பாக்கியலட்சுமி: ஆட்டம் போட்ட ஈஸ்வரிக்கு ஆப்பு வைத்த ராதிகா.. பாக்யா செய்த சமாதானம்.. தவிக்கும் கோபி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மே 24ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம். அதில் ராதிகா வீட்டில் ஈஸ்வரி பிரச்சனைகளை செய்து கொண்டு இருக்க கோபமான ராதிகா கோபி இடம் உங்க அம்மா நாளைக்கு வீட்டை விட்டு வெளியே போகணும் என்று கண்டிஷன் போடுகிறார்.
இந்த நிலையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாக்யா வீட்டில் எல்லோரும் ஒன்றாக கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது ஜெனி நான் ஏதாவது வேலை செய்யட்டுமா? என்று கேட்டு பீன்ஸ் கட் பண்ண தெரியாமல் திணறுவதை பார்த்து செல்வி கலாய்க்க ஜெனி கோபப்பட்டு ரூம்க்கு போய்விடுகிறார்.

மறுபக்கத்தில் ராதிகாவிடம் எழில் ஈஸ்வரிக்கு போன் செய்து பேசியது பற்றி கமலா சொல்லிக் கொண்டிருக்க அப்போது அங்கு வந்த ஈஸ்வரி நான் பேசுவதை ஒட்டு கேட்டு உன் பொண்ணு கிட்ட அப்படியே சொல்லிட்டு இருக்கியா? என்று பிரச்சனையை கூட்டுகிறார். அதற்கு கமலா நான் ஒன்னும் ஒட்டு கேட்டு பேசல நீங்க பேசுனதே ஊருக்கே கேட்கிற மாதிரி தான் இருந்துச்சு என்று சொல்ல ஈஸ்வரிக்கும் கமலாவுக்கும் வாக்குவாதம் உருவாகிறது.
இதை பார்த்த கோபி அங்கு வந்துவிட ஈஸ்வரி இப்படித்தான் என்கிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருக்காங்க, ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்காங்க என்று போட்டுக் கொடுக்கிறார்.அதற்கு கமலா உங்கம்மா காலைல மயங்கி விழல.. நடிச்சாங்க என்று சொல்ல கோபி என்ன அத்தை என்ன பேசுறீங்க? ஏன் இப்படி இந்த அம்மாவை போட்டு டார்ச்சர் பண்றீங்க? என்று கோபப்படுகிறார்.
மறுபக்கத்தில் செல்வி எழிலிடம் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்க ஜெனி அதெல்லாம் கொடுக்காத எழில் என்று சொல்கிறார். அதற்கு செல்வி ஏன் நான் பெரிய நடிகை ஆகிட்டா இந்த வீட்டுக்கு வேலைக்கு வர மாட்டேன்னு பாக்குறீங்களா? என்று கேள்வி கேட்கிறார். அதோடு நான் ஸ்கூல் படிக்கும்போதே கட்டபொம்மன் வேஷம் எல்லாம் போட்டு நடிச்சி இருக்கிறேன் என்று நடித்துக் காட்டிக் கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் மானங்கெட்டவனே என்று சொல்லித் திரும்ப செழியன் வந்து நிற்க ஷாக் ஆகிறார். பிறகு செழியனிடம் எழில் தயாரிப்பாளரிடம் கதை சொல்லி ஓகே ஆகி இருக்கிறது என்று சொல்ல, செழியன் எழிலுக்கு ஸ்வீட் ஊட்டி விட்டு வாழ்த்து சொல்கிறார். அந்த நேரத்தில் ராமமூர்த்தி சத்தம் கேட்டு வெளியே வர செழியன் உடம்பு பரவா இல்லையா என்று விசாரிக்கிறார். அதற்கு ராமமூர்த்தி அமிர்தா நல்ல பார்த்துகிட்டா என்று சொல்ல, ஜெனி அப்போ நான் உங்களை பாத்துக்கலையா தாத்தா என்று கேள்வி கேட்கிறார்.
பிறகு பாக்யா எல்லோரையும் கூப்பிடும் போது பாப்பா அழுகிற மாதிரி இருக்கு நான் போறேன் என்று அங்கிருந்து ஜெனி தனியா போய் விடுகிறார். பிறகு பாக்கியா ஜெனிக்கு சாப்பாடு கொண்டு கொடுத்து நீ குழந்தையை வச்சிட்டு இருக்குற நீயே சொல்ற குழந்தை உன்னை நல்லா தூங்க விடல என்று அதனால நீ நல்லா ரெஸ்ட் எடுக்கணும்னு தான் உனக்கு எந்த வேலையும் சொல்றது கிடையாது.
ரெஸ்டாரண்ட் விஷயமா ஏதாவது வேலை இருந்தா உன்கிட்ட தானே வந்து சொல்றோம். உனக்கு அந்த வேலை வரும்போது கண்டிப்பா உன்கிட்ட தான் சொல்லுவேன் என்று சமாதானம் செய்கிறார். மறுபக்கத்தில் ராதிகா ரூமுக்குள் கோபமாக இருக்க கோபி உள்ளே வந்ததும் உங்க அம்மா சொன்னதை மட்டும் கேட்டுட்டு என்கிட்ட சத்தம் போடுறீங்க... நாளைக்கு காலையில் உங்க அம்மா இந்த வீட்டில் இருக்கக் கூடாது என்று சொல்ல கோபி ஷாக் ஆகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications