பாக்கியலட்சுமி: புது எழில் வந்ததும் பாக்யாவுக்கு வந்த குட் நியூஸ்.. ஈஸ்வரியால் அல்லல்படும் கோபி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மே 22ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் கோபியோடு ராதிகா வீட்டிற்கு வந்து ஈஸ்வரி போடும் நாடகத்தை பார்த்து ராதிகா மற்றும் அவருடைய அம்மா கமலா கோபத்தில் இருக்கின்றனர்.
இந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் கோபி வீட்டில் ஈஸ்வரி கோபமாக உட்கார்ந்து இருக்க ஜாக்கிங் போயிட்டு வரும் கோபி வெளியில் ஒரே வெயில் என்று புலம்பி கொண்டே வந்து அம்மா பக்கத்தில் அமர்கிறார். அப்போது அங்கு வரும் ராதிகாவின் அம்மா இருவருக்கும் காபியை நீட்ட ஈஸ்வரி எனக்கு வேண்டாம் என்று சொன்னதும் ஏம்மா உங்களுக்கு காபி குடிக்கலைன்னா தலைவலி வருமே என்று கோபி கேட்கிறார்.

அதற்கு ஈஸ்வரி ஏற்கனவே வந்துட்டு ஒரு மணி நேரமா காபி கேட்டுட்டே இருக்கேன். யாருமே கண்டுக்கல என்று கோபமாக புகார் சொல்கிறார். உடனே கமலா உங்க அம்மா இன்ஸ்டன்ட் காபி குடிக்க மாட்டாங்க பில்டர் காபி போட நேரம் ஆகிட்டு என்று சமாளிக்கிறார். அப்போ ராதிகா அங்க வர அவரை ஈஸ்வரி திட்டுகிறார். அடுத்ததாக எழில் தயாரிப்பாளரிடம் கதை சொல்லிவிட்டு வெளியே வரும் போது அங்கு வாசலில் பாக்கியா காத்திருக்கிறார்.
அப்போது எழில் என்ன ஆச்சும்மா இங்க நிற்கிற என்று கேட்க, அதற்கு பாக்கியா எனக்கு பயமா இருந்துச்சு அதான் இங்கே வந்து இருக்கிறேன் என்று சொல்கிறார். அதோடு சரி உள்ளே என்ன நடந்துச்சு அதை சொல்லு என்று கேட்க எல்லாம் ஓகே இன்னும் ரெண்டு மாசத்துல படத்தை ஸ்டார்ட் பண்ணிடலாம் என்று சொல்லி இருக்காங்க என்று எழில் சொல்கிறார்.
இதனால் பாக்யா ரொம்பவே சந்தோஷப்பட அதற்கு எழில் நீ கிடைச்சதுக்கு நான் ரொம்பவே கொடுத்து வச்சிருக்கேன் என்று அம்மாவை கட்டிப்பிடித்து தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்துகிறார். பிறகு வா வீட்டுக்கு போகலாம் அமிர்தா கிட்ட நீயே வந்து இந்த விஷயத்தை சொல்லு அவ ரொம்ப சந்தோஷப்படுவா என்று பாக்கியா கூப்பிட்டு போகிறார்.
அடுத்த கட்டத்தில் கோபியை கூட்டிக்கொண்டு ராதிகா தனியாக ரூமிற்குள் செல்கிறார். அங்கே கமலா ஏற்கனவே காத்திருக்க இருவரும் ஈஸ்வரி செய்யும் அட்டகாசங்களை சொல்லி வரிசையாக புகார்களை சொல்லிக் கொண்டு இருக்கின்றனர். அப்போது கமலா புள்ளதாட்சின்னு கூட பார்க்காமல் எப்ப பார்த்தாலும் கருவை கலைச்சிடுன்னு சொல்றாங்க.. இதெல்லாம் நியாயமா இருக்கா? பாலை கொட்டிட்டு எங்களை துடைக்க சொல்றாங்க என்று ஒவ்வொன்றும் சொல்ல அதற்கு கோபி என்ன பதில் என்று சொல்ல முடியாமல் தவித்து நிற்கிறார்.
பிறகு அம்மா எதையாவது கொட்டிட்டா என்னை கூப்பிடுங்க நான் வந்து துடைக்கிறேன் என்று சொல்லிவிட்டு ரூமை விட்டு வெளியே வர அங்கு ஈஸ்வரி வாசலில் நிற்கிறார். இவர்கள் பேசியதை எல்லாம் அம்மா கேட்டிருப்பாரோ என்ற பயத்திலேயே அம்மா பக்கத்தில் கோபி வரும்போது ஈஸ்வரி மயக்கம் போட்டு கீழே விழுகிறார். எல்லோரும் பதற கோபி தண்ணீர் தெளித்து தூக்கி ஹாலில் உட்கார வைக்கிறார்.
பிறகு ஹாஸ்பிடல் போகலாம் என்று கூப்பிட ஈஸ்வரி வேண்டாம் என்று சமாளிக்கிறார். நான் இன்னைக்கு காலையில் இருந்து காபியும் குடிக்கல சாப்பிடவும் இல்லை அதனால லோ சுகர் என்று சொல்ல, ஏன் அம்மாவுக்கு சாப்பாடு கொடுக்கல என்று கோபி கேட்க அதற்கு கமலா நாம 9 மணிக்கு தானே எல்லாரும் சாப்பிடுவோம். நாமளே இன்னும் சாப்பிடலையே என்று கமலா சொல்ல அதற்கு கோபி அம்மா 8.30க்கு சாப்பிட்டு மாத்திரை போட்டு இருக்கணுமே என்று கேட்கிறார்.
அதற்கு கமலா அது எப்படி எனக்கு தெரியும் என்று கேட்கிறார். அதற்கு கோபி இது ராதிகாவுக்கு நல்லா தெரியும் என்று கோபப்பட கமலா அவளுக்கே அவளை பாத்துக்க முடியல இதுல உங்க அம்மாவா எப்படி அவ பாத்துக்குவா என்று நக்கல் செய்ய இதனால் கடுப்பாகும் கோபி நானே சமைச்சு வருகிறேன் என்று கிச்சனுக்கு போகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications