாவில் உட்கார்ந்தபடியே ஈஸ்வரி எங்க போறீங்க என்று கேட்க, அதற்கு மூன்று பேரும் மூன்று பதில் சொல்ல கோபி மற்றும் ராமமூர்த்திக்கு சந்தேகம் வருகிறது. இதனால் வீட்டில் எல்லோரும் இவர்களிடம் துருவி துருவி கேள்வி கேட்க, அதற்கு பாக்கியா ரெஸ்டாரண்டுக்கு போயிட்டு அப்புறம் ஒரு இடத்துக்கு போவதாக சொல்கிறார்.

அதற்கு கோபி அங்கே எதுக்கு செழியனை கூட்டிட்டு போறீங்க என்று கேட்க அதற்கு எழில் ஒரு விளம்பர ஏஜென்சிக்கு போக போறோம் அங்கு செழியன் சில ஐடியா கொடுக்கிறதா சொன்னான் அதுக்காக கூட்டிட்டு போறோம் என்று சமாளிக்கிறார். அதற்கு ராமமூர்த்தி அதான் சொல்றாங்கல்ல போயிட்டு வரட்டும் என்று சொல்ல, இவர்கள் வெளியே கிளம்பி வருகிறார்கள். ஆனால் வீட்டை விட்டு வெளியே வந்ததும் செழியன் எங்கே போறோம் என்று கேள்வி மேலே கேள்வி கேட்டுக் கொண்டு வருகிறார்.

மறுபக்கத்தில் மரியம் ஜெனியை சர்ச்சுக்கு போலாம் என்று கிளம்ப சொல்ல அதற்கு ஜோசப் என்ன திடீர்னு சர்ச்சுக்கு போறீங்க என்று கேட்க அதற்கு மரியம் சர்ச்சுக்கு போனோம்னு தோணுச்சு அதனால போகிறோம். நாங்க எங்க போனாலும் உங்க கிட்ட அனுமதி கேட்டு வாங்கிட்டு தான் போகணுமா என்று கோபப்பட பிறகு அமைதியான ஜோசப் வேணும்னா நான் டிரா பண்ணட்டுமா? என்று கேட்க அதற்கு மரியம் வேண்டாம் என்று கிளம்புகின்றனர்.

பிறகு மரியமும் ஜெனியும் ஒரு வீட்டிற்கு வந்து இறந்த ஜெனி நம்ம சர்ச்சுக்கு தானே போறேன்னு சொன்னீங்க இப்ப எதுக்கு இங்க வந்திருக்கோம் என்று கேட்க, அதற்கு மரியம் இது கவிதா வீடு இங்கு ஒரு சின்ன பிரச்சனை அதை பத்தி பேசிட்டு போகலாம் என்று சமாளிக்கிறார். அடுத்து பாக்யாவுக்கு போன் போட்டு நாங்க இங்க வந்துட்டோம் நீங்க கிளம்பிட்டீங்களா? என்று கேட்க அதற்கு பாக்யா இன்னும் அஞ்சு நிமிஷத்துல வந்துருவோம் என்று சொல்கிறார்.

அந்த வீட்டிற்கு பாக்யா செழியனோடு வந்ததும் செழியன் எங்க வந்திருக்கோம்? நீங்க ஒரு ஆட் ஏஜென்சிக்கு போறோம்னு சொன்னீங்க இங்க ஒரு போர்டு கூட இல்லையே என்று கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க அதற்கு எழிலும் பாக்கியாவும் செழியனை திட்டுகின்றனர். பிறகு ஜெனி ஒரு ரூமுக்கு சென்று குழந்தைக்கு பால் கொடுப்பதற்காக போக அங்கு செழியனையும் உள்ளே தள்ளி கதவை பூட்டி விடுகிறார்கள். பிறகு வெளியே நின்றுபடியே மரியம் எல்லாம் நல்லபடியாக நடக்குமா? என்று கேட்டு கொண்டிருக்க அந்த நேரத்தில் ரூமுக்குள் செழியன் மற்றும் ஜெனி இருவரும் ஒருவருக்கு ஒருவர் பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+