பாக்கியலட்சுமி: நிதிஷ் நல்லவன் இல்ல! சுதாகர் குடும்பத்தை பற்றி கோபி சொன்ன ரகசியம்.. பாக்யா எடுத்த புது அவதாரம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் இனியா சுதாகர் மற்றும் நிதிஷ் பற்றிய விஷயங்களை கோபி பாக்கியாவிடம் சொல்லி விடுகிறார். இதனால் பாக்கியா கடும் கோபத்தில் இருக்கிறார். இனி என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
பாக்கியலட்சுமி சீரியலில் ஒவ்வொரு வாரமும் பாக்யாவிற்கு புது புது பிரச்சனைகள் வருகிறது ஆனாலும் அதில் துவண்டு போகாமல் போட்டி போட்டு கில்லியாக ஜெயித்து விடுகிறார். இதனாலயே பாக்கியலட்சுமி சீரியல் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. கடந்த வாரத்தில் தான் பாக்யாவிற்கு கவுன்சிலர் ஒருவர் தொந்தரவு கொடுத்திருந்தார் அவரிடம் இருந்து தன்னுடைய மகனை போராடி மீட்டு கூட்டிக்கொண்டு வந்திருந்தார்.

பாக்யாவின் போன வார பிரச்சனை
கவுன்சிலரிடம் சண்டை போட்டு ஜெயிலுக்கு போன செழியனுக்காக பாக்கியா மினிஸ்டர் வரைக்கும் சந்தித்து அவர்களுக்கு ஒன்றரை மணி நேரத்தில் பிரியாணி விருந்து வைத்து அதிசயம் செய்திருந்தார். ஆனால் இப்போது இனியாவால் பிரச்சனை வந்து இருக்கிறது. ஏற்கனவே இனியாவிற்காக தான் தன்னுடைய இரண்டு ரெஸ்டாரண்டையும் பாக்கியா சுதாகர் குடும்பத்திற்கு கொடுத்திருந்தார்.
இனியா சொன்ன விஷயம்
அதற்கு சொற்பமான பணம் கிடைத்திருந்தாலும் தன்னுடைய மகள் வாழ்க்கைக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் என்னுடைய இன்னொரு முகத்தை பார்ப்பீங்க என்று ஒவ்வொரு இடத்திலும் பாக்கியா சொல்லிக் கொண்டே இருந்தார். இதனால் இதுதான் நடக்கும் என்று ஆரம்பத்திலேயே நமக்கு தெரிந்திருந்தாலும் இப்போது நாம் எதிர்பார்த்தபடியே சுதாகர் குடும்பத்தின் சுயரூபம் இனியாவிற்கு தெரிய வந்திருக்கிறது. ஆகாஷிடம் இனியா பேசியதை பார்த்து நிதிஷ் சைக்கோவாக மாறி இருக்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியல் ப்ரோமோ
அதோடு தன்னுடைய வாழ்க்கை இந்த நிலைமைக்கு ஆனதற்கு கோபி தான் காரணம் என்று கோபியிடமே தன்னுடைய குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து இனியா சொல்லி இருக்கிறார். ஆனால் பாக்கியாவிடம் இது பற்றி சொல்ல வேண்டாம் என்று இனியா சொல்லியிருந்த நிலையில் அடுத்த வாரத்திற்கு என்று வெளியான ப்ரோமோவில் கோபி மொத்த உண்மைகளையும் பாக்கியாவிடம் சொல்கிறார். இதனால் பாக்கியா இனி சுதாகர் குடும்பத்திடம் நேருக்கு நேராக மோதுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாக்கியலட்சுமி சீரியலின் முடிவு
ஏற்கனவே பாக்கியா சுதாகர் பற்றி சொன்ன விஷயத்தை கோபி உட்பட குடும்பத்தில் யாரும் நம்பவில்லை. ஆனால் இப்போது கோபியே சுதாகரின் சுய ரூபத்தை தெரிந்து கொண்டதால் பாக்கியாவிற்கு பக்கபலமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததும் இந்த சீரியல் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பும் தகவலும் வெளியாகி இருக்கிறது. ஆனாலும் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம். காரணம் மூன்று மாதங்களுக்கு முன்பே இந்த சீரியல் முடிவுக்கு வரப்போகிறது என்று இந்த சீரியலில் நடிப்பவர்கள் சிலர் வதந்திகளை பரப்பி விட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications