ஈஸ்வரியால் வீட்டை விட்டு கிளம்பும் கமலா.. ராதிகா கொடுத்த அதிர்ச்சி! பாக்யாவுக்கு வந்த புது பிரச்சனை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மே 25ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் ராதிகா ஈஸ்வரியை விட்டு துரத்த வேண்டும் என்று நினைத்த நிலையில் கமலா தான் வீட்டை விட்டு போவதாக அதிர்ச்சி கொடுக்கிறார். மறுபக்கத்தில் பாக்கியாவிற்கு பிசினஸில் புது பிரச்சனை வருகிறது.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ராதிகாவும் கோபியும் சண்டை போட்டுக் கொண்டிருக்க அங்கே வந்த கமலா நானே வீட்டை விட்டு போகிறேன் என்று பெட்டியோடு கிளம்புகிறார். அதற்கு ராதிகா எங்க அம்மா எங்க கூட தான் இருக்கணும் என்று சொல்ல, கோபி எங்க அம்மாவும் என் கூட தான் இருக்கணும் என்று சொல்கிறார். அப்போது ராதிகா கமலாவிடம் என்னை விட்டுட்டு போகாதம்மா என்று சொல்ல,

அதற்கு கமலா நான் மயூவை பார்க்கத்தான் இங்கே வந்தேன். ஆனால் இங்கு இருக்கிற சூழ்நிலை எனக்கு சரின்னு படல. அதனால நான் உங்க அண்ணன் கூடவே போயிருவேன். அங்க கூட நிம்மதியா இருந்தேன் என்று சொல்ல ராதிகா கோபியிடம் கோபப்படுகிறார். ஆனாலும் கோபி தன்னுடைய அம்மா தன்னோடு தான் இருப்பார் என்று சொல்லிவிட்டு கோபமாக வெளியே வருகிறார்.
பிறகு சிறிது நேரம் யோசித்து விட்டு ஈஸ்வரியிடம் வந்து பாசமாக பேச அவர் ராதிகா என்னை வீட்டை விட்டு போக சொல்றாளா? என்று கேட்க கோபி அப்படியெல்லாம் இல்லம்மா என்று சமாளிக்க அதற்கு ஈஸ்வரி, பக்கத்து ரூம்ல பேசுறது எனக்கு கேட்காதுன்னு நினைச்சியா? நீங்க பேசுனது எல்லாம் நான் கேட்டுட்டு தான் இருந்தேன் என்று வருத்தப்படுகிறார். அதற்கு கோபி நான் உன்னை நல்லா பாத்துக்குவேன் அம்மா..
நீங்க இங்க மகாராணி போல இருக்கணும். எனக்காக நீங்க இங்க வந்து இருக்கீங்க நீங்க எந்த சூழ்நிலையிலும் கஷ்டப்படுற மாதிரி நடந்திருக்க மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து கமலா தனக்கு தரையில் படுத்ததால் கால் வலி என்று பேசிக் கொண்டிருக்க ராதிகா கமலாவையும் மயூவையும் தன்னோடு படுக்க சொல்லி, கோபியை சோபாவில் தூங்குமாறு சொல்லி கதவை பூட்டி கொள்கிறார்.
கோபி கதவை தட்டி பார்த்து ராதிகா கதவை திறக்காததால் வேறு வழி இல்லாமல் சோபாவில் படுத்துக்கொண்டு தன்னுடைய நிலையை நினைத்து வருத்தப்படுகிறார். அதை தொடர்ந்து பாக்யா ரெஸ்டாரண்டுக்கு அருகில் பார் திறப்பதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்க செல்வியும் பாக்கியாவும் அதை பார்த்து கோபப்படுகின்றனர்.
அந்த நேரத்தில் பார் ஓனர் பாக்யாவின் கடைக்கு வருகிறார். அவர் பாக்யாவின் கடையை பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருக்க பாக்யா அவரிடம் இங்கு எல்லாரும் பெண்கள்தான் வேலை செய்கிறார்கள். அதனால் நீங்கள் பார் வைப்பது எங்களது பயமாக இருக்கிறது. உங்கள் கடையை வேற இடத்தில் வைக்க முடியுமா? என்று கேட்க, அதற்கு பார் ஓனர் அப்படி என்றால் உங்கள் கடையை என்னிடம் தாங்க நான் வியாபாரம் செய்கிறேன் என்று சொல்ல பாக்கியா ஷாக் ஆகுகிறார்.
பிறகு அடுத்த கட்டத்தில் பாக்யாவிடம் செல்வி ஜெனியும் அமிர்தாவும் சரியா பேசிக் கொள்றது இல்ல. ஏதோ சரி இல்லை என்று எனக்கு தோணுது கொஞ்சம் பாருக்கா என்று சொல்லி விட்டு கிளம்பி விடுகிறார். அதை அதை தொடர்ந்து அமிர்தாவிடம் பாக்யா இதை பற்றி பேச அமிர்தா நான் தாத்தாவுக்கு சாப்பாடு கொடுக்கிறது ஜெனிக்கு பிடிக்கல.
அதனால அவங்களே வேலை செய்யட்டும் என்று விட்டுவிட்டேன் என்று சொல்ல, அதற்கு பாக்கியா ஜெனி ரொம்ப கஷ்டப்பட்டுட்டா அவ இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா பழைய நிலைமைக்கு வர.. ஜெனி நிறைய விஷயத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறா அதனால நாம தான் கொஞ்சம் பொறுமையா போகணும் என்று அட்வைஸ் செய்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications