அல்லல்படும் ஈஸ்வரியிடம் பாக்யா கேட்ட கேள்வி! கடைசியில் நடந்தது தான் டுவிஸ்ட்! கைக்கு வந்த இன்விடேஷன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மே 27ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். கோபி வீட்டில் ராதிகா மற்றும் கமலா செய்யும் செயல்களை பற்றி ஈஸ்வரி ராமமூர்த்தியிடம் புலம்ப அதைக் கேட்டு பாக்கியா வருத்தமடைகிறார். மறுபக்கத்தில் பாக்கியாவின் ஹோட்டலுக்கு புது பிரச்சனையும் வருகிறது.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாக்யா அமிர்தாவிடம் ஜெனியை கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி நடந்துக்கோ.. அவா ஏற்கனவே ரொம்ப கஷ்டப்பட்டுட்டா இப்போ அந்த கவலையிலிருந்து வெளியே வந்துட்டு இருக்கா என்று சொல்ல நான் ஜெனியை என்னைக்குமே ஹட் பண்ண மாட்டேன் என்று சொல்கிறார். பிறகு எழிலும் அங்கு வந்துவிட என்ன மாமியார் மருமகள் மீட்டிங்கா என்று கேட்க, அதற்கு பாக்யா, ஆமா உனக்கு என்னடா என்று கிண்டல் செய்கிறார்.

Baakiyalakshmi Serial May 27th promo and episode full update

பிறகு எழில் அமிர்தா ரூமுக்கு போய்விட அங்கு அமிர்தாவின் கைகளைப் பிடித்து கொண்டு தன்னுடைய ஆசை கனவு குறித்து பேசுகிறார். நான் ஒரு நல்ல படத்தை டைரக்ட் பண்ணி விருது வாங்கணும்... அம்மா எனக்காக பலமுறை கஷ்டப்பட்டு இருக்காங்க. நம்ம கல்யாணத்துக்காக வீட்டில் எல்லாரையும் எதிர்த்து நின்னாங்க. அவங்களை சந்தோஷப்படுத்தி பாக்கணும் என்பது தான் என்னுடைய ஆசையாக இருக்கிறது.

நான் விருது வாங்கும் போது அம்மாவை மேடையில் ஏத்தி அவங்களை சந்தோஷப்பட வைக்கணும் என்று சொல்லிக்கொண்டே இருக்க... அமிர்தா பார்த்துக் கொண்டே இருக்கிறார். அப்போது எழில் நான் அம்மாவை பற்றியே பேசிகிட்டு இருக்கேன்னு உனக்கு வருத்தமா இருக்கா என்று கேட்க, அதற்கு அமிர்தா எனக்கு அப்படி எல்லாம் நான் ஒரு நாளும் நினைச்சது கிடையாது என்று சொல்ல எனக்கு நல்ல அம்மாவும் நல்ல மனைவியும் கிடைச்சிருக்காங்க என்று எழில் சந்தோஷப்படுகிறார்.

அதற்குப் பிறகு ஈஸ்வரி எழுந்து வர கோபி சோபாவில் படுக்கும் விஷயம் தெரிய வருகிறது. உடனே நான் போய் ராதிகா கிட்ட இதை பத்தி பேச போறேன் என்று சொல்ல அதற்கு கோபி அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் என்று சொல்கிறார். பிறகு உங்களுக்கு நான் காபி போட்டு தரேன் என்று கிச்சனுக்கு போய் காபி போட்டு கொண்டு வந்து கொடுக்க, ஒரு வாய் குடித்துப் பார்த்த ஈஸ்வரியால் அதற்கு மேலே குடிக்க முடியாமல் போய்விடுகிறது.

உடனே ஈஸ்வரி கோபியை நீ வாக்கிங் போ நான் குடித்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு கோபி கிளம்பியதும் காப்பியை கொண்டு போய் கிச்சனில் ஊற்றி விடுகிறார். அதை ராதிகாவும் கமலாவும் பார்த்துவிட ஈஸ்வரி என்ன பாக்குறீங்க தள்ளுங்க என்று சத்தம் போட்டுவிட்டு வாக்கிங் போகிறார். அப்போது ராமமூர்த்தியும், பாக்கியாவும் வாக்கிங் வந்து கொண்டு இருக்க ஈஸ்வரி அங்கு வந்ததும் பாக்கியா நீங்க பேசிட்டு இருங்க நான் வருகிறேன் என்று சொல்லி அங்கிருந்து கிளம்பி போய்விடுகிறார்.

பாக்கியா போனதும், ஈஸ்வரி ராமமூர்த்தி இடம் கோபி வீட்டில் நடப்பது எல்லாம் சொல்லி புலம்புகிறார். எனக்கு நாக்கே செத்துப் போச்சு என்று சொல்ல அப்போ அங்கிருந்து கிளம்பி வந்துவிட வேண்டியது தானே என்று ராமமூர்த்தி சொன்னதும் ஈஸ்வரி அப்படியெல்லாம் வர முடியாது. கமலாவை அங்கிருந்து துரத்தனும் அதற்குப் பிறகு தான் வருவேன் என்று சொல்கிறார்.

பிறகு ஈஸ்வரி அங்கிருந்து கிளம்பும்போது பாக்யாவிடம் ராமமூர்த்தி அவளுக்கு சாப்பாடு சரியில்ல அதான் புலம்பிட்டு போறா என்று சொல்ல, பாக்கியா ஈஸ்வரியிடம் உங்களுக்கு தினமும் சாப்பாடு கொண்டு வந்து தரவா என்று கேட்க அதற்கு ஈஸ்வரி நான் ஒன்னும் தெருவில் இல்லை. என் புள்ளை வீட்லதான் இருக்கேன் என்று கோபப்பட்டு பேசிவிட்டு போய்விடுகிறார்.

அடுத்தது பாக்கியா ரெஸ்டாரண்டில் இருக்கும்போது பக்கத்து பார் ஓனர் வந்து தர்பூசணி பழ ஜூஸ் குடித்துவிட்டு பார் திறப்பு விழாவுக்காக பத்திரிக்கை வைத்துவிட்டு போகிறார். அப்போது செல்வி ஜூஸ் குடித்ததற்கு பணத்தை கேட்க அதற்கு பணம் கொடுக்க மனசே இல்லாமல் பார் ஓனர் பணத்தை கொடுத்துவிட்டு போக அவர் போனதும் கடையில் வேலை செய்பவர்கள் எல்லாரும் இங்க பார் வந்தால் சரிப்பட்டு வராது, எங்க வீட்ல வேலைக்கு கூட அனுப்ப மாட்டாங்க.

இந்த பார் ஓனர் அவர் குடிச்ச ஜூஸுக்கே பணம் கொடுக்காமல் போக இருக்கார். அப்புறம் அவர் பாருக்கு வந்து குடிக்க வர்றவங்க இங்க வந்து பிரச்சனை பண்ண தானே செய்வாங்க என்று எல்லோரும் பேசிக் கொண்டிருக்க பாக்கியா அதையெல்லாம் பார்த்துக்கலாம் என்று சமாதானம் செய்கிறார். அதோடு இன்விடேஷனை கையில் வைத்துக்கொண்டு யோசித்துக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+